திரு ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி

திரு ஆ கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி என்பது திண்டிவனம் நகரிலிலுள்ள கலை அறிவியல் கல்லூரி ஆகும

திரு ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி (Thiru A. Govindasamy Government Arts College) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செயல்பட்டுவரும் இருபாலருக்கான அரசினர் கலைக் கல்லூரியாகும்.[1] 1969ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயல்பட்டு வந்தது.[2] தற்பொழுது சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மாநிலப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்ட நிலையில் இக்கல்லூரி அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியாக 2021-22 கல்வியாண்டு முதல் செயல்படுகிறது.[3]

திரு ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி
வகைஅரசு, பொது, கலைக் கல்லூரி
உருவாக்கம்1969
முதல்வர்தி. அறிவுடை நம்பி
அமைவிடம், ,
இணையதளம்https://taggac.edu.in/

வரலாறு தொகு

இக்கல்லூரி காலஞ்சென்ற மேனாள் விவசாய துறை அமைச்சர் ஆ. கோவிந்தசாமி நினைவாக சூலை 02, 1969ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. இதனை முன்னாள் உணவுத் துறை அமைச்சர் ப. உ. சண்முகம் சூலை 29, 1969 அன்று தொடங்கி வைத்தார். மண்டல விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் சிலகாலம் தற்காலிகமாக இயங்கிபின், திண்டிவனம் நகரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் மேல்பாக்கம் கிராம எல்லையில் அமைந்துள்ள நிரந்தரக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

படிப்புகள் தொகு

இளநிலை தொகு

கலைப்பாடங்கள் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகமேலாண்மை
  • வணிகவியல்

அறிவியல் பாடங்கள் தொகு

  • தாவரவியல்
  • வேதியியல்
  • கணினிஅறிவியல்
  • நிலத்தியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • புள்ளியியல்

முதுநிலை தொகு

கலைப்பாடங்கள் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • வணிகவியல்

அறிவியல் பாடங்கள் தொகு

  • தாவரவியல்
  • வேதியியல்
  • கணினிஅறிவியல்
  • நிலத்தியல்
  • கணிதம்
  • இயற்பியல்

ஆய்வியல் நிறைஞர் தொகு

கலைப்பாடங்கள் தொகு

  • தமிழ்
  • வரலாறு

அறிவியல் பாடங்கள் தொகு

  • தாவரவியல்
  • வேதியியல்
  • கணினிஅறிவியல்
  • நிலத்தியல்
  • கணிதம்
  • இயற்பியல்

முனைவர் பட்டம் தொகு

கலைப்பாடங்கள் தொகு

  • தமிழ்
  • வரலாறு

அறிவியல் பாடங்கள் தொகு

  • தாவரவியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • இயற்பியல்

மேற்கோள்கள் தொகு

  1. "http://www.punjabcolleges.com". Archived from the original on 2017-02-01. பார்க்கப்பட்ட நாள் 2017-03-26. {{cite web}}: External link in |title= (help)
  2. http://www.colleges-in-tamilnadu.com
  3. "அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் 75 கலைக் கல்லூரிகள் இணைப்பு: துறைகளின் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ள துணைவேந்தர் வேண்டுகோள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-07-01.

வெளியிணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு