திருப்பாலைக்குடி

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம்


திருப்பாலைக்குடி (Thiruppalaikkudi) என்பது தமிழகத்தின்,இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். [4] இங்கு மீனவ மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.[சான்று தேவை]

திருப்பாலைக்குடி
—  சிறு நகரம் திருப்பாலைக்குடி  —
திருப்பாலைக்குடி
அமைவிடம்: திருப்பாலைக்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°32′46″N 78°54′43″E / 9.5461175°N 78.9120313°E / 9.5461175; 78.9120313
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
வட்டம் இராஜசிங்கமங்கலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 9,986 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கட் தொகை

தொகு

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தெகை கணக்கெடுப்பின் படி, இங்கு 9986 பேர் வசிக்கின்றனர்.[சான்று தேவை]

தெருக்கள்

தொகு

இப்பகுதியில் முஸ்லிம் தெருக்கள், பழங்கோட்டை, வடக்கு பகுதி, கிழக்கு பகுதி, தெற்கு பகுதி, காந்திநகர் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த ஊரானது இராமநாதபுரம் நகரில் இருந்து 24 கி. மீ தொலைவில் உள்ளது.

தொழில்

தொகு

இங்கு மீன் பிடி தொழில், மீன்களைப் பதப்படுத்தும் நிருவனங்களும், உப்பளங்களும், இரால் பண்னைகளும் உள்ளன.

போக்குவரத்து

தொகு

கிழக்கு கடற்கரைச் சாலையானது (ECR) திருப்பாலைகுடியை கடந்து செல்வதால் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்றுச் செல்கின்றன. அருகில் உள்ள ரயில் நிலையம் இராமநாதபுரம் இரயில் நிலையமாகும். மதுரை பன்னாட்டு விமான நிலையம் 132 கி. மீ தொலைவில் உள்ளது.

சான்றுகள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Thiruppalaikkudi village".
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பாலைக்குடி&oldid=3852976" இலிருந்து மீள்விக்கப்பட்டது