தினபூமி

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் வெளியாகும் தினசரி

தினபூமி (Thinaboomi) தமிழ்நாட்டின் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். 1990 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் எசு.மணிமாறன் என்பவரால் நிறுவப்பட்டது. சென்னை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, கொச்சி, பாண்டிச்சேரி, வேலூர் ஆகிய நகரங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது.

தினபூமி
Thinaboomi
வகைதினசரி நாளிதழ்
வடிவம்அகன்றதாள்
ஆசிரியர்எசு. மணிமாறன்
நிறுவியது1999
மொழிதமிழ்
தலைமையகம்மதுரை, தமிழ்நாடு
இணையத்தளம்www.thinaboomi.com

வரலாறு தொகு

2010ஆம் ஆண்டு தினபூமியின் ஆசிரியர் எசு.மணிமாறனும் அவரது மகன் இரமேசு குமாரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். மதுரை கிராணைட்டு ஊழலை மூடிமறைத்ததன் விளைவாக எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாக தாங்கள் துன்புறுத்தப்பட்டதாக இருவரும் தொடர்ந்து குற்றம் சாட்டினர்.[1][2][3] அடுத்த ஆண்டுகளில், இந்திய அச்சக மன்றமும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசும், வழக்கை இரத்து செய்ய ஆசிரியருக்கு ஆதரவளித்தன.[4][5]

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினபூமி&oldid=3640897" இருந்து மீள்விக்கப்பட்டது