திருப்புடைமருதூர்

திருப்புடைமருதூர் (Thiruppudaimarudur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் வீரவநல்லூருக்கு அருகில் அமைந்துள்ள கோயிலாகும்.

விளக்கம்தொகு

திருப்புடைமருதூரின் வரலாறு காரணமாகத் தனித்துவமானது.[1] ஆந்திரத்தில் ஸ்ரீசைலத்தில் உள்ள ஜோதிர்லிங்கா சிவனின் தலைமையாகக் கருதப்படுகிறது. திருவுடைமருதூரில் உள்ள கோயில் (தமிழில் இடை என்பது நடுப்பகுதியினை குறிப்பது) உடலாகவும், திருப்புடைமருதூரில் உள்ள கோயில் பாதமாகவும் கருதப்படுகிறது. திருப்புடைமருதூரில் சிவனைக் காண முடிந்தால்,[2] ஸ்ரீசைலம் மற்றும் திருவிடைமருதூருக்குச் செல்வதால் கிட்டும் பலன் கிடைக்கும். இந்த மூன்று கோயில்களின் தல விருட்ச மரமாக மருத மரம் உள்ளது. மேலும் பிரம்மதண்டத்தினை கோயிலுக்குள் காணலாம்.

வரலாறுதொகு

சுரேந்திர மன்னன் போர் ஒன்றில் மற்றொரு மன்னனைக் கொன்றான். இந்த பாவத்தால் பாதிக்கப்பட்ட சுரேந்திர மன்னன், இதிலிருந்து விடுபட விரும்பினார். இவர் சிவனைத் தியானித்தார். சிவன் இவருக்கு ஓர் பிரம்மந்தண்டைக் கொடுத்து, கடலுக்குச் சென்று மீண்டும் நிலத்திற்கு வரச் சொன்னார். இத்தண்டை எங்கு நிறுத்துகிறதோ அங்கு தனக்குக் கோயில் ஒன்று கடவும் என்று சொன்னார். அவ்வாறே மன்னரும் கோயிலைக் கட்டினார். மேலும் கடவுள் அருளியவாறு கோமதி அம்மனின் சிலையைத் தேடி இமாலயத்திற்குச் சென்றார். இமயமலை சென்று சிலையினைத் தேடியபோது, முற்றிலும் உருத்திராட்சத்தால் ஆன சிலையினைக் கண்டார். இதனுடன் கோயிலைக் கட்டி முடித்தார். கோயிலுக்கு அருகிலுள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்த அவர் இரட்சிப்பைப் பெற்றார். இது "சுரேந்திர மோட்ச தீர்த்தம்" என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் இங்குக் குளித்தால், "பிரம்மஹத்தி தோசம்" உட்பட அனைத்து வகையான பாவங்களும் நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது.

தமிழ் மாதமான தையில் (ஜனவரி 15 முதல் பிப்ரவரி 15 வரை) தைப்பூச நாளன்று தீர்த்தவாரி விழா கொண்டாடப்படுகிறது.

அருகிலுள்ள இடங்கள்தொகு

அருகிலுள்ள வீரவநல்லூர் நகரத்தில் மயோபதி [3] என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

 
பறவைகள் சரணாலயம் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது

இப்பகுதியில் உள்ள மற்ற முக்கிய இடங்கள் நவதிருப்பதி மற்றும் நவகைலாசம்ஆகும் . மணிமுத்தர், காரையார்- கீழ் மேலணைகள் அருகில் உள்ளன. அகத்தியர் அருவி, குற்றாலம், பாணாதீர்த்தம், பாபநாசம், மாஞ்சோலை, கோரையாறு, அகத்திய மலை அருகிலுள்ள இடங்களாகும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் இப்பகுதியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-11-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://wikimapia.org/20415200/Narumbunatha-swami-timple
  3. "Mayopathy Institute of Muscular Dystrophy & Research Center". 3 பிப்ரவரி 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 January 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்புடைமருதூர்&oldid=3558284" இருந்து மீள்விக்கப்பட்டது