தேக்கும்பகம்

கேரள சிற்றூர்

தெக்கும்பகம் (Thekkumbhagam) என்பது இந்தியாவின், கேரளத்தின், கொல்லம் மாவட்டத்தின், பரவூர் நகராட்சியின் தெற்கு எல்லை ஊராகும். இது கொல்லத்தின் கடலோரப் பகுதியின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. இது அரபிக்கடல் கடற்கரையில் உள்ளது.[1] கொல்லம் - திருவனந்தபுரம் கடலோர எல்லையில் உள்ள தெக்கும்பகம் - கப்பில் கரையோரப் பகுதி மாநிலத்தில் வளர்ந்து வரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.[2] 1936 இல், உருவாக்கபட்ட, பரவூர் பஞ்சாயத்தின் 9 பிரதேசங்களில் தேக்கும்பகம் ஒன்றாகும்.[3]   பரவூரில் உள்ள இரட்டை முகத்துவாரங்களில் தெக்கும்பகம் முகத்துவாரம் ஒன்றாகும். மற்றொன்று போஷிகாரா முகத்துவாரமாகும்.

தேக்கும்பகம்
Thekkumbhagom
Neighbourhood
மேலே இருந்து: பரவூர் ஏரியில் படகு சவாரி, தெக்கும்பகம் கடற்கரையில் சூரிய அஸ்தமனம், தெக்கும்பகம் முகத்துவாரம், தேக்கும்பத்தில் பரவூர் ஏரி, தெக்கும்பாகத்தில் உள்ள லேக்ஸாகர் சேவியர் தங்கும் விடுதி
மேலே இருந்து: பரவூர் ஏரியில் படகு சவாரி, தெக்கும்பகம் கடற்கரையில் சூரிய அஸ்தமனம், தெக்கும்பகம் முகத்துவாரம், தேக்கும்பத்தில் பரவூர் ஏரி, தெக்கும்பாகத்தில் உள்ள லேக்ஸாகர் சேவியர் தங்கும் விடுதி
தேக்கும்பகம் is located in கேரளம்
தேக்கும்பகம்
தேக்கும்பகம்
Location in Kerala, India
ஆள்கூறுகள்: 8°47′53″N 76°40′01″E / 8.798°N 76.667°E / 8.798; 76.667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கொல்லம்
உள்ளாட்சி நிர்வாகம்பரவூர் நகராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
691319
தொலைபேசி குறியீடு0474
வாகனப் பதிவுKL-02
அருகில் உள்ள மாநகரம்கொல்லம் - 14 km
அருகில் உள்ள நகரம்பரவூர் - 4 km
இணையதளம்www.paravuronline.com
www.paravurmunicipality.in//

பராவூர் தெக்கும்பக முகத்துவாரம்

தொகு

பரவூர் - நிலப்பகுதியானது மூன்று பக்கங்களிலும் நீர் நிலைகளால் சூழப்பட்டுள்ள தீபகற்பமாக உள்ளது. அவை பரவூர் ஏரி, நடயரா ஏரி, அரபிக்கடல் போன்றவை ஆகும். பரவூர் நகரத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் தீபகற்ப கரையோரங்களைக் கொண்டுள்ளன. தெக்கும்பம் முகத்துவாரப் பகுதியானது மாநிலத்தில் அதிக மக்களை ஈர்க்கும் முகத்துவாரமாகும்.  இது கொல்லம் - திருவனந்தபுரம் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் உள்ள கடற்கரை நாள்தோறும் மக்கள் கூட்டத்தை ஈர்ப்பதாக உள்ளது.[4][5] பராவூர் - காப்பில் - வர்க்கலை சாலை வழியாக பயணம் செய்வதன் மூலம் இந்த முகத்துவாரத்தை அணுகலாம்.[6]

தேக்கும்பகம் அருகே காணத்தக்க இடங்கள்

தொகு

கொல்லத்தின் கோயில் நகரமான பரவூர்[7]

  • புத்தன்பள்ளி ஜும்மா மசூதி- தெற்கு கேரளத்தின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று (750 ஆண்டு பழமையானது)

(தலைமை இமாம்: அல்_உஸ்தாத் மஹ்மூத் பைஸி)

  • வலிய பள்ளி ஜும்மா மசூதி

(தலைமை இமாம்: அல்_உஸ்தாத் அஹ்மத் கபீர் மன்னானி)

  • முஹிய்தீன் மசூதி
  • புடியிடம் மகாதேவர் கோயில்.
  • தெக்கும்பகம்-கப்பில் கடற்கரை மற்றும் கழிமுகம்
  • பிரியதர்ஷினி படகு துறை
  • பரவூர் ஏரி
  • போஷிகாரா தோட்டம்
  • போலாச்சிரா கழனிகள்
  • புத்தேங்குளம் யானை கிராமம் [8]

மேலும் காண்க

தொகு

படக்காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Paravur Thekkumbhagam
  2. Beach and backwaters beckon discerning tourists at Kappil
  3. History of Paravur
  4. "Estuaries Of India". Archived from the original on 3 April 2015. பார்க்கப்பட்ட நாள் 16 March 2015.
  5. "Impact of Sea-Sand Filling in the Paravur-Kappil Backwaters, Southern Kerala with Special Reference to Phytoplankton Productivity" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 March 2015.
  6. "Paravur-Pozhikkara-Thanni Road". பார்க்கப்பட்ட நாள் 16 March 2015.
  7. Temples in Kollam district
  8. Elephant News
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேக்கும்பகம்&oldid=4062680" இலிருந்து மீள்விக்கப்பட்டது