தொ. ல. நரசிம்மாச்சார்

கன்னட மொழியியலாளர்

தொட்டபெல்லி லட்சுமி நரசிம்மாச்சார் (Doddabele Lakshmi Narasimhachar ) (1906 அக்டோபர் 27 - 1917 மே 7 ) [2] இவர் ஓர் கன்னட மொழியியலாளரும், இலக்கிய வாதியும் அகராதியியலாரும், எழுத்தாளரும், இலக்கிய விமர்சகரும் மற்றும் ஆசிரியரும் ஆவார். இவர் 1932 - 1962 க்கு இடையில் மைசூர் பல்கலைக்கழகத்தின் கன்னட மொழி ஆய்வுகள் துறையில் கற்பித்தார். ஹாலேகன்னடா (பழைய கன்னட மொழி) பற்றிய இவரது அறிவு பண்டைய கல்வெட்டு பதிவுகளைப் படிக்க இவருக்கு உதவியது. இவர் கன்னடத்தில் நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். சுமார் ஒன்பது தொகுதிகளைத் திருத்தியுள்ளார். பதினொரு முன்னுரைகளை எழுதினார். மூன்று தசாப்தங்களாக கிட்டத்தட்ட நூறு கட்டுரைகளை (கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில்) எழுதினார். ஆங்கிலத்தில் ஏழு தனிக் கட்டுரைகள் மற்றும் நான்கு கன்னட படைப்புகளின் அறிமுகங்களை கோடிட்டுக் காட்டினார். 1960 இல் பீதரில் நடைபெற்ற நாற்பது முதல் கன்னட வருடாந்திர கன்னட மொழி மாநாட்டுக்கு இவர் தலைமை தாங்கினார். மைசூர் மாநிலத்திலிருந்து கன்னட ராஜ்யோத்ஸவா விருதைப் பெற்றுள்ளார். 1969 ஆம் ஆண்டில், இவர் படித்த மைசூர் பல்கலைக்கழகம் கன்னட ஆய்வுகள் உலகிற்கு வாழ்நாள் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது..

தொ. ல. நரசிம்மாச்சார்
தொ. ல. நரசிம்மாச்சார்
பிறப்பு(1906-10-27)27 அக்டோபர் 1906
சிக்கநாயக்கநஹள்ளி, மைசூர் அரசு,
இறப்பு7 மே 1971(1971-05-07) (அகவை 64)
மைசூர், கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியன்
அறியப்படுவதுகன்னட கிரந்த சம்பந்தனே
வாழ்க்கைத்
துணை
முத்தம்மா
விருதுகள்கன்னட சாகித்ய பரிசத் விருது, தொகுப்புகள் அடங்கிய தொகுதி - "ஞானோபாசகா"[1] (1960) & "உபாயனா" (1967)
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்மகாராஜா கல்லூரி, மைசூர் & மத்திய கல்லூரி, பெங்களூரு.
கல்வி நெறியாளர்கள்பி. எம். சிறீகாந்தையா, டி. எஸ். வெங்கன்னையா
கல்விப் பணி
துறைகன்னடம், இந்தியவியல், ஹலேகன்னடா, கர்நாடக வரலாறு, கல்வெட்டியல்
கல்வி நிலையங்கள்மைசூர் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்க. வெங்கடசுப்பையா, எம். சித்தானந்த மூர்த்தி, தோ. வெ. வெங்கடாசல சாத்திரி
வலைத்தளம்
D. L. Narasimhachar

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு
 
இளங்கலை இரண்டாம் ஆண்டு, மகாராஜா கல்லூரி குழு பி. எம். சிறீகாந்தையா, எஸ். சிறீகாந்த சாத்திரி, டி. எல். நரசிம்மச்சார் மற்றும் ஜி. வெங்கடசுப்பையா

தொ. ல நரசிம்மாச்சார் இளமைக் காலம் தென் மாநிலமான கர்நாடகாவின் தும்கூர் மாவட்டம் முழுவதும் - பாவகடா, மதுகிரி மற்றும் சிரா போன்ற நகரங்களில் பரவியிருந்தன. ஒரு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த டி.எல்.என் ஒரு பண்டிதரிடமிருந்து தூய்மையான சமசுகிருதத்தில் பயிற்சி பெற்றார். நரசிம்மாச்சாரின் எழுத்து ஆரம்ப கட்டத்தில் உள்ளூர் பள்ளி இதழான "பள்ளி நாட்டுப்புறம்" என்பதில் தொடர்ச்சியான பங்களிப்புகளுடன் தொடங்கியது. இளங்கலை பட்டத்திற்காக (1927), பெங்களூரில் உள்ள மத்திய கல்லூரியில் சேர முயன்றார். அங்கு இவர் கன்னடத்தை ஒரு விருப்ப பாடமாக எடுத்துக்கொண்டார். (முதன்மை பாடங்களுக்கு கூடுதலாக - இயற்பியல் மற்றும் வேதியியல்). தற்செயலாக, விருப்ப பாடத்தில் இவர் பெற்ற மதிப்பெண் மிக அதிகமாக இருந்தது. இது இறுதியில் மைசூர் மகாராஜா கல்லூரியில் (1929) கன்னடத்தில் முதுகலைப் பட்டம் முடிக்க இவரை வழிநடத்தியது. மைசூர் மகாராஜா கல்லூரியில் இவரது சமகாலத்தவர்கள் கே.வி.புட்டப்பா, கே.வி.ராகவாச்சார், அனந்தரங்காச்சார் மற்றும் கே.வெங்கடராமப்பா போன்ற எதிர்கால இலக்கியப் ஆளுமைகள் இருந்தனர். மைசூர் மகாராஜா கல்லூரியில் ஆசிரியராக பி.எம்.சிறீகாந்தையா, ரல்லப்பள்ளி அனந்த கிருஷ்ணா சர்மா, சி. ஆர். நரசிம்ம சாத்திரி, டி.எஸ்.வெங்கண்ணையா பரணிடப்பட்டது 2020-09-29 at the வந்தவழி இயந்திரம் மற்றும் ஏ.ஆர்.கிருஷ்ணா சாத்திரி ஆகியோர் அடங்குவர். தனது ஓய்வு நேரத்தில், பழைய கன்னட கையெழுத்துப் பிரதிகளை ஆராய ஓரியண்டல் ஆராய்ச்சி நூலகத்திற்கு அடிக்கடி வருவார். சிறந்த முதுகலை மாணவருக்காக ஒதுக்கப்பட்ட எச்.வி.நஞ்சுண்டையா தங்கப் பதக்கம் இவருக்கு 1929 இல் வழங்கப்பட்டது. [3]

