தாமசு டீ குவின்சி
தாமசு பென்சொன் டி குவின்சி (Thomas Penson De Quincey, 15 ஆகத்து 1785 - 08 திசம்பர் 1859) என்பவர் ஆங்கில அபினி உண்பவரின் ஒப்புகைகள் ('Confessions of on English Opinion Eater') என்ற தன்வரலாற்றுப் படைப்புக்காகச் சிறப்பாக அறியப்படும் ஓர் ஆங்கில எழுத்தாளர், இதழியலாளர், இலக்கியத் திறனாய்வாளர்.[1][2]
தாமசு டி குவின்சி | |
---|---|
சர். ஜேம்ஸ் வாட்சன்-கோர்டன் வரைந்த தாமசு டி குவின்சியின் படம் | |
பிறப்பு | தாமசு பென்சொன் டி குவின்சி 15 ஆகத்து 1785 மான்செஸ்டர் |
இறப்பு | 8 திசம்பர் 1859 எடின்பரோ |
அடக்கத்தலம் | புனித குத்பெர்ட் தேவாலயமுற்றம், எடின்பரோ |
தொழில் | மொழியியலாளர், இதழியலாளர், எழுத்தாளர், புதின எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சுயசரிதையாளர், prose writer, கட்டுரையாளர், இலக்கியத் திறனாய்வாளர், மெய்யியலாளர் |
மொழி | ஆங்கிலம் |
தேசியம் | பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம், ஐக்கிய இராச்சியம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1819-1853 (பத்தொன்பதாம் நூற்றாண்டு) |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆங்கில அபினி உண்பவரின் ஒப்புகைகள் "மேக்பத்தில் உள்ள வாயிலைத் தட்டுவது குறித்து" |
துணைவர் | மார்கரெட் |
கையொப்பம் | |
இளமைக்காலம்
தொகுதாமசு டி குவின்சி இங்கிலாந்திலுள்ள லங்காஷைரில் மான்செஸ்டர் நகரத்தில் தாமசு குவின்சிக்கும் எலிசபெத் பென்சொனுக்கும் மகனாகப் பிறந்தார். இலக்கியத்தில் ஆர்வமிக்க வெற்றிகரமான வணிகரான இவரது தந்தை, இவருடைய எட்டாவது வயதில் இறந்துவிட்டார். தந்தையின் இறப்புக்குப் பின் இவரும், இவரது தாயும் சோமர்செட்டிலுள்ள பாத்துக்கு இடம்பெயர்ந்தனர்.[3] இளமைப் பருவத்தில் டி குவின்சி உடல் வலுவற்றவராகவும் அடிக்கடி நோய்வாப்படுவராகவும் இருந்தார். பெரும்பாலும் தனிமையிலேயே பொழுதைக் கழித்தாலும், இவரது அண்ணன் வில்லியம் வீட்டுக்கு வரும்போது ஆர்ப்பாட்டம் செய்பவராக இருந்தார்.
இலக்கிய ஆர்வம்
தொகு1799-ஆம் ஆண்டில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்த்தும் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ்ஜும் இயற்றிய உணர்ச்சிக் கதைப்பாடல்களை (Lyrical Ballads) முதலில் படித்தார்.[3] இது இவருடைய மனச்சோர்வை நீக்கி வேர்ட்ஸ்வொர்த் மீது பெருமதிப்பு கொள்ளச் செய்தது. அவரது பதினைந்தாம் வயதில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தயாராக இருந்தார். தன்னொத்த மாணவர்களைக் காட்டிலும் அறிவில் சிறந்து விளங்கிப் புலமைப்பரிசில் பெற்றவரானார். நீங்களோ நானோ ஓர் ஆங்கிலக் கூட்டத்தில் உரையாற்றுவதைக் காட்டிலும் மேலாக அந்தப் பையனால் ஏதெனிய மக்களிடையேயும் ஒரு நீளுரையை ஆற்றமுடியும் என பாத்திலிருந்த அவருடைய ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.[4]
அபினிப் பழக்கம்
தொகு1804-ஆம் ஆண்டு ஆக்சுபோர்டில் இருந்த போது அவ்வப்போது அபினியை உட்கொள்ளத் தொடங்கினார். டி குவின்சி முக்கை நரம்புவாதத்தால் இன்னலுற்றிருந்தார்.[5] அதனால் ஏற்பட்ட வலியைப் போக்க அபினியைப் பயன்படுத்தத் தொடங்கியதாகவும், ஆனால் பின்னர் 1812-ஆம் ஆண்டுவரை இன்பத்துக்காக வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே உட்கொண்டதாகவும் டி குவின்சி குறிப்பிட்டுள்ளார்.[6]
1821-ஆம் ஆண்டு ஜெர்மானிய எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளை வழங்க இலண்டன் சென்றபோது, அவருடைய அபினி பயன்பாட்டுப் பட்டறிவைப் பற்றி எழுத வேண்டப்பட்டார். இலண்டன் இதழில் (The London Magazine) அவர் எழுதிய கட்டுரைகள் பலரது கவனத்தை ஈர்த்தது. அந்தக் கட்டுரைகள் அதே ஆண்டில் புத்தகவடிவில் வெளியிடப்பட்டது.[7]
குடும்பம்
தொகுவாழ்வின் பெரும்பகுதி கடன்தொல்லையால் இன்னலுற்றிருந்த டி குவின்சி, 1816-ஆம் ஆண்டு மார்கரெட்டை மணந்தார். இந்த இணையர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. மார்கரெட் 1837-ஆம் ஆண்டு இறந்தார். இவர்களின் மகன்களில் ஒருவரான பால் பிரெடெரிக் டி குவின்சி நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்தார், பின்னாளில் அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமானார்.[8]
மறைவு
தொகு1859-ஆம் ஆண்டு தெற்கு எடின்பரோவில் லோதியன் தெருவிலிருந்த[9] அவரது அறையில் இறந்தார். அவரது உடல் புனித குத்பெர்ட் தேவாலயமுற்றத்தில் புதைக்கப்பட்டது. அவருடைய கல்லறைக் கல்லில் அவருடைய படைப்புகளைப் பற்றிய தகவல்கள் ஏதுமில்லை.
