தார்பூர் (Darfur, அரபு மொழி: دار فور‎, DārFūr) என்பது மேற்கு சூடானின் ஒரு பிராந்தியம். பல நூற்றாண்டுகளாக சுல்தான் ஆட்சியில் இருந்த தார்பூர் 1916 ஆம் ஆண்டில் ஆங்கிலோ-எகிப்தியப் படையினரால் சூடானுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதி நடு தார்பூர், கிழக்கு தார்பூர், வடக்கு தார்பூர், தெற்கு தார்பூர், மற்றும் தெற்கு தார்பூர் என ஐந்து நிருவாக மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சூடானிய அரசுக்கும் அரபுக்களல்லாத பழங்குடியினருக்கும் இடையே இடம்பெற்று வரும் தார்பூர் போரை அடுத்து 2003 முதல் 2010 வரை இப்பகுதியில் அவசரகால நிலை இருந்து வந்தது.

Darfur
دار فور
தார்பூரின்அமைவிடம்
தலைநகரம்அல்-ஃபசீர்
ஆட்சி மொழி(கள்)அரபு, ஆங்கிலம்
மக்கள்தார்பூரி
அரசாங்கம்
• நிறைவேற்றதிகாரம் கொண்ட தலைவர்
திஜானி சேசே
பரப்பு
• மொத்தம்
493,180 km2 (190,420 sq mi)
மக்கள் தொகை
• மதிப்பிடு
6,000,000 (சர்ச்சைக்கு முன்னர்) (2004)

புவியியல் தொகு

தார்பூரின் பரப்பளவு கிட்டத்தட்ட 4,93,180 சதுர கிமீ ஆகும்[1][2][3][4]. இப்பகுதியின் பெருமளவு பரப்பளவு வறண்ட மேட்டு நிலம் ஆகும். இதன் நடுப்பகுதியில் உள்ள மாரா மலைகள் 3.042 மீட்டர்கள் வரை சீறும் எரிமலைக் குன்றுகள் ஆகும்[5].

மேற்கோள்கள் தொகு

  1. "Sudan's Geography". Globaldreamers.org இம் மூலத்தில் இருந்து 2011-10-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111005071830/http://www.globaldreamers.org/holocaust/darfur/geography.html. பார்த்த நாள்: 2010-07-13. 
  2. By R.S. O'Fahey (2004-05-15). "Darfur : A complex ethnic reality with a long history". International Herald Tribune இம் மூலத்தில் இருந்து 2008-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080318060345/http://www.iht.com/articles/2004/05/15/edofahey_ed3_.php. பார்த்த நாள்: 2010-07-13. 
  3. "Congressional Reps Give Update on Troubled Darfur Region of Sudan - PBS News, 2005-02-17". Pbs.org. 2005-02-17 இம் மூலத்தில் இருந்து 2008-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081218230724/http://www.pbs.org/newshour/bb/africa/jan-june05/darfur_2-17.html. பார்த்த நாள்: 2010-07-13. 
  4. "Quick guide: Darfur - BBC News, 2006-09-06". BBC News. 2006-09-06. http://news.bbc.co.uk/1/hi/world/africa/5316306.stm. பார்த்த நாள்: 2010-07-13. 
  5. "Africa Ultra-Prominences". Peaklist.org. 2007-05-10. http://www.peaklist.org/WWlists/ultras/africa.html. பார்த்த நாள்: 2010-07-13. 

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்பூர்&oldid=3557727" இருந்து மீள்விக்கப்பட்டது