தூலியம் நைட்ரைடு
வேதிச் சேர்மம்
தூலியம் நைட்ரைடு (Thulium nitride) என்பது TmN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். தூலியமும் நைட்ரசனும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசானிலிடைன்தூலியம்
| |
வேறு பெயர்கள்
தூலியம் மோனோநைட்ரைடு
தூலியம்(III) நைட்ரைடு | |
இனங்காட்டிகள் | |
12033-68-0 | |
ChemSpider | 74747 |
EC number | 234-791-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82834 |
| |
பண்புகள் | |
NTm | |
வாய்ப்பாட்டு எடை | 182.937 |
அடர்த்தி | 9.321 கி/செ.மீ3 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | TmP TmAs |
ஏனைய நேர் மின்அயனிகள் | ErN YbN |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉயர் வெப்பநிலையில் தூலியம் இரசக்கலவையுடன் நைட்ரசனைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் தூலியம் நைட்ரைடு உருவாகும்.
இயற்பியல் பண்புகள்
தொகுFm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத்திட்டத்தில் சோடியம் குளோரைடு போன்ற படிகமாக தூலியம் நைட்ரைடு படிகமாகிறது.[2][3]
வேதிப் பண்புகள்
தொகுதூலியம் நைட்ரைடு 1220 கெல்வின் வெப்பநிலையில் Tm2In சேர்மத்துடன் வினைபுரிந்து (Tm3N)In. சேர்மமாக உருவாகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ B. Magyar. Preparation of rare earth nitrides from amalgams. Inorganic Chemistry. 1968 7 (7), 1457-1458 எஆசு:10.1021/ic50065a041
- ↑ Panwar, Yeshvir Singh; Aynyas, Mahendra; Tejraj, M. K.; Sanyal, S. P. (2014). "Pressure Induced Structural and Electronic Properties of Thulium Nitride" (in en). Advanced Materials Research 1047: 147–150. doi:10.4028/www.scientific.net/AMR.1047.147. பன்னாட்டுத் தர தொடர் எண்:1662-8985. https://www.scientific.net/AMR.1047.147.
- ↑ "Magnetic Characteristics of Gadolinium, Praseodymium, and Thulium Nitrides". pubs.aip.org. பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
- ↑ Martin Kirchner, Walter Schnelle, Frank R. Wagner, Rainer Niewa. Preparation, crystal structure and physical properties of ternary compounds (R3N)In, R=rare-earth metal. Solid State Sciences, 2003. 1247-1257. எஆசு:10.1016/S1293-2558(03)00151-1