தேவர்மலை கதிர் நரசிங்கப்பெருமாள் கோயில்
தேவர்மலை தேவர் முறி கதிர் நரசிங்கப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், தேவர்மலை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]
அருள்மிகு கதிர் நரசிங்கப்பெருமாள் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கரூர் |
அமைவிடம்: | தேவர்மலை,தேவர் முறி, கடவூர் வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | கிருஷ்ணராயபுரம் |
மக்களவைத் தொகுதி: | கரூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | கதிர் நரசிங்கப்பெருமாள் |
தாயார்: | கமலவள்ளி தாயார் |
வரலாறு | |
கட்டிய நாள்: | 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது[சான்று தேவை] |
வரலாறு
தொகுஇக்கோயில் 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது..
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயில் விஜயநகர பேரரசின் கட்டிடகலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் கதிர் நரசிங்கப்பெருமாள், கமலவள்ளி தாயார் சன்னதிகளும், ஆஞ்சநேயர், பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
இருப்பிடம்
தொகுகரூர் நகாிலிருந்து பாளையம் செல்லும் வழியில் 35 கி.மீ. தொலைவில் உள்ள தேவர்மலையில் கதிர்நரசிங்கப் பெருமாள் கோவில் 700 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது என்பதை கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. கரூாிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் 30 கி.மீ தொலைவில் பாளையம் உள்ளது. பாளையத்தில் இருந்து கிழக்கில் 3 கி.மீ. தொலைவில் குருணி குளத்துப்பட்டி உள்ளது. இதிலிருந்து 2 கி.மீ தொலைவில் தேவர்மலை உள்ளது. பாளையத்திலிருந்து திருச்சி மற்றும் மணப்பாறைக்குச் செல்லும் பேருந்துகள் தேவர்மலை வழியாகச் செல்கின்றன. ஆரம்பத்தில் தேவர் முறி என்று அழைக்கப்பட்ட இந்த இடம் இப்போது 'தேவர்மலை' என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் திறக்கப்படும்.
மோட்ச தீர்த்தம்
தொகுதேவர்கள் உருவாக்கிய மோட்ச தீர்த்தம் இக்கோவிலின் சிறப்பம்சம் ஆகும். இது ராமர், சீதாதேவி, லஷ்மணன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு அருகில் உள்ளது. ஆகாச தீர்த்தம் என்றும் பிரம்ம தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்ற இத்தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட புனித நீருடன் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
தெய்வங்கள்
தொகுஇக்கோயிலின் மூலவராக கதிர் நரசிங்க பெருமாள் உள்ளார். இறைவி கமலவல்லித் தாயார் ஆவார். லட்சுமி நாராயண பெருமாள், மகாவிஷ்ணு, கருடாழ்வார், ராமானுஜர் மற்றும் பைரவருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. வில்வமரம் தல விருட்சமாக உள்ளது. மூலவர் 'உக்கிரநரசிம்மர்' என்றும் அழைக்கப்படுகிறார். இடதுகாலை மடித்து அமர்ந்த நிலையில் இடது கை அக்வான முத்திரையிலும் வலது கை அபய முத்திரையிலும் உள்ளது. மேல் இரண்டு கைகள் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மூன்றாவது கண் ஓர் அாிய வெளிப்பாடு ஆகும்.
நம்பிக்கை
தொகுகமலவல்லித் தாயாரை வணங்கினால் குடும்ப பிரச்சினைகள், மனம் தொடர்பான பிரச்சினைகள், திருமணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதாகவும் பிரதோசத்தில் 11 முறை கோவிலுக்குச் செல்வதால் நாம் விரும்பும் அனைத்தையும் பெறலாம் என்றும் நம்பப்படுகிறது. அவ்வாறே மோட்ச தீர்த்தத்தில் நீராடினால் சனி தோசம் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.
விழாக்கள்
தொகுமார்கழி மாதத்தில் கருட சேவை, வைகாசி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படுகின்ற விழாக்களாகும். சுவாதி நட்சத்திரத்தில் கமலவல்லி தாயாருக்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன. சிறப்புத் திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகின்றன. தற்போது கோயிலில் ஒரு நேர பூசை நடைபெறுகிறது.
பூசைகள்
தொகுஇக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)