திருவேகம்பத்தூர்

திருவேகம்பத்தூர், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் தேவககோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருவேகம்பத்தூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இவ்வூர் காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1] இங்குள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம் திருவேகம்பத்தூர் ஏகாம்பரநாதசுவாமி கோயில் ஆகும்.

திருவேகம்பத்தூர், மதுரை - தொண்டி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இதன் தொலைபேசி குறியீடு எண் 0561 ஆகும். அஞ்சல் சுட்டு எண் 630408 ஆகும்.

திருவேகம்பத்தூர், மதுரைக்கு கிழக்கே 80 கிமீ தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான சிவகங்கைக்கு கிழக்கே 40 கிமீ தொலைவிலும், மதுரை - தொண்டி மாநில நெடுஞ்சாலையில் உள்ளது.

தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருவேகம்பத்தூருக்கு கிழக்கில் திருவாடானை ஊராட்சி ஒன்றியம், வடக்கில் கல்லல் ஊராட்சி ஒன்றியம், மேற்கில் காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.

இதன் அருகமைந்த நகரங்கள் தேவகோட்டை, சிவகங்கை, பரமக்குடி மற்றும் காரைக்குடி ஆகும். அருகமைந்த சிற்றூர்கள் புளியால், பெரியகாரை, கழனிவாசல், கவாத்துக்குடி, திரானி மற்றும் சக்கந்தி ஆகும்.

அருகமைந்த தொடருந்து நிலையம் தேவகோட்டை ரஸ்தா நிலையம் ஆகும்.

கல்வி நிலையங்கள்

தொகு
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பளி, கழனிவாசல் நெசவாளர் காலனி
  • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கவாத்துக்குடி
  • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சக்கந்தி
  • ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, திரானி

வழிபாட்டுத் தலங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Thiruvegampathur
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவேகம்பத்தூர்&oldid=2514560" இலிருந்து மீள்விக்கப்பட்டது