தாரணி தூண்கள்
ஒரு தாரணி தூண் (dharani pillar), சூத்திர தூண் அல்லது ஜிங்சுவாங் என்பது சீனாவில் காணப்படும் தாரணி சூத்திரங்கள் அல்லது எளிய மந்திரங்களுடன் பொறிக்கப்பட்ட ஒரு வகை கல் தூண் ஆகும். தாரணி தூண்கள் பொதுவாக புத்த கோவில்களுக்கு வெளியே அமைக்கப்பட்டன. மேலும் அவை தாங் வம்சத்தின் போது பிரபலமாகின (618-907).
வரலாறு
தொகுஎஞ்சியிருக்கும் தாரணி தூண்கள் தாங் வம்சத்தின் ஆரம்பகாலத்தைச் சேர்ந்தவை. அவை தாங் வம்சத்தின் நடுப்பகுதியில் மிகவும் பிரபலமாகின. 838 முதல் 847 வரை சீனாவுக்கு வருகை தந்த யப்பானியத் துறவி என்னின் என்பவர் இந்தத் தூணகளின் இருப்பைப் பற்றி பதிவு செய்ததே முதலில் பதிவு செய்யப்பட்ட குறிப்புகளில் ஒன்றாகும். [1]
ஐந்து வம்சங்கள் மற்றும் பத்து இராச்சியங்கள் காலத்தில் வுயு இராச்சியத்தின் (907–978) நிறுவனர் கியான் லியு (852–932), தனது ஆட்சிக் காலத்தில் பல தாரணி தூண்களை கட்டியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பக்தியின் வெளிப்பாடாக: 911இல் ஜாக்சியன் கோவிலில் ஒன்றும், தாகியான் கோவிலில் இரண்டு தூண்களும், 913இல் தியான்சூ ரிகுவான் கோவிலில் ஒன்றும், 924இல் ஹாய்ஹூ கோவிலில் ஒன்றும் கட்டி எழுப்பினார். [1]
சீனாவின் தெற்கே, நவீன யுன்னானில், சீனரல்லாத இராச்சியங்களான நான்சாவோ (737-902) மற்றும் தலி (937–1253) ஆகியவற்றிற்குள் ஒரு தனித்துவமான பாணி தாரணி தூண் உருவாக்கப்பட்டது. யுன்னானிய தாரணி தூண்கள் பௌத்த உருவங்களுடன் விரிவாக சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை வடக்கில் உள்ள தாங் மற்றும் படால் வம்சங்களின் தாரணி தூண்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக உள்ளன. [2]
இந்தத் தூண்கள் மிங் வம்சத்தின் வழியாக (1368-1644) தொடர்ந்து அமைக்கப்பட்டன.
அமைப்பு
தொகுதாரணி தூண்கள் பொதுவாக எண்கோண வடிவத்தில் அமைந்துள்ளன. மேலும் அவை சீன எழுத்துக்களில் பௌத்த தாரணி அல்லது தாரணி-சூத்திரங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளன. [1] அவை பௌத்த கருக்கள் அல்லது டிராகன்களின் நிவாரண சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. [3] தூண் ஒரு அடிவாரத்தில் அமர்ந்திருக்கிறது. மேலும் அது ஒரு பெரிய விதானத்தால் மூடப்பட்டுள்ளது. தாரணி தூண்கள் எளிமையாக இருக்கிறது. ஒரு அடித்தளம், எண்கோண நெடுவரிசை மற்றும் ஒரு விதானம்; அல்லது பல மாடிகளைக் கொண்டது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நெடுவரிசைகள் ஒன்றுக்கொண்று ஒரு விதானத்தால் பிரிக்கப்பட்டுள்ளன. பல மாடி வடிவங்கள் மாதிரி பகோடாக்களை ஒத்துள்ளது.
தாரணி என்பது மந்திரங்களைப் போன்ற சமசுகிருதத்தில் எழுதப்பட்ட சிறிய மந்திரங்கள் ஆகும். தாரணி-சூத்திரங்கள் பல, பெரும்பாலும் மீண்டும் மீண்டும், தாரணி மந்திரங்களிலிருந்து உருவான விரிவான நூல்கள். தரணி தூண்களில் பொறிக்கப்பட்ட தரணி-சூத்திரங்கள் பின்வருமாறு:
பெரும்பாலான தாரணி தூண்களில், தாரணி அல்லது தாரணி-சூத்திரங்கள் சீன எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. அசல் சமசுகிருத உரையின் ஒலிவடிவத்தில் இருக்கின்றான. எப்போதாவது தாரணி உரையில் மற்ற எழுத்து முறைகளைப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.1962 ஆம் ஆண்டில் பாடிங்கின் வடக்கே உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு மிங் வம்சம் தங்குட் தாரணி தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு ஒரு முறை வெள்ளை, தூப வடிவிலான பகோடா கொண்ட ஒரு புத்த கோவில் இருந்தது. இந்த தூண்கள் தாங்குடு எழுத்துக்களில் புத்தரின் வெற்றிச் செய்தியுடன் பொறிக்கப்பட்டிருந்தன. தூண்களில் ஒன்றின் சீன கல்வெட்டின் படி, அவை ஹாங்ஷி சகாப்தத்தின் (1502) 15 வது ஆண்டின் 10 வது மாதத்தில் அமைக்கப்பட்டன, மேலும் அவை தாங்குடு எழுத்துமிறையின் சமீபத்திய அறியப்பட்ட எடுத்துக்காட்டுகளாகும். [4]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Huang, Yi-hsun (2005). Integrating Chinese Buddhism: A Study of Yongming Yanshou's Guanxin Xuanshu. Dharma Drum. pp. 22–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789575983437.
- ↑ Howard, Angela Falco (2006). Chinese Sculpture. Yale University Press. pp. 354–360. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780300100655.
- ↑ Amies, Alex (2011). Decorative Designs in Chinese Art: Understand Chinese Culture Through Art. chinesenotes. pp. 117–118. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780983334828.
- ↑ Ikeda, Takumi (2006). "Exploring the Mu-nya people and their language". Zinbun: Memoirs of the Research Institute for Humanistic Studies, Kyoto University 39: 19–147.