தைலாவரம்
தைலாவரம் (Thailavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராமம் ஆகும். துணைநகரமான கூடுவாஞ்சேரி மற்றும் பொத்தேரி நகரப்பகுதிகளுக்கு இடையில் தைலாவரம் கிராமம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 45 என்ற சாலையில் கூடுவாஞ்சேரியிலிருந்து 2 கி.மீ. (1.2 மைல்) தொலைவிலும், சென்னையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நெடுஞ்சாலை இடையே 37 கிமீ (23 மைல்) தொலைவிலும் தைலாவரம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 603 202 ஆகும்.
தைலாவரம் Thailavaram | |
---|---|
village | |
ஆள்கூறுகள்: 12°49′51″N 80°02′45″E / 12.830963°N 80.045895°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு மாவட்டம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 603202 |
தொலைபேசிக் குறியீடு | 044 |
தைலாவரம் கிராமத்திற்கு எதிரில் எல் & டி நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளது.[1]
இங்குள்ள கல்யாண ஆஞ்சநேயர் கோயிலில் கல்யாண ஆஞ்சநேயர் தனது மனைவி சுவர்ச்சலா தேவியுடன் இருப்பதால் இக்கோயில் ஒரு முக்கியமான கோயிலாக கருதப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Estancia IT SEZ". Archived from the original on 2011-12-28. பார்க்கப்பட்ட நாள் 2011-12-23., L&T's Estanzia IT SEZ (Special Economic Zone)
- ↑ "திருமண தடை நீக்கும் சிறீகல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில்". தினமணி. https://www.dinamani.com/religion/religion-temples/2019/mar/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3113713.html. பார்த்த நாள்: 25 January 2024.
- http://www.hindu.com/thehindu/nic/vishnu/index.htm
- http://centralexcisechennai.gov.in/chennai3/jurisdiction_tambaram1.html
- https://web.archive.org/web/20120514202703/http://www.tnpcb.gov.in/seiaa/ec/107_EC.pdf
- http://centralexcisechennai.gov.in/chennai3/excise%20tradenotices/TN_2008/TN%2017-08.htm
- http://www.tn.gov.in/stationeryprinting/gazette/2008/VI-1.pdf
- https://web.archive.org/web/20081101090007/http://www.tnpcb.gov.in/seiaa/appli.htm
- https://web.archive.org/web/20120425111954/http://www.elections.tn.nic.in/BLO_list/ac032.pdf