தாங்குடு தாரணி தூண்கள்
தாங்குடு தரணி தூண்கள் (Tangut dharani pillars) என்பது 1962 ஆம் ஆண்டில் சீனாவின் ஏபெய் மாகாணத்தின் பாடிங்கில் காணப்பட்ட தாங்குடு எழுத்துக்களில் ஒரு தாரணி-சூத்திரத்தின் உரை பொறிக்கப்பட்டுள்ள இரண்டு கல் தாரணி தூண்களாகும்.1502 ஆம் ஆண்டில் மிங் வம்சத்தின் (1368-1644) நடுப்பகுதியில் தாரணி தூண்கள் அமைக்கப்பட்டன. மேலும் அவை தாங்குடு எழுத்துமுறைகளைப் பயன்படுத்தியதற்கான சமீபத்திய அறியப்பட்ட எடுத்துக்காட்டுகள் கிடைத்துள்ளன. [1] மேற்கு சியா இராச்சியத்தால் (1038–1227) ஆளப்பட்ட பகுதிக்கு வெளியே உள்ள தங்குட் நினைவுச்சின்ன கல்வெட்டுகளுக்கு அவை மிகவும் அரிதான எடுத்துக்காட்டுகள். வட சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தாங்குடு எழுத்துமுறையிலுள்ள ஒரு கல்வெட்டுக்கு அறியப்பட்ட ஒரே உதாரணம் பெய்ஜிங்கில் ஜுயோங்குவானில் 14 ஆம் நூற்றாண்டின் மேக நடைபாதையில் உள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மேற்கு சியா மங்கோலியர்களால் அழிக்கப்பட்டு கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீன நின்ஷியா மற்றும் கான்சுவில் உள்ள தாங்குடு தாயகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பாடிங்கில் ஒரு துடிப்பான தாங்குடு சமூகம் வாழ்ந்ததாக இந்த தூண்கள் குறிப்பிடுகின்றன. [2]
வரலாறு
தொகுஇந்த இரண்டு தூண்கள் 1962 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கே 140 கிலோமீட்டர் (87 மைல்) தொலைவில் உள்ள ஏபெய் மாகாணத்தில் உள்ள பாடிங் நகரின் வடக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள அன்சுவாங் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.. [1]
ஏபெய் கலாச்சார விவகார பணியகத்தின் கலாச்சார நினைவுச்சின்னங்கள் செயற்குழு ஒரு குழுவை அனுப்பி, அகழ்வாராய்ச்சி செய்தது. இந்த தளம் ஒரு சதுர தளமாக (150 மீ × 150 மீ), சுற்றியுள்ள தரையில் இருந்து சுமார் 2 மீ உயரத்தில் இருந்தது. அதில் மிங் மற்றும் சிங் வம்சங்களுடனான உடைந்த ஓடுளும், செங்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகால சிங் வம்சத்தின் (1644-1911) சில கோயில் கட்டிடங்கள் இன்னும் இருந்தன. ஆனால் மீதமுள்ள கட்டிடங்கள் அனைத்தும் 20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் அழிக்கப்பட்டன. இந்த கோயிலின் தனித்துவமான அம்சம் திபெத்திய பாணியில் தாது கோபுர வடிவிலான வெள்ளை அடுக்குத் தூபியாகும். இது பெய்ஜிங்கில் உள்ள மியாவோயிங் கோவிலில் உள்ள யுவான் வம்சத்தின் வெள்ளை அடுக்குத் தூபியைப் போன்றது. கோயிலின் இடத்தில் இரண்டு தாங்குடு தாரணி தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. [3]
தூண்கள் கண்டுபிடிக்கப்பட்ட கோவிலின் பெயர் தாங்குடு கல்வெட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. சீன மொழியில் ஜிஷி கோயில் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஷி ஜின்போ மற்றும் பாய் பின் ஆகியோரின் கூற்றுப்படி டங்குட் எழுத்துமுறைகள் அநேகமாக சீன பெயரான ஜிங்ஷான் கோயிலைக் குறிக்கிறது. அதாவது "நன்மையை ஊக்குவிக்கும் கோயில்" எனத் தெரிகிறது. [4] இந்த பெயரின் ஒரு கோயில் யுவான் வம்சத்தின் போது பாடிங்கில் நிறுவப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயிலுடன் தொடர்புடைய துறவிகளின் பெயர் திபெத்தியர்கள் என்பதால், இந்த கோயில் திபெத்திய இலாமாக்காளாக இருந்திருக்க வேண்டும். வெள்ளை திபெத்திய பாணியிலான தாகோபா முதலில் தாரணி தூண்களின் இடத்தில் அமைந்திருந்தது. ஜிஷி கோயிலை ஜிங்ஷன் கோயில் என்று அடையாளம் காண உதவுகிறது. [5] தாங்குடு மக்கள் திபெத்திய பௌத்தப் பள்ளியைப் பின்பற்றும்போது, தாங்குடு துறவிகள் திபெத்திய இலாமக்கலாக வாழ்வது இயல்பானதாக இருந்திருக்கும்.
பின்னர், இரண்டு தூண்களும் பண்டைய பாடிங்கின் மையத்திலுள்ளா தாமரை குளத்திற்கு நகர்த்தப்பட்டன. [6] 2013 கணக்குகளின்படி அவை பண்டைய தாமரை குளத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு முற்றத்தில், மற்ற வரலாற்று நினைவுச்சின்ன கல்வெட்டுகளுடன் நிற்கின்றன.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Bai, Bin (白濱) (1984). Xixiashi lunwenji 西夏史論文集 [Collected essays on Western Xia history]. Ningxia Renmin Chubanshe.
- Dunnell, Ruth (1992), "The Hsia Origins of the Yuan Institution of Imperial Preceptor" (PDF), Asia Major, 3rd Series, 5 (1): 85–111
- Ikeda, Takumi (2006), "Exploring the Mu-nya people and their language", Zinbun: Memoirs of the Research Institute for Humanistic Studies, Kyoto University, 39: 19–147
- Meng, Fanfeng (孟繁峰) (1984), Gu Lianhua Chi 古蓮花池 [Ancient Lotus Pond], Hebei Renmin Chubanshe, இணையக் கணினி நூலக மைய எண் 862676436
- Shi, Jinbo; Bai, Bin (1977), "Mingdai Xixiawen jingjuan he shichuang chutan" 明代西夏文經卷和石幢初探 [Preliminary investigations into Ming dynasty Tangut sutras and stone dhanari columns revisited], Kaogu Xuebao (1): 143–164
- Sun, Bojun; Tai, Chung-pui (2012), "Features of the Tangut consonant system as reflected in Sanskrit-Tangut transliterations", in Nathan Hill (ed.), Medieval Tibeto-Burman Languages IV, Brill, pp. 347–381
- Wang, Jingru (王靜如); Zheng, Shaozong (鄭紹宗) (1977), "Baoding chutu Mingdai Xixiawen shichuang" 保定出土明代西夏文石幢 [Ming dynasty stone pillars with Tangut uinscriptions unearthed at Baoding], Kaogu Xuebao (1): 133–141