தேவதை சதுரங்கக் காய்
தேவதை சதுரங்கக் காய் (Fairy chess piece) அல்லது மரபுவழியல்லாத சதுரங்கக் காய் (Unorthodox chess piece) என்பது வழமையான சதுரங்கத்தில் பயன்படுத்தப்படாத, ஆனால், சதுரங்க மாறுபாடுகளிலோ சதுரங்கப் புதிர்களிலோ பயன்படுத்தப்படும் சதுரங்கக் காய் ஆகும்.[1] தேவதை சதுரங்கக் காய்களின் நகர்வு முறைகள் வேறுபட்டவை.[2]
இளவரசி (குதிரை+அமைச்சர் கலவை) | |
பேரரசி (குதிரை+கோட்டைக் கலவை) | |
வெட்டுக்கிளி (தலைகீழ் அரசியால் காட்டப்பட்டுள்ளது.) | |
குதிரையோட்டி அல்லது பெண்குதிரை அல்லது கொம்புக்குதிரை (தலைகீழ்க் குதிரையால் காட்டப்பட்டுள்ளது.) | |
பேளின் காலாள் அல்லது காவல்வீரர் (தலைகீழ்க் காலாளால் காட்டப்பட்டுள்ளது.) | |
அறிவுரையாளர் (தலைகீழ் அமைச்சரால் காட்டப்பட்டுள்ளது.) | |
விசியர் (தலைகீழ்க் கோட்டையால் காட்டப்பட்டுள்ளது.) | |
மனிதர் (தலைகீழ் அரசரால் காட்டப்பட்டுள்ளது.) |
வகைப்பாடு
தொகுநகர்வு வகை
தொகுதாண்டிகள்
தொகு(m,n)-தாண்டி (Leaper) என்பது தொடக்கக் கட்டத்திலிருந்து (m,n) என்னும் காவி வழியே தாண்டிச்சென்று நகரும் காய் ஆகும்.[3] மரபுவழிச் சதுரங்கக் காயான குதிரை, (1,2)-தாண்டி ஆகும்.[4]
சில தாண்டிகளின் பெற்சா குறிமுறை கீழே வழங்கப்பட்டுள்ளது.
(m,n)-leaper | m = 0 | m = 1 | m = 2 | m = 3 |
---|---|---|---|---|
n = 3 | முத்தாண்டி (H) |
ஒட்டகம் (L) |
வரிக்குதிரை (J) |
பயணி (G) |
n = 2 | போர்ப்பொறி (D) |
குதிரை (N) |
கரி (A) |
வரிக்குதிரை (J) |
n = 1 | விசியர் (W) |
அறிவுரையாளர் (F) |
குதிரை (N) |
ஒட்டகம் (L) |
n = 0 | சுழியம் (O) |
விசியர் (W) |
போர்ப்பொறி (D) |
முத்தாண்டி (H) |
ஓட்டிகள்
தொகுஓட்டி (Rider) என்பது, அது செல்லும் வழிக்குக் குறுக்கே வேறெந்தக் காயும் இல்லாதவிடத்து, குறித்த திசையில் எல்லையற்ற தூரம் நகரக்கூடிய காய் ஆகும்.[6] மரபுவழிச் சதுரங்கத்தில் (1,0)-ஓட்டியான கோட்டை, (1,1)-ஓட்டியான அமைச்சர், இவை இரண்டினதும் கலவையான அரசி ஆகிய ஓட்டிகள் காணப்படுகின்றன.[7] தேவதை சதுரங்க ஓட்டிகளுக்கு எடுத்துக்காட்டுகளாக (1,2)-ஓட்டியான குதிரையோட்டி, (2,3)-ஓட்டியான வரிக்குதிரையோட்டி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[8][6]
தத்திகள்
தொகுதத்தி (Hopper) என்பது தடையாக (Hurdle) அமைந்துள்ள இன்னொரு காயைத் தாண்டிப் பாய்வதன் மூலம் நகரும் காய் ஆகும்.[9] இதற்கு எடுத்துக்காட்டாக வெட்டுக்கிளியைக் குறிப்பிடலாம்.[10]
கல்வெட்டுக்கிளிகள்
