தொழில் பயன்பாட்டு மென்பொருள்

தொழில் பயன்பாட்டு மென்பொருள் (ஆங்கிலத்தில் Enterprise Application Software) என்றறியப்படும் தொழில் நிறுவன மென்பொருள், (ஆங்கிலத்தில் Enterprise Software) என்பது ஒரு தனி நபருக்காக அல்லாமல், ஒரு அமைப்பின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நோக்கத்திற்காக வடிவமைக்கப்படும் மென்பொருள். பள்ளிகள், நிறுவனங்கள், இணையம்சார் பயனர் குழுக்கள்[1], சங்கங்கள்/கழகங்கள், சில்லறை விற்பனையாளர்கள், அரசு அமைப்புகள்[2] போன்ற பல்வேறு அமைப்புகள் இதனால் பயன்பெரும். தொழிற்பயன்பாட்டு மென்பொருள் ஒரு (கணினி-சார்)தகவல் அமைப்பின் இன்றியமையா அங்கமாகும், அது போல வலைதள உருவாக்கத்தையும் உள்ளடக்கியது.

தொழில் நிறுவன மென்பொருள் வழங்கும் சேவைகள் பொதுவாக வலைவழிக் கொள்முதல், இணைய கட்டண வசூலிப்பு செயலாக்கங்கள் (online payment processing), ஊடாடும் விளைபொருள் அட்டவணை (interactive product catalogue), தானியங்கி பட்டியலிடும் முறை(automated billing systems), பாதுகாப்பு, தொழில்நிறுவன உட்பொருள் மேலாண்மை(enterprise content management), தகவல் தொழில்நுட்ப சேவை மேலாண்மை, வாடிக்கையாளர் தொடர்பு மேலாண்மை, நிறுவன வளம் திட்டமிடல், வணிக அறிவாண்மை, செயற்றிட்ட முகாமைத்துவம், கூட்டுழைப்பு, மனித வள மேலாண்மை, உற்பத்தி, தொழில் நிறுவன பயன்பாட்டு ஒருங்கிணைப்பு (enterprise application integration), தொழில் நிறுவன விண்ணப்ப தானியக்கம்(enterprise forms automation) போன்ற வணிக சார்புடைய கருவிகளாகப் பயன்படுவன.

தொழில் நிறுவனங்கள் பலவும் பொதுவான துறை பகுப்புகளையும், அமைப்புமுறைகளையும் கொண்டிருக்கும் காரணத்தால், தொழில்நிறுவன மென்பொருள் பெரும்பாலும் தனிப்பயனாக்கக்கூடிய நிரல்களின் தொகுப்பாக(suite of customizable programs) வழங்கப்படும். பொதுவாக, இக்கருவிகளின் சிக்கலான வடிவமைப்பு காரணமாக, இவற்றைப் பயன்படுத்த நிபுனத்துவமும், இவை குறித்த சிறப்பு அறிவும் தேவை.

வகைகள்

தொகு

உருவாக்குவோர்

தொகு

நிறுவன மென்பொருள் துறையில் ஈடுபட்டிருக்கும் பெரும் அமைப்புகள் சாப், கூகுள், ஐபிஎம், ரெட் ஹாட், மைக்ரோசாப்ட், அடோபி சிஸ்டம்ஸ், உள்ளிட்டவை; இவையல்லாமல் உலகில் ஆயிரக்கணக்கான விறபனையாளர்கள் உள்ளனர்.

தொழில்நிறுவன சமூக மென்பொருள்

தொகு

நிறுவனம் 2.0 என்றழைக்கப்படும் தொழில்நிறுவன சமூக மென்பொருளையும் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. மைக்ரோசாஃப்ட்டிடம் விற்கப்பட்ட யாம்மர் இன்க். என்பது இவ்வகை மென்பொருளுக்கோர் எடுத்துக்காட்டாகும்.

இவற்றையும் காண்க

தொகு


மேற்கோள்கள்

தொகு
  1. எடுத்துக்காட்டுகள்: (ஆங்கிலம்)2500+ உறுப்பினர்கள் பரணிடப்பட்டது 2015-05-10 at the வந்தவழி இயந்திரம் கொண்ட டிரெயின்ஸ் பயனர் குழு, 1632 புத்தகத் தொடர் போன்ற சங்கங்களின் கூட்டுழைப்பு வலைதளம்.
  2. "(ஆங்கிலம்) "தொழில் நிறுவன மென்பொருள்" என்பது ஒரு சமூகப் பெருநிகழ்வு, தொழில்நுட்ப நிகழ்வன்று". Archived from the original on 2011-12-11. பார்க்கப்பட்ட நாள் 2015-06-05.