தருணி சச்தேவ்
தருணி சச்தேவ் (Taruni Sachdev) 1998 மே 14 அன்று பிறந்த [2] இவர் ஒரு இந்திய விளம்பர நடிகை மற்றும் குழந்தை நட்சத்திரமாவார், சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் அவரது பணிக்காக நன்கு அறியப்பட்டவர். ரஸ்னா விளம்பரங்களில் மற்றும் பாலிவுட் திரைப்படமான பா (2009), படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்தார். வெள்ளிநட்சத்திரம் என்றப் படத்தில் அம்முக்குட்டியாக நடித்ததற்காக மலையாள பார்வையாளர்களிடையே பிரபலமாக உள்ளார்.
தருணி சச்தேவ் | |
---|---|
பிறப்பு | தருணி சச்தேவ் 14 மே 1998 மும்பை, இந்தியா |
இறப்பு | 14 மே 2012[1] ஜோம்சம், நேபாளம் | (அகவை 14)
இறப்பிற்கான காரணம் | விமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்கள் |
மற்ற பெயர்கள் | வாயாடிப் பெண் |
பணி | விளம்பர நடிகை, நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003 முதல் 2012 வரை |
பெற்றோர் | ஹரீஷ் சச்தேவ் கீதா சச்தேவ் |
சுயசரிதை
தொகுசொந்த வாழ்க்கை
தொகுதருணி சச்தேவ் மும்பை நகரைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரான,[2] ஹரீஷ் சச்தேவ் மற்றும் கீதா சச்தேவ் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[1] மும்பை, பாந்த்ரா நகரில் பாய் அவபாய் பிரேம்ஜி பெட்டிட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.[3] தருணியின் தாயார் மும்பை ராதா கோபிநாத் கோவிலின் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் பக்தராவார். (ஹரே கிருஷ்ணா இயக்கம்), தருனி கோயிலின் திருவிழாக்களிலும் நாடகங்களிலும் அரங்கேற்றம் செய்துள்ளார்..
தொழில்
தொகுரஸ்னா போன்ற பல தொலைக்காட்சி விளம்பரங்களில் தருணி நடித்தார், மேலும் கோல்கேட் பற்பசை, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் கம்யூனிகேசன், எல்.ஜி, காஃபி பைட், கோல்ட் வின்னர், சக்தி மாசாலா மற்றும் ஸ்டார் பிளஸ் டிரீம்ஸ் ஆகிய பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் தருணி தோன்றியுள்ளார். திரைப்படத்தில் மிகவும் பரபரப்பான நடிக்கும் குழந்தைகளில் ஒருவராகவும், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் வித்யா பாலன் ஆகியோருடன் பா என்ற இந்திப் படத்திலும் (2009) நடித்துள்ளார். இவர் மலையாளப் படங்களான வெள்ளி நட்சத்திரம் (2004) மற்ரும் சத்யம் (2004) என இரு படங்களில் நடித்துள்ளார். அந்த நேரத்தில் அதிக ஊதியம் பெறும் குழந்தை நட்சத்திரமாக இருந்தார். சன் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான தமிழ்த் தொடரன மெட்டி ஒலி என்ற நாடகத்தில் சீதாவின் மகள் மாமினி குட்டி வேடத்தில் 712 வத் அத்தியாயத்தில் இருந்து இறுதி வரை நடித்துள்ளார். இந்தித் தொடரான மூன்று முடிச்சு என்பதில் துர்காராணி வேடத்தில் நடித்துள்ளார். இவருடைய இறப்பிற்கு பின்னர் இந்தத் தொடரில் ருஹானிக்கா தவான் நடித்துள்ளார்
இறப்பு
தொகுஅவருடைய பிறநத நாளான 2012 மே 14 அன்று நேபாளத்தில் நடந்த ஒரு விமான விபத்தில் தருணி சச்தேவ் இறாந்தார்.[4] தருணியின் தாயார் கீதா சாக்தேவும் அவருடன் சேர்ந்து விமானத்தில் இறந்தார்.[5][6][7] நேபாள பயணத்திற்கு முன் 2012 மே 11 அன்று அவருடைய நண்பர்கள் அனைவரையும் கட்டிப்பிடித்து, "உங்களை சந்திப்பது இதுவே கடைசி முறை" எனக் கூறியுள்ளார்.[8] தருணியின் நண்பர்கள் இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொண்டனர், ஏனெனில் இதற்கு முன்னர் அவர் விமானத்தில் பறக்கும் போதெல்லாம் யாரையும் கட்டிப்பிடிப்பதில்லை. விமானம் பறப்பதற்கு முன் அவரது சிறந்த நண்பரிடம் அவர் அனுப்பிய ஒரு கடைசி செய்தி "விமானம் நொறுங்கினால் என்ன நடக்கும்" என்று கேட்டார், தொடர்ந்து "நான் உன்னை நேசிக்கிறேன்" என்ற செய்தியுடன்.[8] அந்த விமானத்தில் இறக்க அவரது விதி எழுதப்பட்டதாக அவரது நண்பர்கள் நம்புகிறார்கள். தந்தை மற்றும் மகன்களான, அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் அவரது மரணத்தின் மீது தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. (15 May 2012) Paa child actor Taruni Sachdev dies in plane crash பரணிடப்பட்டது 2013-07-09 at the வந்தவழி இயந்திரம் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா Retrieved 17 May 2012.
- ↑ 2.0 2.1 India Today Online (16 May 2012). "Taruni Sachdev died on her 14th birthday". இந்தியா டுடே (New Delhi). http://indiatoday.intoday.in/story/taruni-sachdev-child-actor-death-plane-crash/1/188971.html. பார்த்த நாள்: 17 May 2012.
- ↑ Bhandary, Shreya (16 May 2012). "Nepal plane crash: Rasna girl Taruni Sachdev's classmates shattered". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2012-05-16/mumbai/31725773_1_nepal-plane-crash-prayer-meeting-classmates. பார்த்த நாள்: 17 May 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Salve, Sahil (17 May 2012). "Photos: Paa child artist Taruni Sachdev cremated". Mumbai: ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 18 May 2012.
- ↑ "Child actor Taruni Sachdev of 'Paa' fame, among Nepal crash victims". இந்தியா டுடே. 15 May 2012. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.
- ↑ "Rasna girl Taruni Sachdev among dead in Nepal air crash". Kathmandu: தி டெக்கன் குரோனிக்கள். 14 May 2012 இம் மூலத்தில் இருந்து 21 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AqdNCiYC?url=http://www.deccanchronicle.com/channels/world/asia/rasna-girl-taruni-sachdev-among-dead-nepal-air-crash-610. பார்த்த நாள்: 16 May 2012.
- ↑ IANS (17 May 2012). "'Paa' child artist Taruni Sachdev cremated". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Paa-child-artist-Taruni-Sachdev-cremated/articleshow/13205751.cms. பார்த்த நாள்: 17 May 2012.
- ↑ 8.0 8.1 "Taruni said all her goodbyes before leaving for Nepal". Mid-day.com. 17 May 2012 இம் மூலத்தில் இருந்து 29 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130929165858/http://movies.ndtv.com/bollywood/taruni-said-all-her-goodbyes-before-leaving-for-nepal-212223. பார்த்த நாள்: 2 March 2013.