தி. விஜயராகவச்சார்யா

திவான் பகதூர் சர் திருவலயங்குடி விஜயராகவச்சார்யா கே.பி.இ (27 ஆகஸ்ட் 1875 – பிப்ரவரி 28, 1953) என்பவர் இந்திய அரசு ஊழியர் மற்றும் நிர்வாகி ஆவார். இவர் 1919 முதல் 1922 வரை கொச்சி இராச்சியத்தின் திவானாக பணியாற்றினார். விஜயராகவச்சார்யா இந்தியாவின் சட்டசபையினை குறிக்கும் உதயப்பூரின் உறுப்பினராகவும் இருந்துள்ளார் .

சர்
திருவலயங்குடி விஜயராகவச்சார்யா
Thiruvalayangudi Vijayaraghavacharya
கேபிஈ
திவான் உதயப்பூர்
In office
1939–1947
Monarchபோபால் சிங்
திவான் கொச்சி
In office
1919–1922
Monarchராமா வர்மா XVI
முன்னையவர்ஜெ. டபுள்யு போரே
Succeeded byபி. நாராயண மேனன்
Personal details
Born(1875-08-27)27 ஆகத்து 1875
கரூர், சென்னை மாகாணம்
Died28 பெப்ரவரி 1953(1953-02-28) (அகவை 77)
சென்னை, இந்தியா

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

விஜயராகவச்சார்யா 1875 ஆகஸ்ட் 27 அன்று ஈரோட்டில் பிறந்தார். சென்னைமாநிலக் கல்லூரியில் கல்வி பயின்றார். விஜயராகவச்சார்யா 1894 இல் பி.ஏ. முடித்து 1898 இல் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

தொழில் தொகு

 
1929இல் பூசாவில் நடந்த கூட்டத்தில் திவான் விஜயராகவர்ச்சார்யா. முன் வரிசையின் மையத்தில் (இடமிருந்து ஏழாவது) தலைப்பாகையுடன் அமர்ந்திருக்கும்
ஆரம்ப கால வாழ்க்கை

விஜயராகவச்சார்யா 1898இல் மாகாண குடிமைச் சேவையில் சேர்ந்தார். ஆரம்பத்தில் மாவட்ட அதிகாரியாக பணியாற்றினார். 1912 முதல் 1917 வரை, மெட்ராஸ் மாநகர வருவாய் வாரிய செயலாளராகவும், 1918 முதல் 1919 வரை தொழில்துறை துணை இயக்குநராகவும் பணியாற்றினார். 1919ஆம் ஆண்டில், இவர் கொச்சின் இராச்சியத்தின் திவானாக நியமிக்கப்பட்டு 1919 முதல் 1922 வரை பணியாற்றினார்.

கொச்சின் இராச்சியம்

விஜயராகவச்சார்யா தனது ஆட்சிக் காலத்தில் கொச்சின் இராச்சியத்தின் தொழில் மயமாக்கலைத் தொடங்கினார். நாயர் ஒழுங்குமுறை 1920இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் பெண் கல்வியறிவு கணிசமாக அதிகரித்தது. உள்ளூர் சுயராஜ்ஜிய அமைப்புகளான கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டன.

இந்திய அரசு

1922 ஆம் ஆண்டில், வெம்ப்லியின் பிரிட்டிஷ் பேரரசு கண்காட்சியில் இந்தியாவின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 1926ஆம் ஆண்டில், தொழில்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவர் பொதுச் சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் குறுகிய காலம் பணியாற்றினார். 1929இல், வேளாண் ஆராய்ச்சிக்கான இம்பீரியல் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

விஜயராகவச்சார்யா குடிமைப் பணியிலிருந்து 25 டிசம்பர் 1935 அன்று ஓய்வு பெற்றார். இதன் பின்னர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, உதயப்பூரின் திவானாக நியமிக்கப்பட்டார்.

இறப்பு தொகு

விஜயராகவச்சார்யா பிப்ரவரி 28, 1953 அன்று தனது 77 வயதில் இறந்தார்.[1][2]

குறிப்புகள் தொகு

  1. The Indian Review, Vol 54. G. A. Natesan. 1953. 
  2. Obituary. Careers Institute. 1953. 

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._விஜயராகவச்சார்யா&oldid=3845129" இலிருந்து மீள்விக்கப்பட்டது