மேல இலந்தைகுளம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்


மேல இலந்தைக்குளம் (ஆங்கிலம் : Mela Ilandaikulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

மேல இலந்தைக்குளம்
மேல இலந்தைக்குளம்
அமைவிடம்: மேல இலந்தைக்குளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°56′34″N 77°41′09″E / 8.9428°N 77.6858°E / 8.9428; 77.6858
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் மானூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்களவைத் தொகுதி தென்காசி
மக்களவை உறுப்பினர்

இராணி சிறீகுமார்

சட்டமன்றத் தொகுதி சங்கரன்கோவில்
சட்டமன்ற உறுப்பினர்

இ. ராஜா (திமுக)

மக்கள் தொகை 3,824 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


475 மீட்டர்கள் (1,558 அடி)

தொலைவு(கள்)
குறியீடுகள்

வரலாறு

தொகு

மேல இலந்தைகுளம் அல்லது மேல இலந்தைக்குளம். இவ்வூருக்கு இந்தப் பெயர் வர இந்த ஊரில் உள்ள மூன்று கிமீ நீளமும் இரண்டு கிமீ அகலமும் கொண்ட குளமும் ஒரு காரணமாகும். இந்தக் குளத்தில் சேமிக்கப்படும் மழை நீர் விவசாயத்துக்கு மிகவும் பயனுடையதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்தக் குளத்தில் இலந்தை மரங்கள் அதிகம் உள்ளதால் இந்த ஊருக்கு இலந்தைகுளம் என பெயர் வந்தது.

மக்கள்வகைப்பாடு

தொகு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2011 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு அறிக்கையின்படி 3824 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 1897 பேர் ஆண்கள், 1927 பேர் பெண்கள் ஆவார்கள். மேல இலந்தைகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 74.28% ஆகும். மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகள்-180, பெண் குழந்தைகள்-207, ஆவார்கள்.

சமயங்கள் மற்றும் திருவிழாக்கள்

தொகு

  தேவாலயங்கள்

மேலும் இவ்விரு திருச்சபையின் திருவிழாக்களை இவ்வூரில் வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களால் ஆண்டுதோறும் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.


  இந்து கோயில்கள்

  • மேல இலந்தைக்குளம் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோவில் கொடை விழாவானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நாடார் சமுதாய மக்களால் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும்.

  பள்ளிவாசல்(மசூதி)

இந்த ஊரின் வடதிசை மத்தியில் ஒரு பழமை வாய்ந்த பள்ளிவாசல்(மசூதி) உள்ளது. இந்த ஊரில் முஸ்லிம்கள் இல்லை. இருப்பினும் பக்கத்துக் கிராமங்களில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் இங்கு வருடம் தோறும் டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி அன்று சந்தனக் கூடு என்னும் திருவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடுவார்கள்.

பள்ளிக்கூடங்கள்

தொகு

மின்சாரம் தயாரிப்பு

தொகு

இந்த ஊரினைச் சுற்றி நான்கு திசையிலும் இந்திய நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்திற்க்குச் சொந்தமான சுமார் ஐந்நூறுக்கும் அதிகமான மின்சாரக் காற்றாடி அமைக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. ஒரு காற்றாடியின் மூலம் சுமார் 600 முதல் 2100 கிலோ வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.

படத்தொகுப்புகள்

தொகு

ஆதாரம்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.voiceofbharat.org/tirunelveli/view_results.asp?NAME=&sorttype=ASC&NAV=6&sortid=LEVEL - 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல_இலந்தைகுளம்&oldid=4124327" இலிருந்து மீள்விக்கப்பட்டது