தொகுகல்வெட்டுக்கிளி (Locust) என்பது எதிராளியின் காயைத் தாண்டிப் பாய்வதன் மூலம் அதனைக் கைப்பற்றும் (நகராட்டத்தில் (Checkers) நிகழ்வது போல்) காய் ஆகும்.[11]
கடற்காய்கள்
தொகுகடற்காய் (Marine piece) என்பது ஒரே திசைகளில், வழக்கமான நகர்வுகளின்போது ஓட்டியாகவும் கைப்பற்றும்போது கல்வெட்டுக்கிளியாகவும் தொழிற்படும் காய் ஆகும்.[12] கடலமைச்சர், கடற்கோட்டை, கடலரசி, கடலரசர் என்பன முறையே, நீரீயிடு (Nereid), திரைட்டன் (Triton), சைரன் (Siren), பொசைடன் என அழைக்கப்படும்.[12][13]
ஆட்டங்கள்
தொகுசீனக் காய்கள்
தொகுசீனச் சதுரங்கக் காய்களின் பெறுதிகளாக அமைந்த காய்கள், சீனக் காய்கள் எனப்படும். சீனக் காய்க்கு எடுத்துக்காட்டுகளாகத் தகரி (Pao), பரி (Mao) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.[14][15]
சிறப்பியல்புகள்
தொகுஅரசகாய்கள்
தொகுஆட்டத்தின்போது கைப்பற்ற அனுமதிக்கக்கூடாத காய், அரசகாய் (Royal piece) எனப்படும்.[9] மரபுவழிச் சதுரங்கத்தில் அரசர் ஓர் அரசகாய் ஆகும்.[16] பேரரசரும் காலாள்களும் என்ற சதுரங்க மாறுபாட்டில், பேரரசர் ஓர் அரசகாய் ஆகும்.[17]
இணைந்த காய்கள்
தொகுName | Notes |
---|---|
முடிக்காய் (Crowned piece) | அதன் பொதுவான இயல்புகளுக்கு மேலதிகமாக, அரசர் போலவும் நகரக்கூடிய காய், முடிக்காய் ஆகும்.[18] சப்பானியச் சதுரங்கக் காய்களான திறகன் அரசர், திறகன் குதிரை என்பன முறையே முடிக்கோட்டையும், முடியமைச்சரும் ஆகும்.[19][20] |
குதிரைக்காய் (Knighted piece) | அதன் பொதுவான இயல்புகளுக்கு மேலதிகமாக, குதிரை போலவும் நகரக்கூடிய காய், குதிரைக்காய் ஆகும்.[18] எடுத்துக்காட்டாக, அமேசன் என்பது குதிரையரசி ஆகும்.[21] |
குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள்
தொகுபெயர் | பாளெற்று | பெற்சா | பயன்படுத்தப்படும் ஆட்டங்கள் | குறிப்பு |
---|---|---|---|---|
கிறிப்பன் (Aanca) | t[WB] | கோட்டையைப் போல் ஒரு கட்டம் நகர்ந்து, தொடர்ந்து குறுக்காக வெளிப்புறம் நோக்கி எத்தனை கட்டங்கள் வேண்டுமானாலும் நகரக்கூடியது.[22] | ||
உதவியாளர் (Adjutant) | 1<> | fbW | பெருஞ்சதுரங்கம் (Dai shogi), சில சப்பானியச் சதுரங்க மாறுபாடுகள் | பார்க்க: "Go-Between"[23] |
உதவியாளர் (திறெசன்) (Adjutant (Tressan)) | BN | பேரரசரின் ஆட்டம் (எல். திறெசன், 1840) | பார்க்க: "இளவரசி"[24] | |
அறிவுரைஞர் (Advisor) | 1X | F | சீனச் சதுரங்கம் | சீன அரசி. அரண்மனையை விட்டு நகரமுடியாத அறிவுரையாளர். Mandarin, Guard, Officer எனவும் அழைக்கப்படும்.[15] |
கரி (Alfil) | ~2X | A = (2,2) | பாரசீகச் சதுரங்கம் | பாரசீக யானை. ஒரு (2,2)-தாண்டி.[25] |
