தெற்கு கலிபோர்னியா
'தெற்கு கலிபோர்னியா (Southern California) (சுருக்கமாக: SoCal), வட அமெரிக்கா கண்டத்தில் அமைந்த ஐக்கிய அமெரிக்காவின் 50 அமெரிக்க ஐக்கிய மாநிலங்களில் ஒன்றான கலிபோர்னியா மாநிலத்தின் தெற்கில் அமைந்துள்ளது. தெற்கு கலிபோர்னியாவின் மிகப்பெரிய நகரம் லாஸ் ஏஞ்சலஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரம் ஆகும்.[3][4]தெற்கு கலிபோர்னியா 10 கவுண்டிகளைக் கொண்டது.அவைகள்: இம்பீரியல் கவுண்டி, கெர்ன் கவுண்டி, லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி, ஆரஞ்ச் கவுண்டி, ரிவர்சைடு கவுண்டி, சான் பெர்னாண்டினோ கவுண்டி, சான் டியேகோ கவுண்டி, சான் லூயிஸ் ஒபிஸ்போ கவுண்டி, சாண்டா பார்பரா கவுண்டி மற்றும் வெண்சுரா கவுண்டி.
தெற்கு கலிபோர்னியா | |
---|---|
சிவப்பு:தெற்கு கலிபோர்னியாவின் 10 கவுண்டிகள் | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
மாநிலம் | கலிபோர்னியா |
கவுண்டிகள் | இம்பீரியல் கவுண்டி கெர்ன் கவுண்டி லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி ஆரஞ்ச் கவுண்டி ரிவர்சைடு கவுண்டி சான் பெர்னாண்டினோ கவுண்டி சான் டியேகோ கவுண்டி சான் லூயிஸ் ஒபிஸ்போ கவுண்டி சாண்டா பார்பரா கவுண்டி வெண்சுரா கவுண்டி |
பெரிய நகரம் | லாஸ் ஏஞ்சலஸ் |
பரப்பளவு (10-county)[1] | |
• மொத்தம் | 1,46,350 km2 (56,505 sq mi) |
மக்கள்தொகை (2020)[2] | |
• மொத்தம் | 2,37,62,904 |
தெற்கு கலிபோர்னியாவின் மேற்கில் பசிபிக் பெருங்கடல், வடக்கில் வடக்கு கலிபோர்னியா, கிழக்கில் நெவாடா மற்றும் அரிசோனா மாநிலங்களும், தெற்கில் மெக்சிகோவும் உள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் கொலராடோ ஆறு பாய்கிறது. மேலும் இப்பகுதியில் மொகாவி பாலைவனம் மற்றும் கொலராடோ பாலைவனம் அமைந்துள்ளது.
வட கலிபோர்னியாவை விட சிறிதான தெற்கு கலிபோர்னியா 1,46,350 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு (56,505 சதுர மைல்) கொண்டது. இதன் மக்கள் தொகை, 2020ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 23.76 மில்லியன் ஆகும்.
சுற்றுலா
தொகுஇப்பகுதியில் புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களான டிஸ்னிலாண்ட், ஹாலிவுட், சான் டியேகோ விலங்குக் காட்சிச்சாலை மற்றும் ஜீன் பால் கெட்டி அருங்காட்சியகம் உள்ளது.
பொருளாதாரம்
தொகுதொழில்கள்
தொகுமக்கள் தொகை அடர்த்தி மிக்க தெற்கு கலிபோர்னியா நகரங்களில் தொழிற்சாலைகள், திரைப்பட உற்பத்தி, மென்பொருள் உற்பத்தி மற்றும் சுற்றுலாத் துறை சிறந்து விளங்குகிறது.
போக்குவரத்து
தொகுலாஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் இப்பகுதி நகரங்களுடன் இணைக்கிறது. மேலும் இப்பகுதியின் நகரங்களில் உள்ள உள்நாட்டு வானூர்தி நிலையங்கள் அண்டை மாநில நகரங்களுடன் இணைக்கிறது. கலிபோர்னியா மாநில நெடுஞ்சாலை எண் 1 தெற்கு கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியையும், வடக்கு கலிபோர்னியாவுடன் இணைக்கிறது.[5] வழித்தடம் எண் 56 தெற்கு கலிபோர்னியாவின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை சாலைகள் மூலம் இணைக்கிறது.
