தேமால் கிராமிய நகராட்சி
தேமால் (நேபாளி: तेमाल), நேபாளம் நாட்டின் பாக்மதி மாநிலம், காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தில் உள்ள கிராமிய நகராட்சி மன்றம் ஆகும். இதன் தலைமையிடம் பொகாரி நாராயண்ஸ்தான் எனும் ஊராகும்.2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 9 வார்டுகளும், 89 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட இதன் மக்கள் தொகை; 16,957 ஆகும்.[1][2].இக்கிராமிய நகராட்சியில் தாமாங் மொழி 73.1%, நேபாளி மொழி 21.6%, நேவாரி மொழி 3.5% மற்றும் பிறர் மகர் மொழி, மைதிலி மொழிகளைப் பேசுகின்றனர்.[3]பௌத்தம் 73.9%, இந்து சமயம் 25.3% மற்றும் பிற சமயங்களை 0.9% பின்பற்றுகின்றனர்.[4]சராசரி எழுத்தறிவு 64.3% ஆகவுள்ளது.
தேமால் கிராமிய நகராட்சி
तेमाल गाउँपालिका | |
---|---|
நாடு | நேபாளம் |
மாநிலம் | பாக்மதி |
மாவட்டம் | காப்ரேபலாஞ்சோக் |
வார்டுகள் | 9 |
நிறுவிய ஆண்டு | 10 மார்ச் 2017 |
அரசு | |
• வகை | கிராமிய நகராட்சி |
• தலைவர் | சந்திர பகதூர் தமாங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 88.85 km2 (34.31 sq mi) |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 16,957 |
• அடர்த்தி | 190/km2 (490/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டெண் | 45203 |
தலைமையிடம் | பொகாரி நாராயண்ஸ்தான் |
பொருளாதாரம்
தொகுஇமயமலையின் சாரலில் உள்ள இக்கிராமிய நகராட்சிப் பகுதிகளில் போதிசித்தா மரங்கள் அதிகம் விளைகிறது. இம்மரத்தின் விதைகளாலான விலைமதிக்கத்தக்க ஜெபமாலைகள் தயாரிக்கப்படுகிறது. இம்மரங்களே இக்கிராமிய நகராட்சியின் பொருளாதாரத்திற்கு ஆதாரமாக உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "District Corrected Last for RAJAPATRA" (PDF). www.mofald.gov.np. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
- ↑ "स्थानीय तहहरुको विवरण" [Details of the local level bodies]. www.mofald.gov.np/en (in Nepali). Ministry of Federal Affairs and Local Development. பார்க்கப்பட்ட நாள் 17 July 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ NepalMap Language [1]
- ↑ NepalMap Religion [2]