கரியோட்டி (Alfilrider) | n(~2X) (ஒரே திசையில்) | AA | தேவதை சதுரங்கப் புதிர்கள் | ஒரே திசையில் ஒரே நேர்கோட்டில் எத்தனை (2,2)-தாண்டல்கள் வேண்டுமானாலும் நகரக்கூடியது.[26] |
போர்க்கரி (Alibaba) | ~2* | AD | தேவதை சதுரங்கப் புதிர்கள் | கரி, போர்ப்பொறி ஆகியவற்றின் கலவை.[27] |
அமேசன் (Amazon) | n*, ~1/2 | QN | பெண்குதிரைச் சதுரங்கம் | அரசி, குதிரை ஆகியவற்றின் கலவை. மீயரசி எனவும் அழைக்கப்படும்.[28] |
ஆண்டர்நாக்கு வெட்டுக்கிளி (Andernach grasshopper) | ஆண்டர்நாக்குச் சதுரங்கம் | தாண்டிச்செல்லும் தடையின் நிறத்தை மாற்றக்கூடிய வெட்டுக்கிளி. Chopper எனவும் அழைக்கப்படும்.[29] | ||
மறிமான் (Antelope) | ~3/4 | (3,4) | தேவதை சதுரங்கப் புதிர்கள் | மூன்று கட்டங்கள் குறுக்காகப் பாய்ந்து, தொடர்ந்து செங்குத்தாக வெளிப்புறம் நோக்கி ஒரு கட்டம் நகரக்கூடியது.[30] |
எதிரரசர் (Anti-King) | 1* | K | தாக்குதலின்கீழ் இல்லாதபோது, இக்காய் முற்றுகைக்காளாகியிருக்கும். ஒருவரின் எதிரரசர் முற்றுகைக்காளாகியிருக்கும்போது, எதிராளியின் தாக்குதலின்கீழுள்ள ஒரு கட்டத்திற்கு அதனை நகர்த்தமுடியாவிடின், அவர் தோல்வியடைவார். எதிரரசரால் எதிராளியின் காய்களைக் கைப்பற்றமுடியாது. ஆனால், சொந்தக் காய்களைக் கைப்பற்ற முடியும்.[31] | |
பேராயர் (Archbishop) | nX, ~1/2 | BN | கப்பபிளங்கா சதுரங்கம் (1920கள்) | பார்க்க: "இளவரசி"[32] |
பேராயர் (பொட்சு-உடோசன்) (Archbishop (Fox-Dawson)) | nX (ஒரு விளிம்பில் அதைத்தல்) | B (ஒரு விளிம்பில் அதைத்தல்) | தேவதை சதுரங்கப் புதிர்கள் | ஓர் அதைப்பை மட்டும் நிகழ்த்தக்கூடிய Reflecting Bishop.[33] |
முதல்வேந்தர் (Archchancellor) | n+, ~1/2, 1X | RNF | தியூட்டொனியக் குதிரையின் சதுரங்கம் (J. Knappen, 2009) | Crowned Chancellor: பேரரசி, அறிவுரையாளர் ஆகியவற்றின் கலவை.[34] |
அம்புக் காலாள் (Arrow Pawn) | o1+, c1X | mWcF | நூற்றாண்டுச் சதுரங்கம் | பார்க்க: "Fusilier" |
அம்புக் காலாள் (பேர்சன்) (Arrow Pawn (Persson)) | o2+, c1X | mR2cF | அம்புக் காலாள் சதுரங்கம் (ஆர். பேர்சன், 1938) | செங்குத்தாக இரு கட்டங்கள் நகரக்கூடிய (ஆனால், பாயமுடியாது.), அதிகார உயர்வு பெறமுடியாத Fusilier.[35] |
அசுவம் (Ashwa) | சதுரங்கம் (இந்தியச் சதுரங்கம்) | பார்க்க: "குதிரை" இந்தியக் குதிரை[36] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Nicolae Sfetcu (2014). The Game of Chess. Nicolae Sfetcu.
