நசீர் ஜம்சீட்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

நசீர் ஜம்சீட் (Nasir Jamshed, பிறப்பு: திசம்பர் 6. 1989), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார்.[1] இவர் லாகூர் லயன்ஸ், லாகூர் ரீஜியன் புளூசு, நேஷனல் பேங்க் ஆஃப் பாகித்தான், டிரினிடாட் மற்றும் டொபாகோ அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். மேலும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பாக்கித்தான் அணியில் விளையாடினார்.[1]

நசீர் ஜம்சீட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நசீர் ஜம்சீட்
மட்டையாட்ட நடைஇடதுகை
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 160)சனவரி 21 2008 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா ஏ-தர முதல்தர இ20
ஆட்டங்கள் 12 50 40 13
ஓட்டங்கள் 353 1,532 2,808 252
மட்டையாட்ட சராசரி 35.30 34.04 45.29 21.00
100கள்/50கள் 0/4 3/8 11/9 0/1
அதியுயர் ஓட்டம் 74 128 182 58
வீசிய பந்துகள் 6
வீழ்த்தல்கள் 0
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 0/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 19/– 31/– 4/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், நவம்பர் 7 2009

சர்வதேச போட்டிகள்

தொகு

தேர்வுப் போட்டிகள்

தொகு

2013 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . பெப்ரவரி 1 இல் ஜோகன்ஸ்பர்க்கில்  நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது  தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.[1]

இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 15 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்தார். பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 65 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து டேல் ஸ்டெயினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.. இதில் 8 நான்குகளும் அடங்கும். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 211 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2] பெப்ரவரி 14 இல் கேப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இதன் முதல் ஆட்டப்பகுதியில் 23 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து பிலாண்டரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 4 பந்துகளில் ஓட்டங்கள் எதுவும் சேர்க்காமல் மீண்டும் பிலாண்டரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 4 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]

ஒருநாள் போட்டி

தொகு

2008 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . சனவரி 21 இல் கராச்சியில்   நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது  ஒருநாள் பன்னாட்டுத்  துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இதில் 48 பந்துகளில் 61 ஓட்டங்கள் சேர்த்து சிபாபாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 6 நான்குகளும், 3 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4]

2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.

மார்ச் 4, நெப்பியரில் ஐக்கிய அரபு அமீரக்கத்திற்கு எதிரான 25 போட்டியில் 12 பந்துகளில் 4 ஓட்டங்கள் சேர்த்து குரூக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]

2012 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . செப்டம்பர் 5 இல் துபாயில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதலாவது பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இதில் 10 பந்துகளில் 10ஓட்டங்கள் சேர்த்து ஹில்பென்ஹாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப்போட்டியில் 7 இலக்குகள் வித்தியாசத்தில் பாக்கித்தான் அணி வெற்றி பெற்றது.[6]

பன்னாட்டு இருபது20

தொகு

2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் இவரும் அப்துல் ரசாக்கும் இணைந்து 162 ஓட்டங்கள் சேர்த்தனர். இதன்மூலம் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த மூன்றாவது இணை எனும் சாதனை படைத்தனர்.[7][8][9]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Nasir Jamshed", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
  2. "1st Test, Pakistan tour of South Africa at Johannesburg, Feb 1-4 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
  3. "2nd Test, Pakistan tour of South Africa at Cape Town, Feb 14-17 2013 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
  4. "1st ODI (D/N), Zimbabwe tour of Pakistan at Karachi, Jan 21 2008 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
  5. "25th Match, Pool B (D/N), ICC Cricket World Cup at Napier, Mar 4 2015 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
  6. "1st T20I (N), Australia tour of United Arab Emirates at Dubai, Sep 5 2012 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-27
  7. "Records | Twenty20 matches | Partnership records | Highest partnerships by wicket | ESPN Cricinfo". Cricinfo. http://stats.espncricinfo.com/ci/content/records/305252.html. 
  8. "Group A: Lahore Lions v Quetta Bears at Lahore, May 26, 2009 | Cricket Scorecard | ESPN Cricinfo". Cricinfo. http://www.espncricinfo.com/ci/engine/match/405157.html. 
  9. "Razzaq century powers Lahore Lions to big win" (in en). Cricinfo. http://www.espncricinfo.com/pakistan/content/story/406084.html. 

வெளியிணைப்புகள்

தொகு

"Nasir Jamshed". Yahoo! Cricket.

ஜம்சத் ஈஎஸ்பிஎன் http://நசீர் ஜம்சத் ஈஎஸ்பிஎன்[தொடர்பிழந்த இணைப்பு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீர்_ஜம்சீட்&oldid=3316577" இலிருந்து மீள்விக்கப்பட்டது