படைப்புகள்
தொகுஇவரது பெரும் படைப்புகள் பின்வருமாறு
- ஆங்கில அபினி உண்பவரின் ஒப்புகைகள் (Confessions of an English Opium-Eater, 1821)
- மேக்பத்தில் உள்ள வாயிலைத் தட்டுவது குறித்து (On the Knocking at the Gate in Macbeth, 1823)
- வல்லாத்மோர் (Walladmor, 1825)
- நுண்கலைகளில் ஒன்றாகக் கருதப்படும் கொலையைக் குறித்து (On Murder Considered as one of the Fine Arts, 1827)
- குளோஸ்டர்ஹைம், அல்லது முகமூடி (Klosterheim, or the Masque, 1832)
- ஏரி நினைவுகள் (Lake Reminiscences, 1834–40)
- தார்த்தார்களின் கிளர்ச்சி (Revolt of the Tartars, 1837)
- அரசியற் பொருண்மியத்தின் ஏரணம் (The Logic of Political Economy, 1844)
- ஆழத்திலிருந்து பெருமூச்சு (Suspiria de Profundis, 1845)
- ஆங்கில் அஞ்சல் வண்டி (The English Mail-Coach, 1849)
- தன்வரலாற்று உருவரைகள் (Autobiographic Sketches, 1853)
சான்றுகள்
தொகு- ↑ Eaton, Horace Ainsworth, Thomas De Quincey: A Biography, New York, Oxford University Press, 1936; reprinted New York, Octagon Books, 1972;
- ↑ Lindop, Grevel. The Opium-Eater: A Life of Thomas De Quincey, London, J. M. Dent & Sons, 1981.
- ↑ 3.0 3.1 Morrison, Robert. "Thomas De Quincey: Chronology" TDQ Homepage. Kingston: Queen's University, 2013. "Thomas de Quincey--Chronology". Archived from the original on 24 December 2013. பார்க்கப்பட்ட நாள் 24 December 2013.
- ↑ Morrison, Robert. "Thomas De Quincey: Biography" TDQ Homepage. Kingston: Queen's University, 2013. "Thomas de Quincey--Biography". Archived from the original on 3 May 2007. பார்க்கப்பட்ட நாள் 12 June 2013.
- ↑ Philip Sandblom, Creativity and Disease, Seventh Edition, New York, Marion Boyars, 1992; p. 49.
- ↑ Alethea Hayter, Opium and the Romantic Imagination, revised edition, Wellingborough, Northamptonshire, Crucible, 1988; pp. 229–31.
- ↑ Confessions was first published in London Magazine in 1821. It was published in book form the following year. (Morrison, Robert. "Thomas De Quincey: Chronology." TDQ Homepage. Kingston: Queen's University, 2013. "Thomas de Quincey--Chronology". Archived from the original on 24 December 2013. பார்க்கப்பட்ட நாள் 24 December 2013.)
- ↑ "Death of Colonel de Quincey". The New Zealand Herald XXXI (9486): p. 5. 16 April 1894. http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&cl=search&d=NZH18940416.2.21.
- ↑ Edinburgh and District: Ward Lock Guide 1935
வெளியிணைப்புகள்
தொகு- குட்டன்பேர்க் திட்டத்தில் Thomas De Quincey இன் படைப்புகள்
- Works by தாமசு டீ குவின்சி at LibriVox (public domain audiobooks)
- Works by தாமசு டீ குவின்சி at திற நூலகம்
- ஆக்கங்கள் தாமசு டீ குவின்சி இணைய ஆவணகத்தில்
- Works by Thomas De Quincey at Hathi Trust