தாலியம்(III) அசிட்டேட்டு

வேதிச் சேர்மம்

தாலியம்(III) அசிட்டேட்டு (Thallium(III) acetate) என்பது Tl(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். தாலியத்தின் அசிட்டேட்டு உப்பாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. நுண்ணுயிரியலில் ஒரு தெரிவு செய்யப்பட்ட வளர்ச்சி ஊடகமாக இது நச்சுத்தன்மை கொண்ட சேர்மமாகும்.[1][2] ஆனால் இது முடி உதிர்தல் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. 8 மி.கி/கி.கி அளவு உட்கொள்ளப்பட்டால் இது கடுமையான நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். மேலும் பெரியவர்களுக்கு இச்சேர்மம் ஏற்படுத்தும் குறைந்தபட்ச மரண அளவு 12 மி.கி/கி.கி ஆகும்.[3]

தாலியம்(III) அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாலியம்(III) அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
2570-63-0 Y
ChemSpider 10667701
EC number 219-913-2
InChI
  • InChI=1S/3C2H4O2.Tl/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3
    Key: SMRRYUGQTFYZGD-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16685266
  • CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].[Tl+3]
UNII 24Z9A6MS8G
பண்புகள்
Tl(C2H3O2)3
வாய்ப்பாட்டு எடை 381.52
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

80% அசிட்டிக் அமிலத்தை தாலியம்(III) ஆக்சைடுடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தாலியம்(III) அசிடேட்டைத் தயாரிக்கலாம். மேலும் விளைபொருள் அசிட்டிக் நீரிலியாகப் படிகமாகிறது.[4]

பண்புகள்

தொகு

நீரற்ற தாலியம்(III) அசிடேட்டு C2/c என்ற இடக்குழுவுடன் a = 15.54 Å b = 8.630 Å and c = 7.848 என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் Å உடன் β = 113.92° என்ற பிணைப்புக் கோணத்துடன் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது. ஓர் அலகு செல்லுக்கு நான்கு வாய்பாட்டு அலகுகளும் 2.57 என்ற அடர்த்தியையும் இச்சேர்மம் கொண்டுள்ளது. ஒவ்வொரு தாலியம் அயனிக்கும் மூன்று அசிடேட்டு அயனிகள் இடுக்கிணைப்பாக பிணைந்துள்ளன.[5]

தாலியம்(III) அசிடேட்டு ஒற்றைநீரேற்றும் C2/c என்ற இடக்குழுவுடன் a = 9.311 Å, b = 14.341 Å, c = 9.198 Å, β = 119.69 ° என்ற அணிக்கோவை அளவுருக்களுடன் ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் படிகமாகிறது. மேலும் அலகு செல் தொகுதி V = 1067.0 Å3 Z = 4, 2.49. என்ற அடர்த்தியையும் கொண்டுள்ளது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Bulich, Anthony A.; Hartman, Paul A. (Nov 1969). "Evaluation of Thallium Acetate-Citrate Medium for Isolation of Enterococci". Applied Microbiology 18 (5): 944–945. doi:10.1128/am.18.5.944-945.1969. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-6919. பப்மெட்:5370465. பப்மெட் சென்ட்ரல்:378124. http://dx.doi.org/10.1128/am.18.5.944-945.1969. 
  2. World Health Organization (2008). Anthrax in humans and animals. World Health Organization. pp. 139–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-4-154753-6. Archived from the original on 2014-06-28. பார்க்கப்பட்ட நாள் 23 February 2011.
  3. "铊、玻璃和人——从两桩铊中毒事件说起". 中国科学院上海硅酸盐研究所. Archived from the original on 2015-05-20. பார்க்கப்பட்ட நாள் 2015-05-20.
  4. Kolling, Orland W.; Mawdsley, Elizabeth A. (1971). "Anhydrous Thallium(III) Acetate". Transactions of the Kansas Academy of Science 74 (1): 38. doi:10.2307/3627666. https://www.jstor.org/stable/3627666. 
  5. Faggiani, R.; Brown, I. D. (1 September 1978). "Thallium(III) triacetate". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 34 (9): 2845–2846. doi:10.1107/S0567740878009358. Bibcode: 1978AcCrB..34.2845F. 
  6. Faggiani, R.; Brown, I. D. (15 September 1982). "Thallium triacetate monohydrate". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 38 (9): 2473–2475. doi:10.1107/S0567740882009091. Bibcode: 1982AcCrB..38.2473F. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலியம்(III)_அசிட்டேட்டு&oldid=3917349" இலிருந்து மீள்விக்கப்பட்டது