தவக்களை (இறப்பு: 25 பெப்ரவரி 2017) என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவரது இயற்பெயர் சிட்டிபாபு ஆகும். முந்தானை முடிச்சு படத்தில் நடிக்கும்போது இயக்குநர் பாக்கியராஜால் தவக்களை என பெயர் சூட்டப்பட்டார். இவருடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். 3 அடி உயரம் கொண்டவர் இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்கள் நடித்திருக்கிறார். தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பது மட்டுமன்றி பல படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தெலுங்கில் மோகன்பாபு நடித்த ஒரு படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தமிழில் இறுதியாக வினயன் இயக்கிய 'அற்புதத் தீவு' படத்தில் நடித்திருந்தார். கலைக்குழு மூலமாக தமிழகமெங்கும் மேடை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். சொந்தமாக 'மண்ணில் இந்த காதல்' என்ற படத்தை தயாரித்துள்ளார். அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் தன் 42 வது வயதில் மாரடைப்பால் காலமானார்.[1]

நடித்த திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "நடிகர் தவக்களை மாரடைப்பால் காலமானார்". செய்தி. தி இந்து. 26 பெப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தவக்களை&oldid=3944496" இலிருந்து மீள்விக்கப்பட்டது