- ↑ LLC Books (2010). Chess Pieces: Knight, Pawn, Queen, Rook, Bishop, King, Chess Piece, Chess Piece Relative Value. General Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781157086208.
- ↑ "Chess glossary for Freshman Seminar 23j: Chess and Mathematics". Harvard Mathematics Department. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ Clifford A. Pickover (2011). The Zen of Magic Squares, Circles, and Stars: An Exhibition of Surprising Structures across Dimensions. Princeton University Press. p. 235. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400841516.
- ↑ Glenn Overby II (25 சனவரி 2003). "Betza Notation". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ 6.0 6.1 Fergus Duniho & Hans Bodlaender (15 திசம்பர் 2001). "Piececlopedia: Nightrider". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ Dustin G. Mixon. "Perimeter Chess". Princeton University. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Hans Bodlaender (25 செப்டம்பர் 2000). "Piececlopedia: Zebrarider". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ 9.0 9.1 John William Brown (18 அக்டோபர் 2001). "A Glossary of Basic Chess Variant Terms". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ Hans Bodlaender (14 நவம்பர் 2002). "Grasshopper chess". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ Peter Aronson (29 ஆகத்து 2001). "Piececlopedia: Locust". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ 12.0 12.1 IGM Petko Petkov. "Do You know the Marine pieces? (Part I – Siren, Triton, Nereid)". Julia's Fairies. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ IGM Petko Petkov. "Do You know the Marine pieces? (Part II – Poseidon, Marine Knight, Marine Pawn)". Julia's Fairies. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ Fergus Duniho & Hans Bodlaender (15 திசம்பர் 2001). "Piececlopedia: Cannon". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ 15.0 15.1 Hans Bodlaender (8 அக்டோபர் 2001). "Xiangqi (象棋) Chinese Chess". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ Fergus Duniho & Hans Bodlaender (20 ஏப்ரல் 2003). "Piececlopedia: King". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Chess Variants. PediaPress. p. 184.
- ↑ 18.0 18.1 David Howe (26 திசம்பர் 2011). "The Concise Guide to Chess Variants". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ Fergus Duniho & Sergey Sirotkin (17 திசம்பர் 2001). "Piececlopedia: Dragon King". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ "Chu Chess". GNU. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ William C. Schmidt. "Knight Mare". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2016.
- ↑ Ralph Betza (1 பெப்ரவரி 2002). "Bent Riders". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Frank Truelove (1998 அக்டோபர் 30). "List of fairy pieces". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Hans Bodlaender (1997 செப்டம்பர் 1). "The Emperor's Game". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Problem of the Month (December 2010)". Stetson University. 27 திசம்பர் 2010. Archived from the original on 2016-10-21. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016.
- ↑ Michael Howe (1 ஆகத்து 2002). "Five Chess Variants by Philip M. Cohen". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Fergus Duniho & Hans Bodlaender (19 செப்டம்பர் 2000). "Piececlopedia: Alibaba". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ R. C. Bell (2012). Board and Table Games from Many Civilizations. Courier Corporation. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486145570.
- ↑ Benjamin C Good. (14 ஆகத்து 2002). "Piececlopedia: Andernach Grasshopper and Friends". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016.
- ↑ Ben Good (1999 செப்டம்பர் 22). "Piececlopedia: Antelope". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Mark Alexander Ridley (2009). "Fairy Kings". Mat Plus Review: 14–29.
- ↑ Fergus Duniho & David Howe (1999 பெப்ரவரி 12). "The Piececlopedia: Bishop-Knight Compound Princess, Archbishop, Cardinal, Paladin". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Benjamin C Good (1999 சனவரி 15). "The Piececlopedia: Archbishop". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ Jörg Knappen (19 நவம்பர் 2009). "Teutonic Knight's Chess". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2016.
- ↑ Ed Friedlander (30 திசம்பர் 2001). "Arrow Pawn Chess". Chess Variants. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2016.
- ↑ John Gollon (2013). Chess Variations: Ancient, Regional, and Modern. Tuttle Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781462912209.