திறை செலுத்தும் அரசுகள்

திறை செலுத்தும் அரசுகள் அல்லது அடிமை அரசுகள் (vassal state), போரில் தோற்ற அல்லது பேரரசுக்கு அடங்கி ஆட்சி செய்யும் சிற்றரசுகள் ஆண்டுதோறும் பேரரசுக்கு திறை செலுத்துவதுடன், போரின் போது பேரரசுக்கு படைகள் அனுப்பி உதவிட கடமைப்பட்டுள்ளார். இந்நடைமுறைகள் கிமு 300 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைய எகிப்திய இராச்சியம், மெசொப்பொத்தேமியாவின் இட்டைட்டு பேரரசு மற்றும் புது அசிரியப் பேரரசு மற்றும் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு, துருக்கியின் உதுமானியப் பேரரசு மற்றும் பல பேரரசுகள் ஆண்ட ஆட்சியில் இருந்தது.

இட்டைட்டுப் பேரசுக்குட்பட்ட அடிமை அரசுகளின் வரைபடம், ஆண்டு கிமு 1300
ஒட்டமான் பேரரசிற்குட்பட்ட அடிமை அரசுகள் மற்றும் திறை செலுத்தும் அரசுகளின் வரைபடம், ஆண்டு 1590

பேரரசர்களுக்கும் அடிமை அரசர்களுக்கும் இடையிலான உறவுகள் வரையறைக்கப்பட்டது. அடிமை அரசர்கள் சுதந்திரமாக ஆட்சி செய்தாலும்; எல்லைகளை விரிவுபடுத்தத் கூடாது. மேலும் தாங்கள் திறை செலுத்தும் பேரரசர்களுக்கு தெரியாமல் பிற ஆட்சியாளர்களிடம் அரசியல் மற்றும் இராணுவ ஒப்பந்தம் ஏதும் செய்ய இயலாது. பேரரசரின் ஆணைகளை திறை செலுத்தும் சிற்றரசர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஐரோப்பாவின் குடியேற்ற ஆட்சிப் பகுதிகளில் அடிமை அரசுகள் என்பதற்கு பதிலாக நாகரீகமாக சொற்களில் அழைக்கப்படுகிறது. காலனியாதிக்கம் ஆட்சியாளர்கள் அடிமை அரசுகளை சுதேச சமஸ்தானங்கள், பொம்மை அரசு, காப்பாட்சிக்குட்பட்ட அரசு மற்றும் துணை அரசுகள் என்று அழைத்தனர்.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திறை_செலுத்தும்_அரசுகள்&oldid=4166118" இலிருந்து மீள்விக்கப்பட்டது