தெ. கிருஷ்ணகுமார்
தெ. கிருஷ்ணகுமார் (D. Krishnakumar-பிறப்பு 22 மே 10,1963) என்பவர் ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்பொழுது சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்த ஆர். மகாதேவன் 16 சூலை 2024 அன்று புது தில்லி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பணி மாறுதல் பெற்றதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) பொறுப்பேற்றார்.[1]
மாண்புமிகு நீதியரசர் தெ. கிருஷ்ணகுமார் | |
---|---|
தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்-பொறுப்பு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 சூலை 2024 | |
நியமிப்பு | திரௌபதி முர்மு |
முன்னையவர் | ஆர். மகாதேவன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 மே 1963 தாராபுரம் |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரி |
இளமையும் கல்வியும்
தொகுகிருஷ்ணகுமார், ஏ. பி. தெய்வசிகாமணி மற்றும் சரசுவதி தம்பதியரின் மகனாக தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், 22 மே, 1963 அன்று பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை தாராபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டத்தினையும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியினை பயின்றார்.
சட்டப் பணி
தொகுஇதன் பின்னர் 1987ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கே. துரைசாமி வழிகாட்டுதலின் கீழ் 1991 முதல் 1996 வரை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1998 முதல் 1999 வரை மத்திய அரசின் கூடுதல் நிலை வழக்கறிஞராகவும், 2001 முதல் 2006 வரை அரசு சிறப்பு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். கோயம்புத்தூர் மாநகராட்சி, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களின் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.[2]
நீதிபதி
தொகுஏப்ரல் 07, 2016 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னை தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த ஆர். மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதால் கிருஷ்ணகுமார் 16 சூலை முதல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.