திராகோ (சட்டம் செய்தவர்)

பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸின் முதல் சட்டமியற்றி

திராகோ (Draco (/ˈdrk/; கிரேக்கம்: Δράκων, Drakōn; fl. c. கி.மு 7ஆம் நூற்றாண்டு) அல்லது திராகன் என்றும் அழைக்கப்படுபவர், பண்டைய கிரேக்கத்தில் ஏதென்சின் வரலாற்றில் முதலில் அறியப்பட்ட சட்டமியற்றி ஆவார். இவர் நடைமுறையில் இருந்த வாய்மொழிச் சட்டம் மற்றும் இரத்தத்துக்கு இரத்தம் ஆகியவற்றை நீதிமன்றத்தால் மட்டுமே நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றதாக எழுதப்பட்ட சட்டமாக மாற்றினார். ஏதெனியன் குடிமக்களால் நகர அரசுக்கு சட்டத்தை உருவாக்குமாறு கோரப்பட்ட முதல் சனநாயக சட்டமியற்றி திராகோ ஆவார். ஆனால் திராகோ அவர்களின் கடுமையான தன்மை கொண்ட சட்டங்களை நிறுவுவார் என்று குடிமக்கள் எதிர்பார்க்கவில்லை. [1] 19 ஆம் நூற்றாண்டிலிருந்து, டிராகோனியன் ( கிரேக்கம் : δρακόντειος drakónteios) என்ற பெயரடை கிரேக்கம், ஆங்கிலம், மற்றும் பிற ஐரோப்பிய மொழிகளில் இதேபோன்ற மன்னிக்க முடியாத விதிகள் அல்லது சட்டங்களைக் குறிக்கிறது.

திராகோ
பிறப்புகி.மு 7வது நூற்றாண்டின் நடுவில்.
ஏதென்ஸ்
இறப்புகி.மு 600கள்.
ஏஜினா
தேசியம்ஏதென்ஸ், பண்டைக் கிரேக்கம்
பணிசட்டமியற்றி
அறியப்படுவதுதிராகோனியன் அரசியலமைப்பு

வாழ்க்கை

தொகு

39வது ஒலிம்பியாடின் போது கிமு 622 அல்லது 621 இல், சட்டங்களை திராகோ இயற்றினார்.

திராகோவின் வாழ்க்கையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. 10 ஆம் நூற்றாண்டின் பைசாந்தியன் கலைக்களஞ்சியமான சூடாவின் படி, கிரேக்கத்தின் ஏழு ஞானிகளின் காலத்திற்கு முந்தைய இவர் அட்டிகாவின் கிரேக்க பிரபுக்களைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்கிறது. ஏஜினிடன் அரங்கத்தில் இவர் இறந்ததைப் பற்றிய ஒரு நாட்டுப்புறக் கதையை சுதா விவரிக்கிறார் [2] ஒரு பாரம்பரிய பண்டைய கிரேக்க கௌரவ நிகழ்ச்சியில், இவரது ஆதரவாளர்கள் "இவரது தலையில் பல தொப்பிகள் மற்றும் சட்டைகள் மற்றும் ஆடைகளை வீசினர், அதனால் இவர் மூச்சுத் திணறினார், மேலும் அதே அரங்கில் புதையூண்டார்." [3] இவரது மரணம் பற்றிய உண்மைத் தகவல் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் திராகோவை ஏதென்சிலிருந்து அண்டை தீவான ஏஜினாவுக்கு விரட்டப்பட்டார் என்பது அறியப்படுகிறது, அங்கு இவர் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கழித்தார்.

கொடூரமான அரசியலமைப்பு

தொகு

இவர் வகுத்த சட்டங்கள் ( θεσμοί - தெஸ்மோய் ) ஏதென்சின் எழுதப்பட்ட முதல் அரசியலமைப்பாகும். அவற்றை யாரும் அறியாமல் இருக்க, அவை மரத்தாலான பலகைகளில் ἄξονες - axones), பதிக்கப்பட்டன. அங்கு அவை கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக நான்முக முக்கோணக ( κύρβεις - kyrbeis ) வடிவில் பாதுகாக்கபட்டன. [4] பலகைகள் ஆக்சோன்கள் என்று அழைக்கப்பட்டன. ஒருவேளை அவற்றின் எந்தப் பக்கத்தையும் படிக்க பிரமிட்டின் அச்சில் சுழற்றபடுவதாக இருந்திருக்கலாம்.

அரசியலமைப்பு பல புதுமைகளைக் கொண்டிருந்தது:

  • ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் தெரிந்த வாய்மொழிச் சட்டங்களுக்குப் பதிலாக, அனைத்து சட்டங்களும் எழுதப்பட்டன, இதனால் கல்வியறிவு பெற்ற குடிமக்களுக்கும் ( அநீதிகளுக்காக அரியோப்பாகு அவையிடம் முறையிடக்கூடிய ) அறியப்பட்டது: "திராகோவின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு, முதல் சட்டங்கள் வரையப்பட்டன". ( அரிசுட்டாட்டில் : ஏதெனியன் அரசியலமைப்பு, பகுதி 5, பிரிவு 41 )
  • சட்டங்கள் கொலை மற்றும் கைமோசக்கொலை வேறுபடுத்துகின்றன. [5]

