தெற்கு சக்காரா கல்

தெற்கு சக்காரா கல் (South Saqqara Stone) பண்டைய எகிப்தின் பழைய எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஆறாம் வம்ச அரசி அன்கேனஸ்பெப்பியின்[1] கல் சவப்பெட்டியின் கல்லில் செய்த மூடி ஆகும். இந்த கல் சவப்பெட்டி தெற்கு சக்காரா நகரத்தின் தொல்லியல் ஆய்வின் போது 1932–33-இல், அரசி இரண்டாம் இன்புத் பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்டது.

தெற்கு சக்காரா கல், கல் சவப்பெட்டியின் மூடி, தெற்கு சக்காரா நகரம், பண்டைய எகிப்து

இந்த தெற்கு சக்கரா கல் சவப்பெட்டியில் கல் மூடி 2.43 மீட்டர் நீளமும், 0.92 மீட்டர் அகலமும், 20 செண்டி மீட்டர் தடிமனும் கொண்டது. இந்த கல் மூடியில் ஆறாம் வம்ச மன்னர்களான தேத்தி, யுசர்கரே, முதலாம் பெப்பி மற்றும் மெர்ரென்ரே ஆகியோர்களின் ஆட்சிக் காலம் மற்றும் ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகள், கால்நடைகளின் எண்ணிக்கைகள் ஆகியவைகள் குறிக்கப்பட்டுள்ளது.

இதனையும் காணகதொகு

மேற்கோள்கள்தொகு

  1. Ankhesenpepi I
  • Michel Baud, Vassil Dobrev, De nouvelles annales de l'Ancien Empire égyptien. Une "Pierre de Palerme" pour la VIe dynastie, BIFAO 95 (1995), pp.23-92
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கு_சக்காரா_கல்&oldid=3324573" இருந்து மீள்விக்கப்பட்டது