திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில்

திருச்செந்துறை சந்திரசேகரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1] [கு 1]இக்கோயில் கிபி 9-ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. அதற்கான கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளது.

அமைவிடம்

தொகு

திருச்சி-கரூர் சாலையில் முக்கொம்பு அடுத்த முத்தரசநல்லுர், ஜீயர்புரத்தை அடுத்து திருச்செந்துறை கிராமத்தில் அமைந்துள்ளது.

இறைவன்,இறைவி

தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் சந்திரசேகரர் ஆவார். இறைவி மானேந்தியவல்லி ஆவார். [1]

பிற சன்னதிகள்

தொகு

திருச்சுற்றில் சுப்பிரமணியர், துர்க்கையம்மன் சன்னதிகள் உள்ளன. வலது புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. [1]

குறிப்புகள்

தொகு
  1. தேவார வைப்புத்தலங்கள் என்ற பு.மா.ஜெயசெந்தில்நாதன் நூலில், ப.279இல் "திருப்பராய்த்துறை வணங்கிய திருஞானசம்பந்தர் ஆலந்துறை, செந்துறை ஆகிய தலங்களை வழிபட்டதாகப் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் பதிகம் கிடைக்கவில்லை" என்று கூறியுள்ளார். எந்தவிடத்திலும் வைப்புத்தலம் எனக்குறிப்பிடவில்லை. ஆனால் நூலில் இக்கோயிலைப் பற்றிய பதிவு உள்ளது. பிற சான்றுகளைத் தேடும்போது இவ்வாறாக வைப்புத்தலம் உள்ளதாகக் குறிப்பு காணப்பெறவில்லைலை. அவ்வாறு கிடைப்பின் உறுதி செய்யப்படும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009