ததியா மாவட்டம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(தாதியா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ததியா மாவட்டம் (Datia District) (இந்தி: दतिया जिला) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ததியா ஆகும். இது குவாலியர் கோட்டத்தில், புந்தேல்கண்ட் புவியியல் பகுதியில் அமைந்துள்ளது.

ததியா மாவட்டம்
दतिया जिला
ததியாமாவட்டத்தின் இடஅமைவு மத்தியப் பிரதேசம்
மாநிலம்மத்தியப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்குவாலியர் கோட்டம்
தலைமையகம்ததியா
பரப்பு2,902 km2 (1,120 sq mi)
மக்கட்தொகை786,754 (2011)
மக்கள்தொகை அடர்த்தி271/km2 (700/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை23.13%
படிப்பறிவு72.63%
பாலின விகிதம்873
வட்டங்கள்3
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்தேசிய நெடுஞ்சாலை எண் 75
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மாவட்ட எல்லைகள்

தொகு

ததியா மாவட்டத்தின் வடகிழக்கில் பிண்டு மாவட்டம், தென்கிழக்கில் உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டம், தென்மேற்கில் சிவபுரி மாவட்டம், வடமேற்கில் குவாலியர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

தொகு

ததியா மாவட்டம் ததியா, சியோந்தா மற்றும் பாந்தர் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது. இம்மாவட்டம் த்தியா, சியோந்தா மற்றும் பாந்தர் என மூன்று சட்டமன்ற தொகுதிகள் கொண்டது. இம்மூன்று சட்டமன்ற தொகுதிகளும் பிந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

 
வீர்சிங் அரண்மனை
 
ததியா மாவட்ட நீதிமன்றம்

மக்கள் தொகையியல்

தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 786,754 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 76.87% மக்களும்; நகரப்புறங்களில் 23.13% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 18.46% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 420,157 ஆண்களும் மற்றும் 366,597 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 873 பெண்கள் வீதம் உள்ளனர். 2,902 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 271 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 72.63 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.20 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 59.41 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 110,114 ஆக உள்ளது. [1]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 747,693 (95.04 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 28,483 (3.62%) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, சமண, பௌத்த சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது.

மொழிகள்

தொகு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார பழங்குடியின மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

பொருளாதாரம்

தொகு

இம்மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைச் சார்ந்து உள்ளது.

போக்குவரத்து

தொகு

மத்திய தொடருந்து மண்டலத்தில் புதுதில்லி - போபால் வழித்தடத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. மேலும் குவாலியர் - ஒரிசாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 75 ததியா மாவட்டம் வழியாக செல்கிறது.

கல்வி

தொகு

ததியா மாவட்டத்தில் 750 துவக்கப் பள்ளிகளும், 500 நடுநிலைப் பள்ளிகளும், 250 உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

{{coord|25|40|12|N|78|27|36|E|region:IN-MP_type:adm2nd_source:kolossus-nowiki|display=title

"https://ta.wikipedia.org/w/index.php?title=ததியா_மாவட்டம்&oldid=3369278" இலிருந்து மீள்விக்கப்பட்டது