தி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஃகா

மெலூஹாவின் அமரர்கள் (தி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஃகா) (Immortals of Meluha) புராணம், வரலாறு, நவீன உலகம் மூன்றையும் கலந்து கதை புனையப்பட்டிருக்கிற புதினம். இப்புத்தகம் சிவா முத்தொகுதியின் முதல் பாகம் ஆகும். இதன் நூலாசிரியர் அமிஷ் கொல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது இந்திய மேலாண்மை கழக பட்டதாரி. கதையின் காலம் ராமனுக்குப் பின் 1200 வருடங்கள்; கதைகளம் காஷ்மீர் - ஸ்ரீநகர். இந்த நாவலின் மூன்று பாகங்களும் வெளி வந்துவிட்டன. கைலாச மலையடிவாரத்தில், குணாக்கள் எனும் ஒரு சிறு கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் சிவா, சூரியவம்ச சாம்ராஜ்யத்தின் அழைப்பை ஏற்று, தன் கூட்டத்துடன் காஷ்மீருக்குக் குடிபெயர்ந்தபின் படிப்படியாக மஹாதேவ் நிலைக்கு உயர்ந்து சூரிய வம்சிகளுக்காக சந்திர வம்சிகளுடன் போர் புரிவதே இம்முதல் பாகத்தின் கதை கரு ஆகும்.

தி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஃகா
நூலாசிரியர்அமீஷ் திரிபாதி
அட்டைப்பட ஓவியர்ராஷ்மி புசல்கார்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
பொருண்மைசிவன், தொன்மவியல், புனைவியல்
வகைபுனைகதை
வெளியீட்டாளர்வெஸ்ட்லாண்டு பிரஸ்
வெளியிடப்பட்ட நாள்
பெப்ரவரி 2010
ஊடக வகைஅச்சு (நூல் அட்டை)
பக்கங்கள்390
ISBN978-93-80658-74-2
அடுத்த நூல்தி சீக்ரட் ஆஃப் தி நாகாஸ்

பாகங்கள் தொகு

  • தி இம்மார்டல்ஸ் ஆஃப் மெலூஃகா - மெலூகாவின் அமரர்கள்
  • தி சீக்கிரட் ஆப் தி நாகாஸ் - நாகர்களின் இரகசியம்
  • தி ஓத் ஆப் தி வாயுபுத்ராஸ் - வாயுபுத்திரர் வாக்கு

மொழிப்பெயர்ப்புகள் தொகு

இப்புத்தகம் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மராத்தி, பெங்காலி, குஜராத்தி, மலையாளம், அசாமியம், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஆகிய 11 மொழிகளில் வெளிவந்துள்ளது.

வெளி இணைப்பு தொகு