கல்வியாளர்

தொகு
 
ஓரியண்டல் ஆராய்ச்சி நூலகம், மைசூர்

தொ.ல.நரசிம்மாச்சார் மைசூர் ஓரியண்டல் ஆராய்ச்சி நூலகத்தில் ஆராய்ச்சி உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் ஒரே நேரத்தில் மகாராஜா கல்லூரி கன்னடத் துறையில் கன்னடத்தில் பகுதிநேர விரிவுரையாளர் பதவியை வகித்தார். ஆரம்பகால வீரசைவ இலக்கியத்தின் 'நேரத்திற்கு' அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான ஆராய்ச்சி திட்டம் இவரது கவனத்தை ஈர்த்தது. இந்த அறிவார்ந்த முயற்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆராய்ச்சி மானியத்தின் முதல் பெறுநரானார். ஓரியண்டல் ஆராய்ச்சி நூலகத்திலிருந்து வெளியேறிய பின்னர், 1932 ஆம் ஆண்டில் கல்லூரியில் முழுநேர விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு 1939 வரை அதே பதவியில் தொடர்ந்தார். இரண்டு வருட குறுகிய காலத்திற்கு, மைசூர் இன்றைய யுவராஜா கல்லூரியில் தனது தாய் துறைக்கு வருவதற்கு முன்பு கற்பித்தார். அங்கு இரண்டாம் உலகப் போரின் இறுதி வரை கற்பித்தார்.

1945 இன் பிற்பகுதியில், உதவி பேராசிரியர் பதவிக்கு பதவி உயர்வு பெற்று பெங்களூரு மத்திய கல்லூரிக்கு மாற்றப்பட்டார். தசாப்தத்தின் முடிவில், இவர் மீண்டும் மைசூரில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய துறையில் இணை பேராசிரியராக இருந்தார். 1954 இல், 'கன்னட-கன்னட' அகராதி திட்டத்தின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தொ.ல .நரசிம்மாச்சார் தனது மீதமுள்ள ஆண்டுகளை 1962 இல் ஓய்வு பெறும் வரை மைசூரில் கன்னட மொழி ஆய்வுகள் பேராசிரியராக பணியாற்றினார். இவரது வாழ்க்கை 1932 - 1962 முதல் முப்பது ஆண்டுகள் நீடித்தது.

பல்கலைக்கழக மானியக் குழு 1962 முதல் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு டி.எல்.என்-க்கு பிந்தைய முனைவர் பெல்லோஷிப்பை நீட்டித்தது. [4] [5]

நூலியல்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Paramaśivayya, Jī. Śaṃ., 1933- Kr̥ṣṇa, Na. "Jñānōpāsaka : Ḍi. El. En. avara vyaktitva mattu kr̥tigaḷa kuritu lēkhanagaḷu". Bodleian Library, Oxford. Beṅgaḷūru : Kannaḍa Sāhitya Pariṣattu. பார்க்கப்பட்ட நாள் 5 February 2019.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. "NARASIMHACHAR D". shastriyakannada.org. Archived from the original on 2018-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-02-03.
  3. "D. L. Narasimhachar (1) – Dr S. Srikanta Sastri | Official Website". www.srikanta-sastri.org. Archived from the original on 2019-02-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-03.
  4. Vidyashankar, S (1993). ಡಿ. ಎಲ್. ನರಸಿಂಹಾಚಾರ್. Bangalore: Kannada Sahitya Parishath. pp. 1–2.
  5. Vidyāśaṅkar, Es. Ḍi. El. Narasiṃhācār. Beṅgaḷūru: Kannaḍa Sāhitya Pariṣattu.
  6. A. N., Upadhye (1957). "Reviewed Work: A Middle Indo-Aryan Reader : (Revised edition) in Two Parts. Part I : Texts and Part II : Notes by Suniti Kumar Chatterji, Sukumar Sen". Annals of the Bhandarkar Oriental Research Institute 38 (3/4): 318–319. 
  7. Shama Rao, T. S. (October 1957). "Sukumāra-Caritaṁ: of Śāntinātha Kavi". Annals of the Bhandarkar Oriental Research Institute 38 (3/4): 319–320. 
  8. Bhat, D. N. Shankara (1963). "KANNADA VERB MORPHOLOGY: Vaḍḍa:ra:dhane". Bulletin of the Deccan College Research Institute 21: 1–18. 
  9. Gopal, B. R. (1973). "EPIGRAPHICAL NOTES : KATAVAPRA AND NAYANADADEVA". Proceedings of the Indian History Congress 34: 341–343. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொ._ல._நரசிம்மாச்சார்&oldid=3659090" இலிருந்து மீள்விக்கப்பட்டது