ஜிசிபஸ் புதென்சிஸ்

போதிசித்தா மரம் (Ziziphus budhensis), இது இரம்னேசியே தாவரத்தின் உட்பிரிவைச் சேர்ந்தது. இம்மரங்கள் நேபாளம் நாட்டின் பாக்மதி மாநிலத்தின் காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தில் உள்ள தேமால் கிராமிய நகராட்சிப் பகுதிகளில் மட்டும் விளைகின்றது. இம்மரத்தை நேபாளத்தில் போதிசித்தா மரம் என அழைக்கப்படுகிறது. இது எட்டு முதல் பத்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெள்ளைப் பூக்கள் பூக்கிறது.. மேலும் மே முதல் ஆகஸ்டு வரை காய் காய்க்கிறது.

நேபாளத்தில் விளையும் போதிசித்தா மரத்தின் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் போதிசித்தா ஜெபமாலை

விலை மதிப்புமிக்க இதன் விதைகள் ஒரு முகம் முதல் ஐந்து முகம் வரை கொண்டுள்ளது.இதன் விதைகளைக் கொண்டு போதிசித்தா மாலை[1] எனும் ஜெபமாலை தயாரிக்கப்படுகிறது[1]

பயன்பாடுகள்

தொகு

இம்மரத்தின் பழங்கள் உண்ணக்கூடியதாகவும், இலைகள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. .இம்மரத்தின் விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் புத்தசித்த ஜெபமாலைகள், திபெத்திய பௌத்தர்கள் ஜெபம் அல்லது தியானம் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். . சீனர்கள் இம்மரத்தின் விதைகளைக் கொண்டு விலை மதிக்கத்தக்க போதிசித்தா ஜெபமாலைகள் தயாரித்து விற்கின்றனர். 108 போதிசித்த விதைகளால் ஜெபமாலை எண்பதாயிரம் நேபாள ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பொருளாதார மற்றும் சமய மதிப்பு

தொகு

இம்மரத்தின் 108 விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் போதிசித்தா ஜெபமாலை எண்பதாயிரம் நேபாள ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இம்மரததின் விதைகளை சீனர்கள், இந்தியர்கள், கொரிய மக்கள், நேபாளத்திலிருந்து ஆண்டிற்கு ஒரு பில்லியன் நேபாள ரூபாய் ($9.8 மில்லியன்) அளவிற்கு கொள்முதல் செய்கின்றனர்.

இம்மரத்தின் விதைகள் உலகளாவிய தேவைக்காக[2],நேபாள அரசின் வனத்துறை அமைச்சகம், காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் தேமல் கிராமிய நகராட்சிப் பகுதி மக்கள் இம்மரங்களை அதிகம் வளர்ப்பதற்கு வசதியாக போதிசித்தா மரக்கன்றுகள் வழங்கி வருகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Chaudhary, Sanjib (2015-08-06). "Buddha's Beads Fetch Millions for Farmers in Central Nepal". Global Voices. பார்க்கப்பட்ட நாள் 2015-11-03.
  2. Bodhichitta biz booms amid rising demand

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிசிபஸ்_புதென்சிஸ்&oldid=4042665" இலிருந்து மீள்விக்கப்பட்டது