தும்பிக்கை குரங்கு
தும்பிக்கை குரங்கு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | செர்கோபித்திசிடே
|
பேரினம்: | நசாலிசு ஜியோப்ரி, 1812[2]
|
இனம்: | ந. லார்வடசு
|
இருசொற் பெயரீடு | |
நசாலிசு லார்வடசு உர்ம்ப்பு, 1787 | |
தும்பிக்கை குரங்கு (Proboscis monkey) அல்லது நீண்ட மூக்கு குரங்கு (நசாலிசு லார்வடசு) என்பது வழக்கத்திற்கு மாறாகப் பெரிய மூக்கு, சிவப்பு-பழுப்பு நிற தோல் மற்றும் நீண்ட வாலினைக் கொண்ட மரங்களில் வாழும் தொல்லுக குரங்கு ஆகும். இது தென்கிழக்கு ஆசியத் தீவான போர்னியோவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. மேலும் இது பெரும்பாலும் சதுப்புநிலக் காடுகளிலும் தீவின் கடலோரப் பகுதிகளிலும் காணப்படுகிறது.[3]
இந்த சிற்றினம் போர்னியோ ஒராங்குட்டான் மற்றும் வெள்ளி நிற லுடங்[4] போன்ற குரங்குகளுடன் இணைந்து வாழ்கிறது.[5][6]
வகைப்பாட்டியல்
தொகுதும்பிக்கை குரங்கு பழைய உலக குரங்குகளின் கொலோபினே துணைக்குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் இரண்டு துணையினங்கள் உள்ளன.[1]
- ந. லா. லார்வடசு (வர்ம்ப், 1787), கம்போடியாவிலிருந்து பிலிப்பீன்சு வரை
- ந. லா. ஓரியண்டலிசு (சேசன், 1940), கலிமந்தான்
இருப்பினும், துணையினங்களுக்கிடையேயான வேறுபாடு சிறியது, மேலும் அனைத்து வகைப்பாட்டியலானோரும் ந. லால். ஓரியண்டலிசு துணையினத்தை அங்கீகரிக்கவில்லை.
நசாலிசு என்ற பேரினத்தின் பெயர் "மூக்கு" என்று பொருள்படும் இலத்தீன் வார்த்தையான நசாசிலிருந்து வந்தது.[7]
இந்த விலங்கு 1781ஆம் ஆண்டில் பரோன் பிரெட்ரிக் வான் வுர்ம்ப் என்பவரால் மேற்கத்தியர்களுக்கு அறியப்பட்டது. பின்னர் இவர் இதன் மாதிரிகளை ஐரோப்பாவில் உள்ள ஸ்டாம்போர்ட் ராபிள்சுக்கு அனுப்பினார்.[8]
விளக்கம்
தொகுதும்பிக்கை குரங்கு ஒரு பெரிய சிற்றினமாகும். இது ஆசியா பூர்வீகமாகக் கொண்ட மிகப்பெரிய குரங்கு சிற்றினங்களில் ஒன்றாகும். திபெத்தியக் குரங்கு மற்றும் ஒரு சில சாம்பல் நிற மந்தி மட்டுமே இதன் அளவிலானவை.
