திருமாக்கூடல் நரசிபுரம்

திருமாக்கூடல் நரசிபுரம் (Tirumakudalu Narasipura or Tirumakūḍalu Narasīpura) (கன்னடம்): ತಿರುಮಕೂಡಲು ನರಸೀಪುರ) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் கோயில் நகரம் எனப்பெயரெடுத்த இந்நகரத்தை டி. நரசிபுரா என்றும் அழைப்பர். இது மைசூர் மாவட்டத்தின் திருமாக்கூடல்நரசிபுரம் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், பேரூராட்சியும் ஆகும். இந்நகரத்தில் காவேரி ஆறு, கபினி ஆறு மற்றும் சப்திகா ஏரியில் கலப்பதால் இந்நகரத்திற்கு திருமாக்கூடல்நரசிபுரம் எனப்பெயராயிற்று.[2] இவ்வூரில் புராதன குஞ்ச நரசிம்மர் கோயில் அமைந்திருப்பதால் இவ்வூருக்கு நரசிபுரம் எனப்பெயராயிற்று.

திருமாக்கூடல் நரசிபுரம்
டி. என். நரசிபுரா
டி. நரசிபுரா
குஞ்சா நரசிம்ம சுவாமி கோயில், திருமாக்கூடல் நரசிபுரம்
அடைபெயர்(கள்): கோயில் நகரம்
ஆள்கூறுகள்: 12°12′36″N 76°54′22″E / 12.21°N 76.906°E / 12.21; 76.906
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்மைசூர்
வருவாய் வட்டம்டி. நரசிபுரா
ஏற்றம்
638 m (2,093 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்31,498[1]
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
571 124
தொலைபேசி குறியீடு08227
வாகனப் பதிவுKA-55
இணையதளம்http://www.tnarasipuratown.mrc.gov.in
டி. நரசிபுரா நகர வரைபடம்

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 11 வார்டுகள் திருமாக்கூடல் நரசிபுரம் பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 9,980 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 4,998 மற்றும் பெண்கள் 4,982 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 997 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 985 (9.87 %) ஆகும். சராசரி எழுத்தறிவு 77.59 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.65%, இசுலாமியர்கள் 6.77%, சமணர்கள் 1.30% மற்றும் பிற சமயத்தினர் 0.27% ஆக உள்ளனர்.[3]

அமைவிடம்

தொகு
 
நரசிபுரம் பேருந்து நிலையம்

திருமாக்கூடல் நரசிபுரம் பேரூராட்சி மைசூருக்கு தென்கிழக்கே 29 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூரிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் நஞ்சன்கூட்டில் அமைந்துள்ளது.

புகழ்பெற்றவர்கள்

தொகு
  • டி. சௌடய்யா - வயலின் மேதை
  • வத்தல் நாகராஜ் -கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர்
  • சித்தராமையா - கர்நாடகா முன்னாள் முதலமைச்சர்
  • கனக மூர்த்தி - சிற்பி & நூலாசிரியர்

படக்காட்சியகம்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.tnarasipuratown.mrc.gov.in/en/about-tmc[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Mysore". karnatakaholidays.com. Archived from the original on 2017-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
  3. Tirumakudal Narsipur Population Census 2011 – 2021

வெளி இணைப்புகள்

தொகு