தாங், லடாக்

தாங் கிராமம், (Thang), இந்தியாவின் வடக்கில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியில், லே மாவட்டத்தின் நூப்ரா பள்ளத்தாக்கு தாலுகாவின் துர்டுக் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[1]முன்னர் இக்கிராமம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் இருந்தது. 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் முடிவில் இக்கிராமம் பாகிஸ்தானிடமிருந்து கைப்பற்றி இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[2]

தாங்
கிராமம்
தாங் is located in லடாக்
தாங்
தாங்
தாங் is located in இந்தியா
தாங்
தாங்
ஆள்கூறுகள்: 34°55′34″N 76°47′42″E / 34.926°N 76.795°E / 34.926; 76.795
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிலடாக்
மாவட்டம்லே மாவட்டம்
தாலுகாநூப்ரா பள்ளத்தாக்கு
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்103
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
194401

தாங் கிராமம் இந்திய-பாகிஸ்தானை பிரிக்கும் கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில், இமயமலையின் நீட்சியான காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ளது.[3][4]இது லே நகரத்திற்கு வடகிழக்கே 216 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இக்கிராமம் 16 குடியிருப்புகளையும், 103 மக்களையும் கொண்டிருந்தது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடியினர் 88 ஆகவுள்ளனர். [5]இக்கிராமத்தில் மலைவாழ் இசுலாமிய பால்டி மக்கள் வசிக்கின்றனர்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
  2. A people who became Indian overnight
  3. "Turtuk, a Promised Land Between Two Hostile Neighbours". The Wire.
  4. A people who became Indian overnight
  5. "Leh district census". 2011 Census of India (Directorate of Census Operations). http://www.censusindia.gov.in/datagov/CDB_PCA_Census/PCA_CDB_0103_F_Census.xls. பார்த்த நாள்: 2015-07-23. 
  6. "Exploring the breathtaking landscapes of Indo-Pak border". Hindustan Times. March 15, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாங்,_லடாக்&oldid=4035919" இலிருந்து மீள்விக்கப்பட்டது