பால் ஈருருமை காணப்படுகிறது. ஆண் குரங்கின் தலை-உடல் நீளம் 66 முதல் 76.2 cm (26.0 முதல் 30.0 அங்) வரையும் எடை 16 முதல் 22.5 kg (35 முதல் 50 lb) வரையில், அதிகபட்ச எடையாக 30 kg (66 lb) உள்ளது. பெண் குரங்கின் நீளம் 53.3 முதல் 62 cm (21.0 முதல் 24.4 அங்) வரையும் உடல் எடை 7 முதல் 12 kg (15 முதல் 26 lb) வரையும் அதிகபட்ச எடையாக 15 kg (33 lb) உள்ளது.[9][10][11] ஆண் குரங்கு கருப்பு நிற விதைப்பையுடன் சிவப்பு நிற ஆண்குறியுடன் உள்ளது.[12]
புரோபோசிசு குரங்கு நீண்ட தோலினைக் கொண்டது. பின்புறத்தில் உள்ள ரோமங்கள் பிரகாசமான ஆரஞ்சு, சிவப்பு பழுப்பு, மஞ்சள் பழுப்பு அல்லது செங்கல்-சிவப்பு நிறத்திலானது.[12][13] அடிப்பகுதி வெளிர் சாம்பல், மஞ்சள் அல்லது சாம்பல் நிறத்தில் வெளிர் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.[12][13] குரங்குக் குட்டிகள் நீல நிற முகத்துடன் பிறக்கின்றன. இவை இரண்டரை மாதங்களில் சாம்பல் நிறமாக மாறும். 8 மாத வயதிற்குள், முகம் பெரியவர்களைப் போலவே நுரை நிறமாக மாறிவிடும்.[14] ஆண் பெண் என இரு குரங்குகளின் வயிறு வீங்கி காணப்படும். இது குரங்குகளுக்குப் பானை வயிற்றை ஒத்ததாக இருக்கும். குரங்குகளின் பல கால்விரல்கள் சவ்வுடன் இணைக்கப்பட்டுள்ளன.[12]
மூக்கு
தொகுஆண் பெண் குரங்குகளுக்கிடையே வேறுபாட்டினைச் சேர்ப்பது ஆண்களின் பெரிய மூக்கு அல்லது தும்பிக்கை ஆகும். இது 10.2 செ. மீ. நீளத்திற்கு மேல் இருக்கலாம். இது வாயிற்கும் கீழே தொங்குகிறது.[15] ஆண் குரங்கின் மூக்கின் நீளத்திற்கான காரணமான கோட்பாடு, இக்குரங்குகள் எழுப்பும் சத்தமான குரல்களை விரும்பும் பெண்களால் பாலியல் தேர்வாக இருக்கலாம் என்பதாகும். மூக்கின் அளவு ஒலியின் அழைப்பின் அளவை அதிகரிக்கும்.[16][12]
பெண் குரங்கின் மூக்கு சிறியதாகவும், இளம் குரங்குகளில் மேல்நோக்கியும் இருக்கும்.[17] இருப்பினும் பெண்ணின் மூக்கு உயர் விலங்குகளின் மூக்கினை விட மிகவும் பெரியதாக இருக்கிறது. தும்பிக்கை குரங்கின் மண்டை ஓடு பெரிய மூக்கைத் தாங்கும் சிறப்பு நாசி குருத்தெலும்பு கொண்டுள்ளது.[3]
பரவலும் வாழிடமும்
தொகுதும்பிக்கை குரங்கு போர்னியோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இவை புரூணை, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய மூன்று நாடுகளிலும் காணப்படுகிறது.[18] இது கடலோரப் பகுதிகளிலும் ஆறுகள் அருகேயும் மிகவும் பொதுவானது.[19] இந்தச் சிற்றினப் பரவல் அலைகளை அனுபவிக்கக்கூடிய தாழ்நில வாழ்விடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.[20][21] இது திப்டெரோகார்ப், சதுப்புநில மற்றும் ஆற்றுக் காடுகள் காணப்படுகிறது.[19] சதுப்பு நிலக் காடுகள், வளர்ச்சியடையாத சதுப்பு நிலக் காடுகள், இரப்பர் காடுகள், இரப்பர் தோட்டங்கள், சுண்ணாம்புக்கல் மலைக் காடுகள் மற்றும் நிபா சதுப்பு நிலங்கள், நிபாங் சதுப்பு நிலங்களும், உயரமான சதுப்பு நிலக்காடுகளும், வெப்பமண்டல வெப்பமண்டலக் காடுகள் மற்றும் செங்குத்தான பாறைகளிலும் இதைக் காணலாம்.