துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1987

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1987 (1987 Cricket World Cup Final, கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1987) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் நான்காவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1987 நவம்பர் 8 ஆம் நாள் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்றது. அலன் போர்டர் தலைமையிலான ஆத்திரேலியா துடுப்பாட்ட அணி இறுதிப் போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஆடி தனது முதலாவது உலககிண்ணதைப் பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1987
நிகழ்வு1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
 ஆத்திரேலியா  இங்கிலாந்து
253/5 246/8
50 50
நாள்8 நம்பர், 1987
அரங்கம்ஈடன் கார்டன்ஸ், கல்கத்தா, இந்தியா
ஆட்ட நாயகன்ஆத்திரேலியா டேவிட் பூன்
தொடர் ஆட்ட நாயகன்எவருக்கும் கொடுக்கப்படவில்லை
நடுவர்கள்ராம் குப்தா, மகபூப் ஷா
1983
1992

நடைபெற்ற திகதி

தொகு

நவம்பர் 8 1987 அணிக்கு 60 ஓவர்கள் என்ற வழக்கமான விதி மாற்றப்பட்டு அணிக்கு 50 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்தைப் போலன்றி துணைக் கண்ட நாடுகளில் பகல் வேளை நீண்ட நேரம் நீடிக்காமை காரணமாகவே இந்த விதி மாற்றப்பட்டது.[1].

நடைபெற்ற அரங்கம்

தொகு

முதல் தடவையாக இங்கிலாந்தில் அல்லாமல் ஆசிய நாடுகளான இந்தியாவும், பாக்கிஸ்தானும் இணைந்து இப்போட்டியை நடத்தியமை குறிப்பிடத்தக்கது .இறுதிப் போட்டி இந்தியா கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்றது.

இறுதிப் போட்டி அணிகள்

தொகு

ஆத்திரேலியா அணி

தொகு
 • டேவிட் பூன்
 • ஜி.ஆர். மார்ஸ்
 • டி.எம்.ஜோன்ஸ்
 • சி.ஜே. மெக்டமோட்
 • அலன்போடர் (அணித்தலைவர்)
 • எம்.ஆர்.ஜே. வெலட்டா
 • எஸ்.ஆர். வோக்
 • எஸ்.பி. டொனல்
 • ஸி.ஜி.டையர்
 • டி.பி.ஏ. மே
 • பி.ஏ. ரீட்

இங்கிலாந்து அணி

தொகு
 • ஜி.ஏ. கூச்
 • ஆர்.டி. ரொபின்சன்
 • ஸி.டபிள்யு.ஜே. எதே
 • எம்.டபிள்யு. கெட்டிங் (அணித்தலைவர்)
 • ஏ.ஜே. லேம்ப்
 • பி.ஆர். டவுன்டன்
 • ஜே. ஈ. எம்புரோ
 • பி.ஏ.ஜே.டி. டி-ப்ரிடாஸ்
 • என்.ஏ. போஸ்டர்
 • ஜே.ஸி. ஸ்மோல்
 • ஈ.ஈ. ஹெம்மிங்

நாணயச்சுழற்சி

தொகு

வெற்றி - ஆத்திரேலியா, முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது.

நடுவர்கள்

தொகு
 • ஆர்.பி. குப்தா,
 • மஹ்பூப்சாஹ் (பாக்கிஸ்தான்)

இறுதிப் போட்டி

தொகு
நவம்பர் 8, 1987
ஆட்டவிபரம்
ஆத்திரேலியா  
253/5 (50 ஓவர்கள்)
  இங்கிலாந்து
246/8 (50 ஓவர்கள்)
டேவிட் பூன் 75 (125)
எடி ஹெமிங்சு 2/48 (10 ஓவர்கள்)
பில் அத்தி 58 (103)
ஸ்டீவ் வா 2/37 (9 ஓவர்கள்)
  ஆத்திரேலியா 7 ஓட்டங்களால் வெற்றி
ஈடன் கார்டன்ஸ், கல்கத்தா, இந்தியா
நடுவர்கள்: ராம் குப்தா, மகபூப் ஷா
ஆட்ட நாயகன்: டேவிட் பூம்

