திருச்செல்வம் (இயக்குநர்)

திருச்செல்வம் வேலுச்சாமி தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் கோலங்கள், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி என்ற தொடரை இயக்கியுள்ளார்.

திருச்செல்வம்
பிறப்புதஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி (நாடியம்)
செயற்பாட்டுக்
காலம்
1991-தற்போது

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்காவிலுள்ள 'நாடியம்' என்றும் ஊரில் பிறந்தார். இவருக்கு 2 சகோதரிகள் உண்டு. இவர் தான் கடைசி மகன்.

சொந்த ஊர் நாடியத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார் அதன் பின் தேவக்கோட்டை டி.பிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும், போர்டு பிஷப் பள்ளியில் பிளஸ் டூ முடித்தார். அதன் பின்னர் தஞ்சை பூண்டி கல்லூரி பி.எஸ்.சி., பிசிக்ஸ் படித்தார். அஞ்சல் வழியில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., படித்தார். கலைத்துறை ஆர்வம் கொண்ட இவர், 1988ல் சென்னை திரைப்படப் பயிற்சி கல்லூரி சேர்ந்து, 1991ல் படிப்பை முடித்து வெளியேறினார். அதன் பிறகு சவுண்ட் என்ஜினியராக ஐந்தாண்டு பணியாற்றினார்.

திரைப்படங்களில்

தொகு

இவர் சுஜாதா டப்பிங் தியேட்டரிலும், பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்தார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் தயாரான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் சவுண்ட் என்ஜினியராகப் பணியாற்றினார்.

சின்னத்திரையில்

தொகு

திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி தொலைக்காட்சித் தொடரில் இவர் இணை இயக்குனராகப் பணியாற்றினார். அதே தொடரில் மாப்பிள்ளை சந்தோஷ் வேடத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு நடிப்பில் நல்ல பெயர் கிடைத்தது. இவர் முதலில் விகடன் ஒளித்திரை தயாரித்த கோலங்கள் என்ற நெடுந்தொடரில் இயக்குனராக அறிமுகமானார். இந்த தொடரில் தேவயானியுடன் இணைந்து நடித்தார். இந்த தொடரில் தேவயானி (அபி)யின் நண்பராக (தொல்காப்பியன்) நடித்தார். இந்த தொடர் 6 ஆண்டுகள் ஒளிபரப்பாகியது. கோலங்கள் தொடரை அடுத்து சன் தொலைக்காட்சிக்காக மாதவி என்ற தொடரை இயக்கினார். அதன் பிறகு பொக்கிஷம் என்ற தொடரை கலைஞர் தொலைக்காட்சிக்காக தயாரித்து, இயக்கி அதில் கதாநாயகனாக நடித்தார். அதே தொடரில் தயாரிப்பாளராக அறிமுகமானார். தற்போது சன் தொலைக்காட்சியில் எதிர் நீச்சல் (2022) என்ற தொலைக்காட்சி தொடரை இயக்கி நடித்து வருகிறார். இதில் அவரின் கதாபாத்திரத்தின் பெயர் "ஜீவானந்தம்" .

தொலைக்காட்சித் தொடர்கள்

தொகு
ஆண்டு தொடர் பாத்திரம் மொழி தொலைக்காட்சி அறிக்கை
2002–2005 மெட்டி ஒலி ஞானராஜ் (சந்தோஷ்) தமிழ் சன் தொலைக்காட்சி நடிகர்
2003-2009 கோலங்கள் தொல்காப்பியன் தமிழ் சன் தொலைக்காட்சி நடிகர்/எழுதியவர்/இயக்குனர்
2005-2006 அல்லி ராஜ்ஜியம் தமிழ் சன் தொலைக்காட்சி எழுதியவர்/இயக்குனர்
2009-2011 மாதவி தமிழ் சன் தொலைக்காட்சி எழுதியவர்/இயக்குனர்
2012-2013 பொக்கிஷம் வசந்தன் தமிழ் கலைஞர் தொலைக்காட்சி நடிகர்/எழுதியவர்/தயாரிப்பாளர்/இயக்குனர்
2013-2014 சித்திரம் பேசுதடி அருண்மொழித்தேவன் தமிழ் ஜெயா தொலைக்காட்சி நடிகர்/எழுதியவர்/தயாரிப்பாளர்/இயக்குனர்
2015-2017 கைராசிக்குடும்பம் தமிழ் ஜெயா தொலைக்காட்சி நடிகர்/எழுதியவர்/பாடலாசிரியர்/தயாரிப்பாளர்/இயக்குனர்
2020- வல்லமை தாராயோ தமிழ் விகடன் தொலைக்காட்சி எழுதியவர்
வலைத் தொடர்
2022 எதிர்நீச்சல் ஜீவானந்தம் தமிழ் சன் தொலைக்காட்சி எழுதியவர்/தயாரிப்பாளர்/இயக்குனர்

விருதுகளும் கௌரவிப்புக்களும்

தொகு
ஆண்டு விருது வகை தொடர் பாத்திரம் முடிவு அறிக்கை
2006 தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் சிறந்த சாதனையாளர் கோலங்கள் தொல்காப்பியன் வெற்றி
2007 தமிழக அரசின் சின்னத்திரை விருதுகள் சிறந்த நெடுந்தொடர் (முதல் பரிசு) கோலங்கள் தொல்காப்பியன் வெற்றி
2008 விவெல் சின்னத்திரை விருதுகள் சிறந்த திரைக்கதை கோலங்கள் தொல்காப்பியன் வெற்றி
2009 கலைமாமணி விருதுகள் வெற்றி
2010 சன் குடும்பம் விருதுகள் சிறந்த துணை நடிகர் கோலங்கள் தொல்காப்பியன் வெற்றி
சிறந்த இயக்குனர் கோலங்கள் தொல்காப்பியன் வெற்றி
சிறந்த இயக்குனர் (சிறப்பு பரிசு) கோலங்கள் தொல்காப்பியன் வெற்றி
சிறந்த திரைக்கதை கோலங்கள் தொல்காப்பியன் வெற்றி
மைலாப்பூர் அகாடமி விருதுகள் சிறந்த இயக்குனர் மாதவி வெற்றி
சிறந்த திரைக்கதை/வசனம் மாதவி வெற்றி
ஆல் ரவுண்டர் மாதவி வெற்றி

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு