தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுவண்டி
தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுவண்டி ஓர் அதிவிரைவு வண்டி ஆகும். அந்த்யோதயா விரைவுவண்டி வகையைச் சேர்ந்த இந்தத் தொடருந்து தாம்பரம், திருநெல்வேலி நகரங்களை இணைக்கிறது. நாள்தோறும் இயங்கும் இத்தொடருந்தின் எண்கள் 16191/16192 ஆகும்.[1][2][3][4][5]
Tambaram - Tirunelveli Antyodaya Express | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அந்த்யோதயா விரைவுவண்டி |
நிகழ்நிலை | இயக்கத்தில் |
முதல் சேவை | சூன் 9, 2018 |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே |
வழி | |
தொடக்கம் | தாம்பரம் (TBM) |
இடைநிறுத்தங்கள் | 12 |
முடிவு | திருநெல்வேலி சந்திப்பு (TEN) |
ஓடும் தூரம் | 690.3 km (428.9 mi) |
சராசரி பயண நேரம் | 15:00hrs/16:15hrs |
சேவைகளின் காலஅளவு | தினசரி |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | இரண்டாம் அமர்வு இருக்கை : 16, பொது/பதிவுசெய்யப்படாத பெட்டி: 2 |
இருக்கை வசதி | ஆம் |
படுக்கை வசதி | இல்லை |
உணவு வசதிகள் | இல்லை |
காணும் வசதிகள் | பெரிய சாளரம் |
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | 2 |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
துவக்கம்
தொகுஇந்தத் தொடருந்து 9 சூன் 2018-ஆம் தேதி திருநெல்வேலி சந்திப்பிலிருந்தும், 10 சூன் 2018-ஆம் தேதி தாம்பரத்திலிருந்தும் இயக்கப்படுகிறது.[6]
பயணிகள் பெட்டிகளின் அமைப்பு
தொகுஇந்த வண்டி 16 எண்ணிக்கையில் இரண்டாம் அமர்வு பயணிகள் பெட்டியும் (2S) மேலும் 2 பதிவுசெய்யப்படாத பயணிகள் பெட்டிகளையும் கொண்டுள்ளது.
வசதிகள் மற்றும் புதிய அம்சங்கள்
தொகு- இந்த இரயில்களின் சிறப்பு அம்சம், முற்றிலும் பதிவுசெய்யப்படாத/பொது பயணிகள் பயணம் செய்யும் பெட்டிகள் கொண்டது
- கைபேசி, மடிக்கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்த மின்விசை சேர்வி (Charing Port) உள்ளது.
- உயிரி கழிப்பறைகள் (Bio Toilets)
- வினைல் தாள்கள் கொண்டு பெட்டிகளின் வெளிப்புறத் தோற்றம் நீண்ட கால பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக புகைப்பிடிப்பான் மற்றும் சிசிடிவி கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
- அக்குவாகார்டு தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள், சட்டை தாங்கிகள் மற்றும் பிரெய்லி குறியீடுகள் தற்போது உள்ளன.
- LHB ரேக் பயன்படுத்தப்படுகிறது.
சேவை
தொகு- வண்டி எண் 16189 தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுவண்டி தினசரி தாம்பரம் தொடருந்து நிலையத்திலிருந்து 00:30 மணிக்கு புறப்பட்டு 15:30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையத்தினை அடையும்.
- வண்டி எண் 16190 திருநெல்வேலி - தாம்பரம் அந்த்யோதயா விரைவுவண்டி தினசரி 17:30 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு 09:45 மணிக்கு தாம்பரம் தொடருந்து நிலையம் சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது .
வழித்தடங்கள், நிறுத்துமிடங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "SALIENT FEATURES OF SOUTHERN ZONE RAILWAY TIME TABLE – November 2017 TRAINS PERTAINING TO SOUTHERN RAILWAY". பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
- ↑ "16191/Tambaram- Tirunelveli Antyodaya Express (Via Main Line)". பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
- ↑ "16192/Tirunelveli - Tambaram Antyodaya Express (Via Main Line)". பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
- ↑ "Trains at a Glance (November 2017 - June 2018)" (PDF). பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
- ↑ "Trains at a Glance (November 2017 - June 2018)" (PDF). பார்க்கப்பட்ட நாள் November 2, 2017.
- ↑ "திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு மேலும் கூடுதலாக ஒரு தொடருந்து" (in en-IN). The Hindu. 8 June 2018. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tirunelveli-to-get-one-more-train-to-chennai-from-saturday/article24108736.ece. பார்த்த நாள்: 8 June 2018.