தெனிசு சலிவன்
தெனிசு பார்னெல் சலிவன் (Dennis Parnell Sullivan, பிறப்பு: பெப்ரவரி 12, 1941) அமெரிக்கக் கணிதவியலாளர் ஆவார். இயற்கணித இடவியல், வடிவியல் இடவியல் மற்றும் இயக்கவியல் அமைப்புகளில் பணிபுரிந்ததற்காக அறியப்படுகிறார். நியூயார்க் நகரப் பல்கலைக்கழக பட்டதாரி மையத்தில் தலைவராகவும், இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் உள்ளார்.
தெனிசு சலிவன் Dennis Sullivan | |
---|---|
2007 இல் சலிவன் | |
பிறப்பு | தெனிசு பார்னெல் சலிவன் பெப்ரவரி 12, 1941 உரோன் துறை, மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | இசுட்டோனி புரூக் பல்கலைக்கழகம் சிட்டி பல்கலைக்கழகம், நியூயார்க் |
கல்வி கற்ற இடங்கள் | ரைசு பல்கைக்கழகம் (இ.க) பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வேடு | முக்கோண உருவக சமன்பாடுகள் (1966) |
ஆய்வு நெறியாளர் | வில்லியம் பிரௌடர் |
முனைவர் பட்ட மாணவர்கள் | அரோல்ட் ஏபல்சன் கர்ட்டிசு மெக்மலன் |
விருதுகள் |
|
இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கணிதத்துக்கான ஊல்ஃப் பரிசும், 2022 ஆம் ஆண்டிற்கான ஏபெல் பரிசும் கிடைத்தன.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசலிவன் 1941 பெப்ரவரி 12 இல் மிச்சிகனில் பிறந்தார்.[1][2] இவரது குடும்பம் விரைவிலேயே இயூசுட்டனுக்கு இடம்பெயர்ந்தது.[1][2]
ரைசுப் பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் படிப்பிற்காக சேர்ந்தார், ஆனால் குறிப்பாக ஊக்கமளிக்கும் கணிதத் தேற்றங்களை எதிர்கொண்ட போது, இரண்டாம் ஆண்டில் தனது முக்கியப் பாடத்தை கணிதத்திற்கு மாற்றினார்.[2][3] 1963 இல் இளங்கலை பட்டம் பெற்றார்.[2] தனது முனைவர் பட்டத்தை பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் 1966 இல் முக்கோண உருவக சமன்பாடுகள் பற்றிய ஆய்வுக்காகப் பெற்றுக் கொண்டார்.[2][4]
பணி
தொகுசலிவன் 1966 முதல் 1967 வரை நேட்டோ ஆய்வூதியம் பெற்று வாரிக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[5] 1967 முதல் 1969 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யிலும், 1969 முதல் 1973 வரை மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்திலும் பணியாற்றினார்.[5] 1973 முதல் 1974 வரை பார்சு-சுத் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகவும், 1974 முதல் மேம்பட்ட அறிவியல் ஆய்வுகள் நிறுவனத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.[5][6] 1981 இல், இவர் நியூயார்க் நகரப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் மையத்தின் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.[7] 1996 இல் இச்சுட்டோனி புரூக் பல்கலைக்கழகத்தின் கணிதப் பீடத்தில் சேர்ந்தார்.[5] வடிவவியல் மற்றும் இயற்பியலுக்கான சைமன்ஸ் மையத்தை நிறுவுவதில் சல்லிவன் ஈடுபட்டு, அதன் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[8]
விருதுகளும் சிறப்புகளும்
தொகு- 1971 வடிவவியலுக்கான ஒசுவால்ட் வெப்லென் பரிசு[9]
- 1981 எலி கார்ட்டன் பரிசு, பிரான்சிய அறிவியல் கழகம்[2][6]
- 1983 அறிவியலுக்கான தேசியக் கழக உறுப்பினர்[10]
- 1991 அமெரிக்க கலை, அறிவியல் கழக உறுப்பினர்[11]
- 1994 அறிவியலுக்கான கிங் ஃபைசல் பன்னாட்டுப் பரிசு[5]
- 2004 அறிவியலுக்கான தேசியப் பதக்கம்[5]
- 2006 இசுட்டீல் வாழ்நாள் சாதனையாளர் பரிசு[5]
- 2010 கணிதத்துக்கான வுல்ஃப் பரிசு, "இயற்கணித இடவியல் மற்றும் பொதுவடிவ இயங்கியல்" பங்களிப்புக்காக.[12]
- 2014 பல்சான் பரிசு[2][13]
- 2022 ஏபெல் பரிசு[2][14]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசலிவன் கணிதவியலாளர் மொய்ரா சாசு என்பவரைத் திருமணம் புரிந்தார்.[3][15]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Phillips, Anthony (2005), "Dennis Sullivan – A Short History", in Lyubich, Mikhail; Takhtadzhi͡an, Leon Armenovich (eds.), Graphs and patterns in mathematics and theoretical physics, Proceedings of Symposia in Pure Mathematics, vol. 73, Providence: American Mathematical Society, p. xiii, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8218-3666-8, archived from the original on July 28, 2014, பார்க்கப்பட்ட நாள் March 31, 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Chang, Kenneth (March 23, 2022). "Abel Prize for 2022 Goes to New York Mathematician". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து March 23, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220323110725/https://www.nytimes.com/2022/03/23/science/abel-prize-mathematics.html.
