தி ரெவனன்ட்
தி ரெவனன்ட் (ஆங்கிலம்:The Revenant) இது 2015 வெளிவந்த அமெரிக்கத் திரைப்படமாகும்.[1] இப்படத்தை இயக்கியவர் அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு என்பவர் ஆவார். மார்க் எல். ஸ்மித் மற்றும் இன்யாரிட்டு ஆகியோரின் திரைக்கதையில்.2002இல் வெளியான மைக்கேல் புன் என்பவர]து "தி ரெவனன்ட்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் படமாக்காப்பட்டது. 1823இல் ஹியூ கிளாஸின் எல்லைப்புறத்த்தில் வசிக்கும் மனிதர்களின் வாழ்வை விவரிக்கும். அந்த நாவல் 1915 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை "தி சாங் ஆஃப் ஹக் கிளாஸ்" என்பதை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, டோம் ஹார்டி, டோம்னால் லீசன் மற்றும் வில் பவுட்லர் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 2001 இல் தயாரிப்பாளர் அகிவா கோல்ட்ஸ்மேன் புன்னின் கையெழுத்துப் பிரதியை வாங்கியபோது இப்படத்தின் வளர்ச்சி தொடங்கியது. மற்ற திட்டங்கள் காரணமாக பல தாமதங்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 2011 மற்றும் ஏப்ரல் 2014 இல் இன்யாரிட்டு இப்படத்தை இயக்குவதற்கு கையெழுத்திட்டார். இன்யாரிட்டு தான் 'தி ரெவனன்ட்' பணியைத் தொடங்குவதாகவும், டிகாப்ரியோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் உறுதிப்படுத்தினார். படத்தின் முதன்மை புகைப்படம் எடுத்தல் பணியானது அக்டோபர் 2014 இல் தொடங்கியது. படபிடிப்பு எடுக்குமிடம் மற்றும் பணியாளர்களின் தங்குமிடம் போன்றவற்றின் வசதிகள் பற்றிய பணிகளினால் இப்படம் மே முதல் ஆகஸ்ட் 2015 வரை தாமதப்படுத்தின.
"தி ரெவனன்ட்" டிசம்பர் 16, 2015 அன்று டி.சி.எல் எனற சீனத் திரையரங்கில் திரையிடப்பட்டது. மற்றும் டிசம்பர் 25 அன்று ஒரு சில திரையரங்கில் மட்டும் வெளியிடப்பட்டது. இப்படத்தின் உலகலாவிய பரந்த வெளியீடு | ஜனவரி 8, 2016 அன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த படம் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் அதன் நடிப்புக்காக (குறிப்பாக டிகாப்ரியோ மற்றும் ஹார்டியிடமிருந்து), இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றிகாகப் பாராட்டைப் பெற்றது..
இப்படம் மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும் மற்றும் ஐந்து பாஃடா விருதுகளையும் பெற்றது. 88ஆவது அகாதமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இத்திரப்படம் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த துணை நடிகர் (ஹார்டி), சிறந்த இயக்குநர் (இன்யாரிட்டு), சிறந்த நடிகர் (டிகாப்ரியோ), மற்றும் சிறந்த ஒளிப்பதிவு (இம்மானுவேல் லுபெஸ்கி) உள்ளிட்ட 12 பரிந்துரைகள் பெற்றது.
டிகாப்ரியோ சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதையும் வென்றார். மேலும் ஒரு முன்னணி பாத்திரத்தில் நடித்த ஆண் நடிகரின் சிறந்த நடிப்புக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது, ஒரு முன்னணி பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான பாஃப்டா விருது, மற்றும் சிறந்த நடிகருக்கான விமர்சகர்களின் சாய்ஸ் திரைப்பட விருது போன்றவற்றையும் பெற்றார்.
தயாரிப்பு
தொகுவளர்ச்சி மற்றும் நிதி
தொகுமைக்கேல் புன்கேவின் அப்போது வெளியிடப்படாத கையெழுத்துப் பிரதிக்கான உரிமையை தயாரிப்பாளர் அகிவா கோல்ட்ஸ்மேன் கையகப்படுத்தியதன் மூலம், ஆகஸ்ட் 2001 இல் தி ரெவனன்ட் இன் வளர்ச்சி தொடங்கியது. படத்தின் திரைக்கதையை டேவிட் ரபே எழுதியிருந்தார். பார்க் சான்-வூக், மற்றும் சாமுவேல் எல். ஜாக்சன் ஆகிய நடிகர்களை மனதில் கொண்டு தயாரிப்புப் பணி தொடங்கியது பின்னர் பார்க இத்திட்டத்திலிருந்து விலகினார். ஸ்டீவ் கோலின் அநாமதேய உள்ளடக்கத்திற்காக நாவலின் புதிய தழுவலை 2010இல் மார்க் எல். ஸ்மித் எழுதும் வரை இந்த வளர்ச்சி நின்று போனது. மே 2010 இல், ஸ்மித் இந்த படத்தை இயக்குவதற்கு ஜான் ஹில் கோட் இணைக்கப்பட்டிருப்பதாகவும், கிரிஸ்டியன் பேல் திரைப்படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.க்டோபர் 2010 இல் ஹில் கோட் இந்த திட்டத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜீன்-பிரான்சுவா ரிச்செட் இதில் சேர்க்கப்பட்டார். ஆனால் அலெயாண்ரோ கோன்சாலசு இன்யாரிட்டு ஆகஸ்ட் 2011 இல் இயக்குநரக கையெழுத்திட்டார். கோல்ட்ஸ்மேனனும் இப்பத்தை "வீட் ரோட் பிக்சர்சு"டன் தயாரிப்பது உறுதி செய்தார். நவம்பரில், நியூ ரீஜென்சி புரொடக்ஷன்ஸ் அநாமதேய உள்ளடக்கத்துடன் தயாரிக்க இணைந்தது. மேலும் 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் மூலம் படம் விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, இயக்குநர் இன்யாரிட்டு லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் சீன் பென் ஆகிய இருவரும் இரண்டு முக்கிய வேடங்களில் நடித்து வருவதாக கூறினார்.
இதையும் பார்க்க
தொகு- Survival film
- Man in the Wilderness, a 1971 Western film loosely based on the Hugh Glass story
- Lord Grizzly, a 1954 biographical novel by Frederick Manfred, about the Hugh Glass story
குறிப்புகள்
தொகு- ↑ Nast, Condé. "The Revenant Is a Harrowing Survival Story That Strains for Meaning". Vanity Fair (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-02.