கல்வி
தொகு- கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
- கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
- கலிபோர்னியா பல்கலைக்கழகம் (இர்வைன்)
- கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சாண்ட பார்பரா)
- கலிபோர்னியா பல்கலைக்கழகம் (ரிவர்சைடு)
- கலிபோர்னியா பல்கலைக்கழகம் (சான் டியேகோ)
- கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் (Dominguez Hills)
- கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் (Fullerton)
- கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)
- கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் (லாங் பீச்)
- கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் (நார்த் ரிட்ஜ்)
- கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் (சான் பெர்டினாண்ட்)
- கலிபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகம் (சான் டியேகோ)
- தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Square Mileage by County". counties.org. California State Association of Counties (CSAC). Archived from the original on February 27, 2019. பார்க்கப்பட்ட நாள் March 2, 2019.
- ↑ "State Population Totals and Components of Change: 2010-2019". Census.gov. United States Census Bureau. Archived from the original on January 26, 2020. பார்க்கப்பட்ட நாள் 8 February 2020.
- ↑ "Figures Show California's Motoring Supremacy". Touring Topics (Los Angeles, California: Automobile Club of Southern California) 8 (2): 38–39. March 1916. https://books.google.com/books?id=p04zAQAAMAAJ&pg=PAPA38. பார்த்த நாள்: May 9, 2021.
- ↑ Cooley, Timothy J. (2014). Surfing about Music. University of California Press. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-52095-721-3. Archived from the original on March 15, 2023. பார்க்கப்பட்ட நாள் May 9, 2021.
- ↑ California State Route 1
மேலும் படிக்க
தொகு- Castillo-Munoz, Veronica (2016). The Other California: Land, Identity and Politics on the Mexican Borderlands. University of California Press.
- Deverell, William; Igler, David, eds. (2013). A companion to California history. John Wiley & Sons.
- Fogelson, Robert M. (1967). The Fragmented Metropolis: Los Angeles, 1850–1930., focus on planning, infrastructure, water and business.
- Friedricks, William (1992). Henry E. Huntington and the Creation of Southern California., on Henry Edwards Huntington (1850–1927), railroad executive and collector, who helped build LA and southern California through the Southern Pacific railroad and trolleys.
- Garcia, Matt. (2001). A World of Its Own: Race, Labor and Citrus in the Making of Greater Los Angeles, 1900–1970.
- Garcia, Mario T. (1972). "A Chicano Perspective on San Diego History". Journal of San Diego History 18 (4): 14–21. online
- Lotchin, Roger (2002). Fortress California, 1910–1961. excerpt and text search, covers military and industrial roles.
- Mills, James R. (1960). San Diego: Where California Began. San Diego: San Diego Historical Society. revised edition online
- O'Flaherty, Joseph S. (1972). An End and a Beginning: The South Coast and Los Angeles, 1850–1887.
- O'Flaherty, Joseph S. (1978). Those Powerful Years: The South Coast and Los Angeles, 1887–1917.
- Pryde, Philip R. (2004). San Diego: An Introduction to the Region (4th ed.)., a historical geography
- Shragge, Abraham. (1994). "A new federal city: San Diego during World War II". Pacific Historical Review 63 (3): 333–361. doi:10.2307/3640970. in JSTOR
- Starr, Kevin (1997). The Dream Endures: California Enters the 1940s. pp. 90–114., covers 1880s–1940
- Starr, Kevin (2004). Coast of Dreams: California on the Edge, 1990–2003. pp. 372–381.
- Starr, Kevin (2011). Golden Dreams: California in an Age of Abundance, 1950–1963. pp. 57–87.
வெளி இணைப்புகள்
தொகு- California Historical Society Collection, 1860–1960 பரணிடப்பட்டது 2021-05-15 at the வந்தவழி இயந்திரம் – USC Libraries Digital Collections
- Historical Society of Southern California