சட்டங்கள் குறிப்பாக கடுமையாக இருந்தன. எடுத்துக்காட்டாக, கடன் கொடுத்தவனின் நிலையை விடத் தாழ்ந்தவனாக இருக்கும் எந்த கடனாளியும் அடிமைத்தனத்திற்கு தள்ளப்பட்டார். [6] தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த ஒருவரிடம் கடன்பட்டிருப்பவர்களுக்கு தண்டனை மிகவும் மென்மையாக இருந்தது. முட்டைக்கோஸ் திருடுவது போன்ற சிறிய குற்றங்களுக்கு கூட மரணதண்டனை விதிக்கப்பட்டது.[7] திராகோனிய அரசியல் அமைப்பில் மரண தண்டனையை தாராளமாகப் பயன்படுத்துவதைப் பற்றி, புளூட்டாக் கூறுகிறார்: "பெரும்பாலான குற்றங்களுக்கு மரண தண்டனையை ஏன் நிர்ணயித்தீர்கள் என்று திராக்கனிடம் கேட்டதற்கு, இந்த சிறிய குற்றங்கள் அதற்கு தகுதியானவை என்று தான் கருதுவதாகவும், மேலும் முக்கியமான குற்றங்களுக்கு இதைவிட பெரிய தண்டனை இல்லை என்றும் பதிலளித்தார்" என்று கூறப்படுகிறது. [8]

கொலைச் சட்டத்தைத் தவிர, கிமு 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சோலனால் இவரது அனைத்துச் சட்டங்களும் இரத்து செய்யப்பட்டன. [9]

கொலைச் சட்டம்

தொகு

பல விவாதங்களுக்குப் பிறகு, கிமு 409 இல் கொலைச் சட்டம் உட்பட சட்டங்களைத் திருத்த ஏதெனியர்கள் முடிவு செய்தனர். [10] கொலைச் சட்டம் மிகவும் துண்டு துண்டான கல்வெட்டாகும், ஆனால் கொலையாளியின் மீது வழக்குத் தொடுப்பது பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் கையில் உள்ளது என்று கூறுகிறது. கல்வெட்டின் பாதுகாக்கப்பட்ட பகுதியின் படி, தற்செயலான கொலைகளுக்கு நாடுகடத்தப்படுதல் தண்டனையாக அளிக்கப்பட்டன.

வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலைக்கான தண்டனையை திராகோவின் சட்டம் குறிப்பிடுகிறதா என்பது குறித்து தெளிவாக இல்லை. கிமு 409 இல், வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் டிராகோவின் சட்டம் தொடங்குகிறது, 'καὶ ἐὰμ μὲ 'κ [π]ρονοί[α]ς [κ]τ[εεει τνατ]αεγΆ]αεετ, மேலும் இதை மொழிபெயர்ப்பது கடினம். ஒரு சாத்தியமான மொழிபெயர்ப்பு, "ஒரு மனிதன் வேண்டுமென்றே இன்னொருவனைக் கொல்லாவிட்டாலும், அவன் நாடு கடத்தப்படுவான்" என்கிறது. [11]

நானூறுவர் பேரவை

தொகு

ஏதெனிய சனநாயகத்தில் பெரும் பங்கு வகிக்கும் வகையில் பிற்கால அரசியலமைப்புகளில் உருவான அரியோபாகு அவையிலிருந்து வேறுபட்ட [12] நாநூற்றுவர் அவையை திராகோ அறிமுகப்படுத்தினார். அரிஸ்டாட்டில், குறிப்பிடும்போது திராகோ சட்டங்களை எழுதும்போது, பதவிக்கான சரியான தகுதிகளை அமைத்தல் போன்றவை ஏற்கனவே உள்ள எழுதப்படாத ஏதெனியன் அரசியலமைப்பிலிருந்து பெற்று சட்டமியற்றினார் என்றார். [13]

குறிப்புகள்

தொகு
  1. "Written in Human Blood: Draconian Laws and the Dawn of Democracy" (in அமெரிக்க ஆங்கிலம்). 2014-01-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-26.
  2. Cobham, Ebenezer. The Reader's Handbook of Allusions, References, Plots and Stories, p. 451.
  3. Suidas. "Δράκων பரணிடப்பட்டது 2015-11-03 at the வந்தவழி இயந்திரம்". Suda On Line. Adler number delta, 1495.
  4. Holland, Leicester B. (1941). "Axones". American Journal of Archaeology 45 (3): 346–362. doi:10.2307/499024. 
  5. Boardman, John; Hammond, N.G.L, eds. (1970). "The Growth of the Athenian State". The Cambridge Ancient History Volume III, Part 3: The Expansion of the Greek World, Eighth to Sixth Centuries B.C. p. 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-23447-6.
  6. Morris Silver. Economic Structures of Antiquity. Ed. Greenwood Publishing Group, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313293801. P. 117
  7. J. David Hirschel, William O. Wakefield. Criminal Justice in England and the United States. Ed. Greenwood Publishing Group, 1995. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780275941338. p.160.
  8. Plutarch (translation by Stewart; Long, George). He also wrote, "Draco's code was written not in ink but in blood."Life of Solon, XVII. கூட்டன்பர்கு திட்டம்.
  9. Aristotle, Athenian Constitution, 7.1.
  10. Volonaki, Eleni (2000). ""Apagoge" in Homicide Cases". Dike 3. http://www.ledonline.it/Dike/allegati/Dike3_Volonakis.pdf. 
  11. Gagarin, Michael (1981). Drakon and early Athenian homicide law. New York: Yale U.P. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300026277.
  12. Aristotle. The Athenian Constitution, 4.3.
  13. Aristotle. Politics, 1274a.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராகோ_(சட்டம்_செய்தவர்)&oldid=3933964" இலிருந்து மீள்விக்கப்பட்டது