தேரு மல்லேசுவரர் கோயில், ஹிரியூர்

தேரு மல்லேசுவரர் கோயில் (Teru Malleshvara Temple) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சித்ரதுர்கா நகரத்திற்கு அருகிலுள்ள ஹிரியூர் நகரில் உள்ள ஒரு விஜயநகர காலக் கோயில் ஆகும். ஹிரியூர் வேதவதி ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. [1] "தேரு மல்லேஸ்வரர்" திருவிழா, ஆண்டுதோறும் சனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் பௌர்ணமியில் தொடங்கி ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படுகிறது. இந்தியத் தொல்பொருள் ஆய்வகத்தின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இக்கோயில் உள்ளது [2]

தேரு மல்லேசுவரர் கோயில்
திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட தேரு மல்லேசுவரர் கோயில்
திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட தேரு மல்லேசுவரர் கோயில்
தேரு மல்லேசுவரர் கோயில் is located in கருநாடகம்
தேரு மல்லேசுவரர் கோயில்
தேரு மல்லேசுவரர் கோயில்
ஆள்கூறுகள்: 13°57′N 76°37′E / 13.95°N 76.62°E / 13.95; 76.62
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்சித்திரதுர்க்கா
ஏற்றம்
630 m (2,070 ft)
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

கட்டிடக்கலை

தொகு

இந்த கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியிலான கட்டிடக்கலைகளுடன் உயரமான கோபுரத்துடன் காணப்படுகிறது. நுழைவு மண்டபத்தின் மேற்கூரையில் "சிவபுராணம்" (இந்து சைவ காவியம்) மற்றும் இராமாயணம் (இந்து வைணவ காவியம்) ஆகியவற்றின் காட்சிகளை சித்தரிக்கும் சுவரோவியங்கள் உள்ளன. [1] விஜயநகரப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் பொ.ச. சுமார் 1466இல் கட்டப்பட்டுள்ளன. [3]

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Hiriyur". Department of Tourism, Government of Karnataka, Fort Road, Chitradurga. Archived from the original on 29 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
  3. "Temples of Karnataka". Kamat's Potpourri. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.