தூய பவுல் தேவாலயம், மேல இலந்தைகுளம்

தூய பவுல் தேவாலயம் தமிழ் நாடு, திருநெல்வேலி மாவட்டம், மேல இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆரம்ப கிறித்தவ மறைப் பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படும் திருத்தூதர் பவுலின் பெயரில் உள்ளது[1]. மேலும் இத் தேவாலயமானது தென்னிந்தியா திருச்சபையின் திருநெல்வேலி மறைமாவட்டத்தின் கீழ் உள்ள தேவாலயம் ஆகும்.[2]

தூய பவுல் தேவாலயம் (சீ.எஸ்.ஜ)
மேல இலந்தைக்குளம்
தூய பவுல் தேவாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மேல இலந்தைகுளம், : திருநெல்வேலி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்8°56′34″N 77°41′09″E / 8.9428°N 77.6858°E / 8.9428; 77.6858
சமயம்தென்னிந்தியத் திருச்சபை
நிலைஇளம் தேவாலயம்
செயற்பாட்டு நிலைநடப்பில் உள்ளது
பாரம்பரியகளமாக அறிவிக்கப்பட்டதுகிராம வழிபாட்டுத்தலம்

வரலாறு

தொகு

திருநெல்வேலி திருமண்டலம் மேல இலந்தைகுளம் சேகரம்மான தூய பவுல் தேவாலயம் 1903, டிசம்பர் 28 இல் கட்டப்பட்டது. ஆரம்பகாலத்தில் இது சிறிய ஆலயமாக இருந்தது. பின்பு இவ்வூர் கிறித்தவ மக்களினால் 2005 ஆம் ஆண்டு ஆலயக் கோபுரப் பணி ஆரம்பிக்கப்பட்டு, 2007 மே 20 ஆம் நாள் ஆலயக் கோபுரம் பிரதிட்டை செய்யப்பட்டது. கோபுரத்தின் நீளம் : 50.4 மீட்டர் (165 அடி) அகலம் : 10.3 மீட்டர் (34 அடி) ஆகும். இந்த ஆலயத்தின் கிளை திருச்சபைகள் மானூர், இரண்டும் சொல்லான் ஆகியவைகள் இதன் கீழ் செயல்படுகின்றது.

திருவிழா சிறப்புகள்

தொகு

ஒவ்வொரு ஆண்டும். , மே 20 முதல் தொடர்ந்து. 7 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக முதலாம் நாள் பஜனை ஆராதனையும். இரண்டாவது நாளாக நற்செய்தி கூட்டம் அதைத் தொடர்ந்து. பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழச்சிகள் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் மறுநாள் ஊர் மக்களுக்கு விருந்து உபசரிப்பு விழா நடைபெறும். திருவிழாவின் போது நடைபெறும் வாணவேடிக்கை சிறப்பாக இருக்கும். மும்பை, சென்னை போன்ற நாட்டின் பல ஊர்களுக்கு தொழில் காரணமாகச் சென்றுள்ள இந்த ஊரைச் சேர்ந்த பலரும் இந்த திருவிழாவின் போது சொந்த ஊருக்கு வந்து விடுகிறார்கள்.

ஆலயமணி

தொகு

இந்த ஆலயத்தின் உட்புறக் கோபுர உச்சியில், உள்புறமாக ராட்சத மணிக்கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. இந்த மணி ஆராதனைக்கு முன்னதாக அறிவிப்பிற்காக இரண்டு முறை மணி அடிக்கப்படும். மற்றும் தினந்தோறும் காலை 4.30, இரவு 7.30 மணிக்கும் மணி ஒலிக்கப்படும். அது மட்டும்மல்லாமல் ஊரில் தீ விபத்து மற்றும் ஆபத்து, அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக ஆலயமணி ஒலிக்கப்படுகிறது. உடனே ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து ஆபத்துக்களை தடுப்பார்கள். மற்றும் திருமண ஆராதனைக்காகவும், இறந்தவர்களுக்காக துக்கமணி ஒலிக்கப்படுகின்றது.

ஆதாரம்

தொகு
  1. http://www.csitirunelveli.org/pastorat/pastorate-links.html[தொடர்பிழந்த இணைப்பு]
  2. புனித பவுல் தேவாலயம், மேல இலந்தைகுளம். (1903), இந்த தேவாலயம் தென்னிந்தியத் திருச்சபையின் கீழ் செயல்படுகின்றது, மேல இலந்தைகுளம், தமிழ் நாடு, archived from the original on 7 May 2012, பார்க்கப்பட்ட நாள் 23 April 2012{{citation}}: CS1 maint: location missing publisher (link)