[20] இந்த இனம் பொதுவாக நீர் ஆதாரத்திலிருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டருக்குள் இருக்கும். இது விலங்கினங்களில் மிகவும் நீர்வாழ் உயிரினமாகும். மேலும் இது ஒரு நல்ல நீச்சல் செய்யும் விலங்காகும். இது 20 m (66 அடி) மீ (66 ) நீருக்கடியில் நீந்தக்கூடிய திறன் கொண்டது. இது ஆறுகளின் குறுக்கே நீந்துவதாக அறியப்படுகிறது.[20] தும்பிக்கை குரங்கு பெரும்பாலும் மரங்களில் வாழக்கூடியது. மரங்களில் பாய்ச்சல் மூலம் இடம் பெயரக்கூடியது.[9] இது கிளைகளிலிருந்து குதித்து தண்ணீருக்குள் இறங்குவதாக அறியப்படுகிறது.[22]
நடத்தை மற்றும் சூழலியல்
தொகுசமூக நடத்தை
தொகுதும்பிக்கை குரங்குகள் பொதுவாக வயது வந்த ஆண், சில வயது வந்த பெண்கள் மற்றும் அவைகளின் சந்ததியினரைக் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன.[19][22][23] ஒரு குழுவில் காணப்படும் அனைத்துக் குரங்குகளும் ஆண் குரங்குகளாகவும் இருக்கலாம்.[24] சில குரங்குகள் தனிமையில் வாழும் தன்மையுடையன.[25] இவை பெரும்பாலும் ஆண் குரங்குகளாக இருக்கும். குரங்கு குழுக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்த வாழிட வரம்புகளில் வாழ்கின்றன.[19][22] சிறிய பிராந்தியத்துடன், ஒரு பிளவு-இணைவு சமூகத்தில், இரவில் குழுக்கள் தூங்கும் இடங்களில் கூடுகின்றன. இக்குழுக்கள் ஒன்றிணைந்து இனப்பெருக்கமும் செய்யலாம். குழுக்கள் பகலில் கூடி ஒன்றாகப் பயணிக்கின்றன.[23] ஆனால் குழுவிலுள்ளவர்களுடனே இணை சேர்ந்து விளையாடும். ஓர் ஆண் குழுவில் 3 முதல் 19 குரங்குகள் வரை காணப்படும்.[24][19] அதே நேரத்தில் பெரிய குழு 60 நபர்களைக் கூடக் கொண்டிருக்கலாம். குரங்குகளிடையே கடுமையான ஆக்கிரமிப்பு அசாதாரணமானது, ஆனால் சிறிய ஆக்கிரமிப்பு ஏற்படுகிறது.[26] ஒட்டுமொத்தமாக, ஒரே குழுவின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் சகிப்புத்தன்மையுடன் உள்ளன. பெண் குரங்குகளிடையே ஒரு நேரியல் மேலாதிக்க வரிசைமுறை உள்ளது.[22] ஓர் ஆண் தங்கள் குழுக்களில் ஆறு முதல் எட்டு ஆண்டுகள் வரை தங்கலாம். குழுவில் உள்ள ஆண் குரங்கினை எவ்விதப் போட்டியும் இன்றி மாற்றுவது நிகழ்கின்றன.[24] வயது வந்தவுடன், ஆண் குரங்குகள் தங்கள் பிறப்புக் குழுக்களை விட்டு வெளியேறி அனைத்து ஆண் குழுக்களிலும் சேருகின்றன.[19][25] சில நேரங்களில் பெண்கள் தங்கள் பிறப்புக் குழுக்களை விட்டு வெளியேறுகின்றன. அகக் கலப்பினைத் தவிர்ப்பதற்கும், உணவுக்கான போட்டியைக் குறைப்பதற்கும் அல்லது சமூக தகுதியினை உயர்த்துவதற்கும் இவ்வாறு செய்கின்றன.[24][25]
மலேசியாவின் சபாவில், தும்பிக்கை குரங்குகள் கலப்பு இனக் குழுக்களில் வெள்ளி நிற லுடங்சுடன் காணப்படும். மேலும் குறிப்பிட்ட இனச்சேர்க்கை மற்றும் சாத்தியமான கலப்பினக் குரங்குகளும் காணப்படுகின்றன.[6] செம்பனை மரங்களை நடுவதற்காகக் காடழிப்பு காரணமாக இரண்டு சிற்றினங்களும் ஆற்றுக் காடுகளின் ஒரு சிறிய பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.[6]
இனப்பெருக்கம்
தொகுபெண் குரங்குகள் ஐந்து வயதில் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. இவை பாலியல் வீக்கத்தை அனுபவிக்கின்றன. இவற்றின் பிறப்புறுப்புகள் இளஞ்சிவப்பு அல்லது சிவந்து காணப்படும்.[24][27] பெரும்பாலும் பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் கலவி நிகழும், அதே நேரத்தில் குடிகளை மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் ஈணுகின்றன.[28] ஆண் பெண் இணை சேரும் நிகழ்வு அரை நிமிடம் நீடிக்கும்.[22][24] ஆண் பெண் கணுக்கால் அல்லது உடற்பகுதியால் பிடித்து பின்னால் இருந்து கலவி உறுப்பினைப் பெண் உறுப்பினுள் செலுத்தும்.[22] Both sexes will encourage mating, but they are not always successful.[27] இரு பாலினரும் இனச்சேர்க்கைக்கு ஊக்கமளிக்கின்றன; ஆனால் இவை எப்போதும் நிகழும் என்பதில்லை. இனச்சேர்க்கையின் துவக்கமாக இணைகள் முகத்தை உருட்டும். கூடுதலாக, ஆண்கள் சில நேரங்களில் குரல் கொடுப்பார்கள், பெண் குரங்குகள் தங்கள் முதுகெலும்புகளை முன்வைத்து தலையை ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு அசைப்பார்கள்.[19][27][28][14] இனச்சேர்க்கை இணைகள் சில நேரங்களில் பாலியல் முதிர்ச்சியடைந்த பிற குரங்குகளால் துன்புறுத்தப்படுகின்றன.[27] தும்பிக்கை குரங்குகள் இனப்பெருக்க நோக்கம் இல்லாமல் கலவியில் ஈடுபடலாம். அதாவது விளையாட்டுத்தனமான மற்றும் ஒரே பாலின ஏற்றம், மற்றும் பெண்கள் கருத்தரித்த பிறகும் உடலுறவு கொள்ள முயற்சித்தலும் நடைபெறும்.[14] கருவுறுதல் பொதுவாக 166-200 நாட்கள் அல்லது சற்று அதிகமாக நீடிக்கும்.[28] பெண் குரங்குகள் இரவில் அல்லது அதிகாலையில் பிரசவிக்க முனைகின்றன. குட்டிகளை ஈன்ற பின்னர் நஞ்சுக்கொடியைச் சாப்பிட்டு தங்கள் குழந்தைகளைச் சுத்தமாக நக்கி எடுக்கின்றன.[29] இளம் குழந்தைகள் ஆறு வாரங்களில் திடமான உணவினைச் சாப்பிடத் தொடங்குகின்றன. மேலும் ஏழு மாத வயதில் பாலூட்டுகின்றன. ஓர் இளம் ஆணின் மூக்கு வயது வரும் வரை மெதுவாக வளரும். தாய் தனது குழுவின் மற்ற உறுப்பினர்களைத் தனது குட்டியினைப் பிடிக்க அனுமதிக்கும்.[22][28][29] ஓர் ஆண் குழுவில் வசிக்கும் ஆண் மாற்றப்படும்போது, குட்டிகள் சிசுக்கொலை அபாயத்தில் உள்ளன[30]
தொடர்பு
தொகுதும்பிக்கை குரங்குகள் பல்வேறு ஓசைகளை எழுப்புவதாக அறியப்படுகிறது. குழுவின் நிலையைத் தொடர்பு கொள்ளும்போது, ஆண்கள் ஓசையினை வெளியிடும். இவை குட்டிகளுக்காக ஒரு சிறப்பு அழைப்பினை வெளியிடும். இது உத்தரவாதத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆபத்தைச் சமிக்ஞை செய்ய ஆண்கள் விழிப்புணர்வு அல்லது எச்சரிக்கை அழைப்புகளை உருவாக்கும். இரு பாலினரும் அச்சுறுத்தும் அழைப்புகளை வழங்கும். ஆனால் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. கூடுதலாக, பெண் குரங்குகள் மற்றும் முதிர்ச்சியடையாத குரங்குகள் கோபப்படும்போது "பெண் அழைப்புகள்" என்று அழைக்கப்படுவதை வெளியிடும்.[31] தீவிரம் குறைந்த வேதனையான சந்திப்புகளின் போது ஓசை, கர்ஜனைகள் மற்றும் முனகல் செய்யப்படும். குரலற்ற காட்சிகளில் குதிக்கும்-கிளை அதிர்வு, வெற்று-பற்கள் திறந்த வாய் அச்சுறுத்தல்கள் மற்றும் ஆண்களில் விறைப்பு ஆகியவை அடங்கும், இவை இதே சூழ்நிலைகளில் செய்யப்படுகின்றன.[22]