ஆத்திரேலியா அணியின் துடுப்பாட்டம்

தொகு
 • டி.சி. பூன் (பிடி) டவுன்டன் (ப) ஹெம்மிங் 75
 • ஜி.ஆர். மார்ஸ் (ப) போஸ்டர் 24
 • டி.எம்.ஜோன்ஸ் (பிடி) எதே (ப) ஹெம்மிங் 33
 • ஸி.ஜே. மெக்டமோட் (ப) கூச் 14
 • அலன்போடர் (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (ரொபின்சன் / டவுன்டன்) 31
 • எம்.ஆர்.ஜே. வெலட்டா (ஆட்டமிழக்காமல்) 45
 • எஸ்.ஆர். வோக் (ஆட்டமிழக்காமல்) 5

உதிரிகள் - 26

மொத்தம் 5 விக்கட் இழப்புக்கு ( 50 ஓவர்கள்) 253

ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-75 (மார்ஸ்), 2-151 (ஜோன்ஸ்), 3-166 (மெக்டமோட்), 4-168 (பூன்), 5-241 (அலன்போடர்)

துடுப்பெடுத்து ஆடாதவர்கள் எஸ்.பி. டொனல், ஸி.ஜி.டையர், டி.பி.ஏ. மே, பி.ஏ. ரீட்,

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு

 • டி-ப்ரிடாஸ் 6 - 1 - 34 - 0
 • ஜே.ஸி. ஸ்மோல் 6 - 0 - 33 - 0
 • என்.ஏ. போஸ்டர் 10 - 0 - 38 - 1
 • ஈ.ஈ. ஹெம்மிங் 10 - 1 - 48 - 2
 • ஜே.ஈ. எம்புரோ 10 - 0 - 44 - 0
 • ஜி.ஏ. கூச் 8 - 1 - 42 - 1

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம்

தொகு
 • ஜி.எ. கூச் (காலில் பந்துபடல்) (ப) டொனல் 35
 • ஆர்.டி. ரொபின்சன் (காலில் பந்துபடல்) (ப) மெக்டமோட் 0
 • ஸி.டபிள்யு.ஜே. எதே (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (வோக் / ரீட்) 58
 • எம்.டபிள்யு. கெட்டிங் (பிடி) டையர், (ப) அலன்போடர் 41
 • ஏ.ஜே. லேம்ப் (ப) வோக் 45
 • பி.ஆர். டவுன்டன் (பிடி) டொனல் (ப) அலன்போடர் 9
 • ஜே.ஈ. எம்புரோ (ஓடுகையில் ஆட்டமிழந்தமை) (பூன் / மெக்டமோட்) 10
 • பி.ஏ.ஜே.டி. டிப்ரிடாஸ் (பிடி) ரீட் டி வோக் 17
 • என்.ஏ. போஸ்டர் (ஆட்டமிழக்காமல்) 7
 • ஜே.ஸி. ஸ்மோல் (ஆட்டமிழக்காமல்) 3

உதிரிகள் - 21

மொத்தம் 8 விக்கட் இழப்புக்கு ( 50 ஓவர்கள்) 246

ஆட்டமிழந்த ஒழுங்கு: 1-1 (ஆர்.டி. ரொபின்சன்), 2-66 (ஜி.எ. கூச்), 3-135 (கெட்டிங்), 4-170 (எதே), 5-188 (டவுன்டன்), 6-218 (எம்புரோ), 7-220 (லேம்ப்), 8-235 (டிப்ரிடாஸ்)

ஆத்திரேலியா அணியின் பந்து வீச்சு

 • மெக்டமோட் 10 - 1 - 51 - 1
 • பி.ஏ. ரீட் 10 - 0 - 43 - 0
 • வோக் 9 - 0 - 37 - 2
 • டொனல் 10 - 1 - 35 - 1
 • டி.பி.ஏ. மே 4 - 0 - 27- 0
 • அலன்போடர் 7 - 0 - 38 - 2

முடிவு

தொகு

ஆத்திரேலியா 7 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணியை வெற்றி கொண்டது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆத்திரேலியாவைச் சேர்ந்த டேவிட்பூன் தெரிவானார்.

மேற்கோள்கள்

தொகு