தோய் நாங் நோன் மலைத்தொடர்

{{notes =

தோய் நாங் நோன் மலைத்தொடர்
ดอยนางนอน
உறங்கும் பெண்ணின் தோற்றத்தில் தென்படும் தோய் நாங் நோன் மலைத்தொடர்.
உயர்ந்த புள்ளி
உச்சிடோய் துங்
உயரம்1,389 m (4,557 அடி)[1]
பட்டியல்கள்உலகில் தூங்கும் பெண் எனும் பெயரில் உள்ள மலைத்தொடர்கள்
ஆள்கூறு20°21′06″N 99°50′30″E / 20.35167°N 99.84167°E / 20.35167; 99.84167
பரிமாணங்கள்
நீளம்30 km (19 mi) NNE/SSW
அகலம்7 km (4.3 mi) WNW/ESE
புவியியல்
அமைவிடம்மோய் சாய் மாவட்டம், சியாங் ராய் மாகாணம், தாய்லாந்து
மூலத் தொடர்தாயின் லாவோ மலைத்தொடர்
நிலவியல்
பாறை வகைசுண்ணாம்புக் கரடு
ஏறுதல்
எளிய வழிமோய் சாய் மாவட்டம்
தோய் நாங் நோன் மலைத்தொடர் is located in தாய்லாந்து
தோய் நாங் நோன் மலைத்தொடர்
தோய் நாங் நோன் மலைத்தொடர்
தாய்லாந்தில் அமைவிடம்

தோய் நாங் நோன் மலைத்தொடர் (ஆங்கிலம்: Doi Nang Non; தாய்: ดอยนางนอน), (உறங்கும் பெண் தோற்ற மலைத்தொடர்) (Mountain of the Sleeping Lady), தாய்லாந்து நாட்டில் வடக்கில் உள்ள, சியாங் ராய் மாநிலத்தில் உள்ள மோய் சாய் மாவட்டத்தில், தூங்கு பெண் தோற்றத்தில் அமைந்த மலைத்தொடராகும்.

பருவ மழைக் காலங்களில் இம்மலைத்தொடரில் பல அருவிகள் தோன்றும். மேலும் இம்மலைத்தொடரில் பத்து கிலோ மீட்டர் நீளம் கொண்ட தாம் இலுவாங் நாங் நோன் குகையில், 23 சூன் 2018 அன்று மழை வெள்ளத்தில் சிக்கிய 12 சிறுவர்கள் உட்பட 13 பேரை 10 சூலை 2018 அன்று மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.[2]

இம்மலைத்தொடரில் தாம் லுவாங்-குன் நாம் நாங் நோன் (Tham Luang–Khun Nam Nang Non Forest Park) எனும் காட்டுப் பூங்கா அமைந்துள்ளது.

புவியியல்

தொகு

சியாங் ராய் மாநிலத்தின் தலைமையிடமான சியாங் ராய் நகரத்திற்கும், மோய் சாய் மாவட்டத்திற்கும் இடையே அமைந்த தோய் நாங் நோன் மலைத்தொடர் வழியாக ஆசிய நெடுஞ்சாலை 2 செல்கிறது. இம்மலைத்தொடர் அருகில் மியான்மர் நாட்டின் பன்னாட்டு எல்லையருகே உள்ள, இம்மலைத்தொடர், தங்க முக்கோணத்தில் அமைந்துள்ளது.[3] இம்மலைத்தொடரை தொலைவிலிருந்து காணும் போது நீண்ட கூந்தலுடைய தூங்கும் பெண் வடிவத்தில் காணப்படும். இம்மலைத்தொடரின் உயர்ந்த தோய் துங் கொடுமுடி, தூங்கும் பெண்னின் வயிற்றுப் பகுதி போன்று காணப்படும்.[1]

குகைகள்

தொகு

இம்மலைத்தொடரில் பல சுண்ணாம்புக் கரடு குகைகளும், அருவிகளும் உள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள தாம் இலுவாங் நாங் நோன் குகை (தாய் மொழி: ถ้ำหลวงนางนอน); சுண்ணாம்புக் கல்லால் ஆனது. இக்குகை 10 கிலோ மீட்டர் கொண்டது. மழைக்காலங்களில் இக்குகையில் மழைநீர் பெருமளவில் தேங்கி விடும். மழை நீர் வற்ற மாதக்கணக்காகும்.

23 சூன் 2018 அன்று தாம் இலுவாங் நாங் நோன் குகையைக் காணச் சென்ற 12 சிறுவர்களும், ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளரும், மழை வெள்ளத்தில் மாட்டிக் கொண்டனர்.[4]

பின்னர் தாய்லாந்து மற்றும் பன்னாட்டு குக்குளிப்பு வீரர்கள், குகை வெள்ளத்தில் சிக்கியவர்களை 10 சூலை 2018 அன்று பன்னாட்டு தாம் இலுவாங் குகை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர்.[5]

இதனையும் காணக

தொகு

காட்சியகம்

தொகு

மேற்கோற்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு