தோடெலி மொழி
தோடெலி மொழி (Doteli, or Dotyali (डोटेली) இந்திய-ஆரிய மொழிகளில் ஒன்றாகும். இம்மொழி நேபாளத்தில், தூரமேற்கு பிராந்தியம் மற்றும் மத்தியமேற்கு பிராந்தியங்களில் 8,00,000 மக்கள் பேசுகின்றனர். இம்மொழி தேவநாகரி எழுத்துமுறையில் எழுதப்படுகிறது.
தோடெலி மொழி | |
---|---|
Dotyali | |
डोटेली | |
நாடு(கள்) | நேபாளம் |
பிராந்தியம் | தூரமேற்கு பிராந்தியம் மற்றும் மத்தியமேற்கு பிராந்தியம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | நேபாளத்தில் 7,90,000 (2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு)[1] |
இந்தோ ஐரோப்பிய மொழி
| |
தேவநாகரி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015, பகுதி 1, பிரிவு 6-இன் படி நேபாளத்தின் அரச மொழி நேபாளி மொழியாகும்[2] |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | dty |
மொழிக் குறிப்பு | dote1238[3] |
நேபாள அரசமைப்புச் சட்டத்தின் பகுதி 1, பிரிவு 6ன் கீழ், இம்மொழி நேபாள அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[2] தோடேலி மொழி நான்கு முக்கிய வட்டார வழக்கு கொண்டது. அவைகள் பைத்தாடேலி, பஜாங்கி, தார்சூலி மற்றும் தோடேலி ஆகும்.
மாவட்டம் | தோடேலி மொழியின் வட்டார வழக்கின் பெயர் |
---|---|
கைலாலி | பைத்தாடேலி, பஜாங்கி |
கஞ்சன்பூர் மாவட்டம் | பைத்தாடேலி |
டோட்டி மாவட்டம் | தோடேலி |
டடேல்துரா மாவட்டம் | தோடேலி, ததேல்துரா |
பைத்தடி மாவட்டம் | பைத்தடி, தோடேலி |
தார்ச்சுலா மாவட்டம் | தார்ச்சூலி, தோடேலி |
பஜாங் மாவட்டம் | பஜாங் |
தோடேலி மொழியானது, நேபாளி மொழியின் அச்சாமெலி மற்றும் பஜ்ஜுரேலி வழக்கு மொழிகளுக்கு நெருங்கிய தொடர்புடையது. மேலும் இம்மொழியின் உச்சரிப்பு, நேபாளி மொழியின் வட்டார வழக்கு மொழியான சூம்லி மொழியின் உச்சரிப்பை ஒத்ததாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ தோடெலி மொழி at Ethnologue (18th ed., 2015)
- ↑ 2.0 2.1 Constitution Bill of Nepal 2072
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Doteli". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ A Sociolinguistic Study of Dotyali-LinSuN Central Department of linguistics, Tribhuvan University, Nepal and SIL International 2014