தூய அன்னா
கிறிஸ்தவ பாரம்பரியத்தின் படி, தூய அன்னா என்பவர் மரியாவின் தாயும் இயேசுவின் தாய்வழிப் பாட்டியும் ஆவார். மரியாவின் தாய் பெயர் நியமன நற்செய்திகளில் குறிப்பிடப்படவில்லை. அன்னா மற்றும் அவரது கணவர் யோவாக்கீம் ஆகியோரின் பெயர்கள் புதிய ஏற்பாட்டுக்கு வெளியே உள்ள நூல்களில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள் யாக்கோபு நற்செய்தி (ஏறக்குறைய கி.பி. 150இல் எழுதப்பட்ட நூல்) அவர்ககள் இருவரையும் குறிப்பிடும் மிகப்பழைய நூலாகும். குர்ஆனில் மரியாவின் தாயார் குறிப்பிடப்பட்டுள்ளார், ஆனால் பெயரிடப்படவில்லை.
அன்னா | |
---|---|
![]() "கன்னி மரியாவுடன் தூய அன்னா"வைக் குறிக்கும் கிரேக்க திருவோவியம், ஓவியர்: ஏஞ்சலோஸ் அகொடன்டோஸ் | |
கன்னியின் தாய், தாய்மையின் நாயகி | |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை கத்தோலிக்க கீழைத்திருச்சபைகள் கிழக்கு மரபுவழி திருச்சபை ஓரியன்டல் மரபுவழி திருச்சபை ஆங்கிலிக்க ஒன்றியம் லூதரனியம் இஸ்லாம் ஆப்பிரிக்க-அமெரிக்க சமயங்கள் |
திருவிழா | 26 ஜூலை (கத்தோலிக்க திருச்சபை),[1] 09 செப்டம்பர் (கிழக்கு மரபுவழி திருச்சபை)[2] 09 டிசம்பர் (மரபுவழி) மிகத்துாய இறைவனின் தாயைக் கருத்தரித்த தூய அன்னா |
சித்தரிக்கப்படும் வகை | புத்தகம்; கதவு; மரியா, இயேசு அல்லது யோவாக்கீம் உடன்; சிவப்பு அல்லது பச்சை உடையணிந்த பெண்[3] |
பாதுகாவல் | பெற்றோரின் பெற்றோர் |