தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனை

தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனை அல்லது கிள்ளான் மருத்துவமனை (மலாய்: Hospital Besar Tengku Ampuan Rahimah, Klang அல்லது Hospital Tengku Ampuan Rahimah; ஆங்கிலம்: Tengku Ampuan Rahimah (TAR) Hospital) அல்லது Klang General Hospital (Klang GH) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம், கிள்ளான் நகர்ப் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஆகும்.[1]

தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனை
Hospital Tengku Ampuan Rahimah
Klang General Hospital
கிள்ளான் தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனையின் முதன்மைக் கட்டிடம்
அமைவிடம் லங்காட் சாலை, கிள்ளான், சிலாங்கூர்
Jalan Langat, Klang, Selangor,
மருத்துவப்பணி பொது நிபுணத்துவ மருத்துவமனை
நிதி மூலதனம் மலேசிய அரசு நிதியுதவி
வகை முழு சேவை மருத்துவமனை
இணைப்புப் பல்கலைக்கழகம் மருத்துவத் துறை; மலாயா பல்கலைக்கழகம்
மலேசிய மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம்
(Management and Science University Malaysia)
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
படுக்கைகள் 1258[1]
நிறுவல் 1985
வலைத்தளம் [htar.moh.gov.my தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனை
Hospital Tengku Ampuan Rahimah
Klang General Hospital]
Map
தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனை அமைவிடம்

சிலாங்கூர், கிள்ளான் மாவட்டத்தின் தெற்கில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, கிள்ளான் பகுதியில் இருந்து வரும் நோயாளிகளுக்கு சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது. அத்துடன் பந்திங் மருத்துவமனை, சா ஆலாம் மருத்துவமனை, காஜாங் மருத்துவமனை, மற்றும் கோலா சிலாங்கூர் மருத்துவமனை போன்ற பிற மருத்துவமனைகளில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் மருத்துவச் சேவைகளை வழங்குகிறது.[2]

பொது

தொகு

1258 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 4,025 (2016) மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். உள்நோயாளிகள் சேர்க்கை (Inpatients admission) மற்றும் வெளிநோயாளிகளுக்கான (Outpatients) மருத்துவ வசதிகளின் அடிப்படையில் மலேசியாவில் இரண்டாவது பரபரப்பான மருத்துவமனையாக அறியப்படுகிறது.[3][4]

இந்த மருத்துவமனை முதன்மை நிலை; மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்புச் சேவைகளை வழங்குகிறது. 1985-இல் செயல்படத் தொடங்கிய இந்த மருத்துவமனை, இசுதானா ஆலாம் சா அரண்மனைக்கும் மற்றும் பண்டார் புக்கிட் திங்கி நகரத்திற்கும் மிக அருகில் அமைந்துள்ளது. சிலாங்கூர் சுல்தான் சலாவுதீனின் மனைவி தெங்கு அம்புவான் ரகிமாவின் (Tengku Ampuan Rahimah) நினைவாக இந்த மருத்துவமனைக்குப் பெயரிடப்பட்டது.

அவசரகால சேவைகள்

தொகு

தெங்கு அம்புவான் ரகிமா பொது மருத்துவமனையானது 28 நோயாளிக் கூடங்களை (வார்டுகள்) கொண்ட மலேசிய அரசாங்க மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனை ஏறக்குறைய 1258 உள்நோயாளிகள் படுக்கைகள் மற்றும் 20 மருத்துவப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 2020-ஆம் ஆண்டில் 79729 பேர் நோயாளிகள் படுக்கைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 22,000 நோயாளிகள் மருத்துவச் சிகிச்சை பெறுகின்றனர். மற்றும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 20 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன.

1998-இல் ஐஎஸ்ஓ 9000 (MS ISO 9001) தர அமைப்புச் சான்றிதழ் விருதைப் பெற்ற இந்த மருத்துவமனை நடமாடும் சேவைகளிலும் கவனம் செலுத்துகிறது. மற்றும் அவசரகால சேவைகளுக்காக உலங்கூர்தித் தளமும் இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. மலாயா பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவக் கற்பித்தல் வசதியும் தெங்கு அம்புவான் ரகிமா மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.

புள்ளிவிவரங்கள்

தொகு

2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்[5]

  • படுக்கைகள் - 1,258
  • அறுவை சிகிச்சைகள் - 20,895
  • பிரசவங்கள் - 12,801
  • அவசரப் பிரிவு சிகிச்சை - 123,268
  • ஒவ்வொரு நாளும் சிகிச்சை பெற்றவர்கள் - 21,789
  • ஊடுகதிரியக்கப் பிரிவு சிகிச்சை - 213,481
  • ஆய்வகச் சோதனைகள் - 5,071,629
  • உடலியல் மருத்துவம் - 193,670
  • மருத்துவமனையில் இறப்புகள் - 2076

காட்சியகம்

தொகு

முகவரி

தொகு

Hospital Tengku Ampuan Rahimah
Jalan Langat, 41200 Klang, Selangor
Tel : +603-3375 7000
Faks : +603 3181 8834
Email : MyGovUC 2.0
இணையத் தளம்: htar.moh.gov.my

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Official Beds In HTAR". jknselangor.moh.gov.my. பார்க்கப்பட்ட நாள் 16 July 2024.
  2. "HTAR received patients from other district hospitals of its surrounding area such as Banting and Shah Alam as well as areas such as far as Kuala Langat and Kuala Selangor". jknselangor.moh.gov.my. பார்க்கப்பட்ட நாள் 16 July 2024.
  3. "Government hospitals in Klang Valley facing a shortage of beds for patients". The Star (Malaysia). 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 14 March 2016.
  4. Ganasegeran, Kurubaran; Perianayagam, Wilson; Abdul Manaf, Rizal; Ali Jadoo, Saad Ahmed; Al-Dubai, Sami Abdo Radman (2015). "Patient Satisfaction in Malaysia's Busiest Outpatient Medical Care". The Scientific World Journal 2015: 1–6. doi:10.1155/2015/714754. பப்மெட்:25654133. 
  5. "STATISTIC SUMMARY IN HTAR". jknselangor.moh.gov.my. பார்க்கப்பட்ட நாள் 16 July 2024.
  6. "Govt hospitals to tie up with private clinics". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 5 December 2020.

வெளி இணைப்புகள்

தொகு