உணவு
தொகுபருவகால இலை மற்றும் பழம் உண்ணும் விலங்காக, தும்பிக்கை குரங்கு அறியப்படுகிறது.[22] இவை முதன்மையாகப் பழங்கள் மற்றும் இலைகளைச் சாப்பிடுகிறது. இது பூக்கள், விதைகள் மற்றும் பூச்சிகளையும் குறைந்த அளவில் சாப்பிடுகிறது. குறைந்தது 55 வெவ்வேறு தாவரங்களை உணவாக நுகருகின்றன. யூஜீனியா சிற்றினம், கனுவா மோட்ட்லேயானா மற்றும் லோபோபெடாலம் ஜாவனிகம் ஆகியவற்றைக் குறிப்பிடத்தக்க முன்னுரிமையுடன் உண்ணுகின்றன.[32] முதிர்ந்த இலைகளை விட இளம் இலைகள் விரும்பி உண்ணப்படுகின்றன. மேலும் பழுத்த பழங்களை விடப் பழுக்காத பழங்களை விரும்புகின்றன.[22] பருவகால உணவு உண்ணும் குரங்காக இருப்பதால், தும்பிக்கை குரங்கு பெரும்பாலும் சனவரி முதல் மே வரை பழங்களைச் சாப்பிடுகிறது. பெரும்பாலும் சூன் முதல் திசம்பர் வரை இலைகளை உண்ணும்.[32] குழுக்கள் பொதுவாக அருகிலுள்ள மரங்களில் தூங்குகின்றன.[33] குரங்குகள் அருகிலேயே இருந்தால், இவை ஆறுகளின் அருகே தூங்க முனைகின்றன. தும்பிக்கை குரங்குகள் பகல் முழுவதும் வேட்டையாடி, ஓய்வெடுக்கும். இவற்றின் அன்றாட நடவடிக்கைகளில் ஓய்வு, பயணம், உணவு மற்றும் விழிப்புடன் இருப்பது ஆகியவை அடங்கும்.[22] எப்போதாவது, இவை உணவினை அசைபோடும்.[34] இரவு நெருங்கும்போது, குரங்குகள் மீண்டும் ஆற்றின் அருகே சென்று தீவனம் சேகரிக்கின்றன. தும்பிக்கை குரங்கினை வேட்டையாடும் விலங்குகளாக (தும்பிக்கை குரங்கின் சாத்தியக்கூறு அல்லது உறுதிப்படுத்தப்பட்டவை) முதலைகள் மற்றும் உவர் நீர் முதலைகள், சுந்தா பனிச் சிறுத்தை, சூரிய கரடிகள் மற்றும் வலையூட்டப்பட்ட மலைப்பாம்புகள் மற்றும் இளம் அல்லது நோய்வாய்ப்பட்ட குரங்குகள், கழுகுகள், பெரிய நிசேடசு, ஹாலியேடசு, கொண்டை பாம்புண்ணிக் கழுகு அல்லது கருங் கழுகுகள்-பெரிய ஆந்தைகள் மற்றும் உடும்பு ஆகியவை அடங்கும்.[35][36] குரங்குகள் குறுகிய இடங்களில் ஆற்றைக் கடக்கும் அல்லது முடிந்தால் தாவரக் காடுகளைக் கடக்கும். இது வேட்டையாடுதலைத் தவிர்க்கும் செயலாகும்.[37]
பாதுகாப்பு நிலை
தொகுதும்பிக்கை குரங்கு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் ஆபத்தானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பன்னாட்டு வர்த்தகத்தின் அச்சுறுத்தல்களிலிருந்து அழிந்து வரும் தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தின் இணைப்பு I-இல் பட்டியலிடப்பட்டுள்ளது. மரம் வெட்டுதல் மற்றும் எண்ணெய் பனை தோட்டங்கள் காரணமாகத் தொடர்ச்சியான வாழ்விட இழப்பு மற்றும் சில பகுதிகளில் வேட்டையாடுதல் காரணமாகக் கடந்த 2008 ஆண்டுகளில் இதன் மொத்த எண்ணிக்கை 50%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. மேலும் இது ஒரு சுவையான உணவாகக் கருதப்படுகிறது. அதே போல் பாரம்பரியச் சீன மருத்துவத்தில் தும்பிக்கை குரங்கு பயன்படுத்தப்படுகிறது.