- ↑ 3.0 3.1 Cepelewicz, Jordana (March 23, 2022). "Dennis Sullivan, Uniter of Topology and Chaos, Wins the Abel Prize". Quanta Magazine இம் மூலத்தில் இருந்து March 23, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220323123752/https://www.quantamagazine.org/dennis-sullivan-uniter-of-topology-and-chaos-wins-the-abel-prize-20220323/.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் Dennis Sullivan
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Dennis Parnell Sullivan Awarded the 2022 Abel Prize for Mathematics". Stony Brook University. March 23, 2022. Archived from the original on March 24, 2022. பார்க்கப்பட்ட நாள் March 23, 2022.
- ↑ 6.0 6.1 "Dennis Sullivan, Mathematician". Institut des Hautes Études Scientifiques. Archived from the original on November 22, 2021. பார்க்கப்பட்ட நாள் March 23, 2022.
- ↑ "Science Faculty Spotlight: Dennis Sullivan". Graduate Center, CUNY. April 29, 2017. Archived from the original on March 24, 2022. பார்க்கப்பட்ட நாள் March 23, 2022.
- ↑ "Dennis Sullivan Awarded the 2022 Abel Prize in Mathematics". Simons Center for Geometry and Physics. March 23, 2022. பார்க்கப்பட்ட நாள் March 25, 2022.
- ↑ "Oswald Veblen Prize in Geometry". Archived from the original on January 5, 2020. பார்க்கப்பட்ட நாள் August 17, 2020.
- ↑ "National Academy of Sciences". Archived from the original on May 15, 2021. பார்க்கப்பட்ட நாள் August 17, 2020.
- ↑ "American Academy of Arts and Sciences". Archived from the original on March 24, 2022. பார்க்கப்பட்ட நாள் August 17, 2020.
- ↑ "Wolf Prize Winners Announced". Israel National News (in ஆங்கிலம்). Archived from the original on March 24, 2022. பார்க்கப்பட்ட நாள் March 23, 2022.
- ↑ Kehoe, Elaine (January 2015). "Sullivan Awarded Balzan Prize". Notices of the American Mathematical Society 62 (1): 54–55. doi:10.1090/noti1198.
- ↑ "2022: Dennis Parnell Sullivan | The Abel Prize". abelprize.no. Archived from the original on March 23, 2022. பார்க்கப்பட்ட நாள் March 23, 2022.
- ↑ Desikan, Shubashree (March 23, 2022). "Abel prize for 2022 goes to American mathematician Dennis P. Sullivan". தி இந்து. https://www.thehindu.com/sci-tech/science/abel-prize-for-2022-goes-to-american-mathematician-dennis-p-sullivan/article65251992.ece.
வெளி இணைப்புகள்
தொகு- O'Connor, John J.; Robertson, Edmund F., "தெனிசு சலிவன்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- கணித மரபியல் திட்டத்தில் தெனிசு சலிவன்
- Sullivan's homepage at CUNY
- Sullivan's homepage at SUNY Stony Brook
- Dennis Sullivan பரணிடப்பட்டது 2018-05-28 at the வந்தவழி இயந்திரம் International Balzan Prize Foundation