தர்மேந்திர யாதவ்
தர்மேந்திர யாதவ் (Dharmendra Yadav)(பிறப்பு 3 பிப்ரவரி 1979) என்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக படவுன் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 16வது மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1][2]
தர்மேந்திர யாதவ் धर्मेन्द्र यादव | |
---|---|
![]() | |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 2009–2019 | |
முன்னவர் | சலீம் இக்பால் செர்வாணி |
பின்வந்தவர் | சங்கமித்ராமவுரியா |
தொகுதி | பதாவுன் |
பதவியில் 2004–2009 | |
முன்னவர் | முலாயம் சிங் யாதவ் |
பின்வந்தவர் | முலாயம் சிங் யாதவ் |
தொகுதி | மைன்புரி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 3 பெப்ரவரி 1979 சைபை, உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | நீலம் யாதவ் (தி. 2010)
|
படித்த கல்வி நிறுவனங்கள் | அலகாபாத் பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
இணையம் | www |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்விதொகு
தர்மேந்திர யாதவ் 3 பிப்ரவரி 1979 அன்று இட்டாவாவில் உள்ள சைபாயில் அபய் ராம் யாதவ் மற்றும் ஜெய் தேவிக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை அபய் ராம் யாதவ் முலாயம் சிங் யாதவின் இளைய சகோதரர் மற்றும் சிவ்பால் சிங் யாதவின் மூத்த சகோதரர் ஆவார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தர்மேந்திராவின் உறவினர். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டம் மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
குடும்பம்தொகு
தர்மேந்திர யாதவ் 12 பிப்ரவரி 2010 அன்று நீலம் யாதவை மணந்தார்.[1][3] இவருக்கு ஒரு சகோதரன் (அனுராக் யாதவ்) மற்றும் இரண்டு சகோதரிகள் (சந்தியா யாதவ் மற்றும் சீலா யாதவ்) உள்ளனர். சீலாவின் மகன் ராகுல் யாதவ், சாது யாதவின் மகளான மருத்துவர் இசா யாதவை மணந்தார்.[4] இவரது சகோதரர் அனுராக் யாதவ் 2017 உபி சட்டமன்றத் தேர்தலில் சரோஜினி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.[5]
அரசியல் வாழ்க்கைதொகு
யாதவ் 2004 இல் 14வது மக்களவைக்கு மைன்புரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ல் 15வது மக்களவைக்கும், 201-இல் 16வது மக்களவைக்கும் பவுடனிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளின் நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.[1] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற 17ஆவது மக்களவைத் தேர்தலில் படவுன் தொகுதியில் சுமார் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சூன் 2022-ல் அசம்கர் இடைத்தேர்தலில் இவர் சுமார் 8,600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
வகித்த பதவிகள்தொகு
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 3 முறை தர்மேந்திர யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[6]
# | முதல் | வரை | பதவி | கட்சி |
---|---|---|---|---|
1. | 2004 | 2009 | 14வது நாடாளுமன்ற உறுப்பினர்மைன்புரி (இடைத்தேர்தல்) எம்.பி (1வது முறை) | சமாஜ்வாதி கட்சி |
2. | 2009 | 2014 | பவுடன், 15வது மக்களவை உறுப்பினர் (2வது முறை). | சமாஜ்வாதி கட்சி |
3. | 2014 | 2019 | 16வது மக்களவை பவுடன் உறுப்பினர்(3வது முறை) | சமாஜ்வாதி கட்சி |
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 1.2 "Dharmendra Yadav". India.gov.in. 9 August 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Badaun Election Result 2019: BJP's Dr Sanghmitra Maurya likely to win with a lead of almost 30000 votes". Times Now. 23 May 2019. 11 July 2019 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Members : Lok Sabha". 164.100.47.193. http://164.100.47.193/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4206&lastls=16.
- ↑ "Mulayam Family Tree: मुलायम सिंह यादव का कुनबा, अखिलेश-शिवपाल से डिंपल-अपर्णा तक, जानें परिवार में और कौन-कौन". Amar Ujala. 4 October 2022.
- ↑ "Anurag Yadav (SP), Constituency: Sarojini Nagar". Myneta.info. 8 October 2022 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Member Profile". Lok Sabha. 1 October 2022 அன்று பார்க்கப்பட்டது.