[14] இதன் மக்கள்தொகை துண்டுத் துண்டாக உள்ளது. ஒரு பெரிய எண்ணிக்கையிலான குரங்குகள் கலிமந்தானில் காணப்படுகிறது. சரவாக், புரூணை மற்றும் சபா பகுதிகளில் இவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவு.[1] போர்னியோவின் அனைத்துப் பகுதிகளிலும் தும்பிக்கை குரங்கு சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. மலேசியாவில், இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (கூட்டாட்சி சட்டம்) வனவிலங்கு பாதுகாப்புப் அவசரச் சட்டம் 1998 (அத்தியாயம் 26) மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் 1997 (சபா மாநிலச் சட்டம்) உள்ளிட்ட பல சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது.
இந்தோனேசியாவில் உள்ள தானாவ் சென்டரம் தேசிய பூங்கா, குனுங் பாலுங் தேசியப் பூங்கா, கெண்டவங்கன் இயற்கை காப்பகம், குட்டாய் தேசிய பூங்கா, லெசன் பாதுகாப்பு காடு, முரா கமான் இயற்கை காப்பணம், மாண்டோர் காப்பகம் மற்றும் தஞ்சங் புட்டிங் தேசியப் பூங்கா, பகோ தேசியப் பூங்கா, குணங் பியூக் வன காப்பகம், கபிலி-செபிலோக் வன காப்பகம். கிளியாசு தேசிய பூங்கா, குலம்பா வனவிலங்கு காப்பகம், கீழ் கினபடங்கன் வனவிலங்கு சரணாலயம், சுங்கேய் சாமுன்சாம் வனவிலங்கு வனவிலங்கு அபயாரண்யஂ மற்றும் மலேசியாவில் உள்ள உலு செகாமா காப்பகம் ஆகிய 16 பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தும்பிக்கை குரங்கைக் காணலாம்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Boonratana, R.; Cheyne, S.M.; Traeholt, C.; Nijman, V.; Supriatna, J. (2021). "Nasalis larvatus". IUCN Red List of Threatened Species 2021: e.T14352A195372486. doi:10.2305/IUCN.UK.2021-1.RLTS.T14352A195372486.en. https://www.iucnredlist.org/species/14352/195372486. பார்த்த நாள்: 17 January 2022.
- ↑ Groves, C. P. (2005). "Order Primates". In Wilson, D. E.; Reeder, D. M (eds.). Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ed.). Johns Hopkins University Press. pp. 168–169. ISBN 978-0-8018-8221-0. OCLC 62265494.
- ↑ 3.0 3.1 "Proboscis monkey". Animal Diversity Web. December 2019. பார்க்கப்பட்ட நாள் 11 December 2019.
- ↑ "Conservation of the Proboscis Monkey and the Orangutan in Borneo: Comparative Issues and Economic Considerations". Working Papers on Economics, Ecology and the Environment. March 2007. http://ageconsearch.umn.edu/bitstream/55097/2/WP138.pdf.
- ↑ Bradon-Jones D.; Eudey A. A.; Geissmann T.; Groves C. P.; Melnick D. J.; Morales J. C.; Shekelle M.; Stewart C. B. (2004). "Asian primate classification". International Journal of Primatology 25: 97–164. doi:10.1023/B:IJOP.0000014647.18720.32.
- ↑ 6.0 6.1 6.2 Lhota, S.; Yap, J.L.; Benedict, M.L. et al. (2022). "Is Malaysia's "mystery monkey" a hybrid between Nasalis larvatus and Trachypithecus cristatus? An assessment of photographs". International Journal of Primatology 43 (3): 513–532. doi:10.1007/s10764-022-00293-z. பப்மெட்:35498121.
- ↑ "nāsus".. (1879). Perseus Digital Library.
- ↑ Lydekker, Richard, ed. (1894). The Royal Natural History. New York, USA: Frederick Warne & Co. pp. 84–85.
- ↑ 9.0 9.1 Napier, J. R.; Napier, P. H. (1985). 'The Natural History of the Primates. Cambridge, Massachusetts, USA: MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0262640333.
- ↑ "Primate Factsheets: Proboscis monkey (Nasalis larvatus) Taxonomy, Morphology, & Ecology". Primate Info Net. University of Wisconsin–Madison. n.d. பார்க்கப்பட்ட நாள் 21 August 2012.
- ↑ "Up Close With Borneo Primates". Special Features. Brudirect. 2 July 2012. பார்க்கப்பட்ட நாள் 21 August 2012.
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 Ankel-Simons F. (2007) Primate Anatomy: an introduction, 3rd Ed.
- ↑ 13.0 13.1 Payne, J.; Francis, C. M.; Phillips, K. (1985). A field guide to the mammals of Borneo. Kuala Lumpur, Malaysia: World Wildlife Fund Malaysia & The Sabah Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9679994716.
- ↑ 14.0 14.1 14.2 14.3 Woltanski, Amy (2004). "Nasalis larvatus (proboscis monkey)". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. பார்க்கப்பட்ட நாள் 15 March 2017.
- ↑ Ellis, D. (1986). "Proboscis monkey and aquatic ape". Sarawak Museum Journal 36 (57): 251–262.
- ↑ "Proboscis Monkey". World Land Trust. பார்க்கப்பட்ட நாள் 2017-03-15.
- ↑ "proboscis monkey". www.britannica.com. Encyclopedia Britannica Inc. 19 Feb 2020. பார்க்கப்பட்ட நாள் 11 Feb 2022.
- ↑ Bradon-Jones D.; Eudey A. A.; Geissmann T.; Groves C. P.; Melnick D. J.; Morales J. C.; Shekelle M.; Stewart C. B. (2004). "Asian primate classification". International Journal of Primatology 25 (1): 97–164. doi:10.1023/B:IJOP.0000014647.18720.32.
- ↑ 19.0 19.1 19.2 19.3 19.4 19.5 19.6 Bennett E. L., Gombek F. (1993) Proboscis monkeys of Borneo. Sabah (MY):Koktas Sabah Berhad Ranau.
- ↑ 20.0 20.1 20.2 Sebastian A. C. (2000). "Proboscis monkeys in Danau Sentarum National Park". Borneo Research Bulletin 31: 359–371.
- ↑ Kawabe M.; Mano T. (1972). "Ecology and behavior of the wild proboscis monkey, Nasalis larvatus (Wurmb) in Sabah, Malaysia". Primates 13 (2): 213–228. doi:10.1007/BF01840882.
- ↑ 22.00 22.01 22.02 22.03 22.04 22.05 22.06 22.07 22.08 22.09 22.10 Boonratana R. (1993). The ecology and behaviour of the proboscis monkey (Nasalis larvatus) in the lower Kinabatangan, Sabah (PhD). Mahidol University.
- ↑ 23.0 23.1 Boonratana R. (2002). "Social organisation of proboscis monkeys (Nasalis larvatus) in the lower Kinabatangan, Sabah, Malaysia". Malay Nat. Journal 56 (1): 57–75.
- ↑ 24.0 24.1 24.2 24.3 24.4 24.5 Murai, T. (2004). "Social behaviors of all-male proboscis monkeys when joined by females". Ecological Research 19 (4): 451–454. doi:10.1111/j.1440-1703.2004.00656.x.
- ↑ 25.0 25.1 25.2 Boonratana R. (1999). "Dispersal in proboscis monkeys (Nasalis larvatus) in the lower Kinabatangan, Northern Borneo". Tropic Biodiversity 6 (3): 179–187. https://www.researchgate.net/publication/225088971.
- ↑ Yeager C. P. (1992). "Proboscis monkey (Nasalis larvatus) social organization: nature and possible functions of intergroup patterns of association". Am. Journal of Primatologyy 26 (2): 133–137. doi:10.1002/ajp.1350260207. பப்மெட்:31948161.
- ↑ 27.0 27.1 27.2 27.3 Murai T. (2006). "Mating behaviors of the proboscis monkey (Nasalis larvatus)". Am. Journal of Primatology 68 (8): 832–837. doi:10.1002/ajp.20266. பப்மெட்:16847976.
- ↑ 28.0 28.1 28.2 28.3 Rajanathan R.; Bennett E. L. (1990). "Notes on the social behaviour of wild proboscis monkeys (Nasalis larvatus)". Malay Nat. Journal 44 (1): 35–44.
- ↑ 29.0 29.1 Gorzitze A. B. (1996). "Birth-related behavior in wild proboscis monkeys (Nasalis larvatus)". Primates 37 (1): 75–78. doi:10.1007/BF02382922.
- ↑ Agoramoorthy G.; Hsu M. J. (2004). "Occurrence of infanticide among wild proboscis monkeys (Nasalis larvatus) in Sabah, Northern Borneo". Folia Primatol. 76 (3): 177–179. doi:10.1159/000084380. பப்மெட்:15900105.
- ↑ Messeri P.; Trombi M. (2000). "Vocal repertoire of proboscis monkey (Nasalis larvatus, L.) in Sarawak". Folia Primatol. 71 (4): 268–287.
- ↑ 32.0 32.1 Yeager C. P. (1989). "Feeding ecology of the proboscis monkey (Nasalis larvatus)". International Journal of Primatology 10 (6): 497–530. doi:10.1007/BF02739363.
- ↑ Yeager C. P. (1990). "Proboscis monkey (Nasalis larvatus) social organization: group structure". American Journal of Primatology 20 (2): 95–106. doi:10.1002/ajp.1350200204. பப்மெட்:31963992.
- ↑ Matsuda, I.; Murai, T.; Clauss, M.; Yamada, T.; Tuuga, A.; Bernard, H.; Higashi, S. (2011). "Regurgitation and remastication in the foregut-fermenting proboscis monkey (Nasalis larvatus)". Biology Letters 7 (5): 786–789. doi:10.1098/rsbl.2011.0197. பப்மெட்:21450728.
- ↑ Feilen, K. L.; Marshall, A. J. (2014). "Sleeping site selection by proboscis monkeys (Nasalis larvatus) in West Kalimantan, Indonesia". American Journal of Primatology 76 (12): 1127–1139. doi:10.1002/ajp.22298. பப்மெட்:24810395.
- ↑ Stuebing, R. B.; Bezuijen, M. R.; Auliya, M.; Voris, H. K. (2006). "The current and historic distribution of Tomistoma schlegelii (the False Gharial)(Müller, 1838)(Crocodylia, Reptilia)". The Raffles Bulletin of Zoology 54 (1): 181–197.
- ↑ Yeager C. P. (1991). "Possible antipredator behavior associated with river crossings by proboscis monkeys (Nasalis larvatus)". American Journal of Primatology 24 (1): 61–66. doi:10.1002/ajp.1350240107.
வெளி இணைப்புகள்
தொகு- ARKive – images and movies of the Proboscis monkey (Nasalis larvatus)
- Primate Info Net Nasalis Factsheets
- Save the Proboscis Monkeys Petition and weblog with info on the rare, endangered species.
- A Video about proboscis monkeys by National Geographic
- John C. M. Sha, Ikki Matsuda & Henry Bernard (2011) The Natural History of the Proboscis Monkey
- John C. M. Sha, Henry Bernard, and Senthival Nathan (2008) Status and Conservation of Proboscis Monkeys in Sabah, East Malaysia