நஞ்சன்கூடு வாழைப்பழம்

நஞ்சன்கூடு வாழைப்பழம் (Nanjanagud banana), நஞ்சன்கூடு ரசபலேஹன்னு என்று அழைக்கப்படும் வாழையானது இந்தியாவின் கர்நாடகாவின் மைசூர் மாவட்டம் மற்றும் சாமராசநகர் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைகின்ற வாழைப்பழமாகும். இதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்திற்காகப் பிரபலமானது. நஞ்சன்கூடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கருப்பு களிமண் வண்டல் உப்பு மண் இதன் சுவை மற்றும் நறுமணத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட புவியியல் அடையாளத்தை இப்பழத்திற்கு அளித்துள்ளது, எனவே இப்போது இந்திய அரசாங்கத்தின் புவிசார் குறியீடு கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.[1][2][3]

நஞ்சன்கூடு வாழைப்பழம்
நஞ்சன்கூடு ரசபலேஹன்னு தனித்துவமான வாழைப்பழம்
வேறு பெயர்கள்நஞ்சன்கூடு ரசபலேஹன்னு
இடம்மைசூர் & சாமராசநகர்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது2005
அதிகாரப்பூர்வ இணையதளம்ipindia.nic.in

தனித்துவம்

தொகு

நஞ்சன்கூடு மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் காணப்படும் கருப்பு களிமண் வண்டல் உப்பு மண்ணின் தன்மை காரணமாகத் தனிப்பட்ட சுவை மற்றும் மணத்தினை இம்மண்ணில் விளையும் இந்த வாழைப்பழம் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நஞ்சன்கூடு தனித்த கரிம சாகுபடி முறையும் இதில் பங்கு வகிக்கின்றது. இந்த வாழைப்பழத்தினை மற்ற இடங்களில் பயிரிட்டால், வாழைப்பழத்தில் கட்டியை உருவாகி இதன் நறுமணத்தில் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பண்புகளின் தனித்துவமானது இதன் மரபணு அமைப்பின் காரணமானது எனக் கூறப்படுகிறது.[2]

சாகுபடி

தொகு

நஞ்சன்கூடு வாழைப்பழம் வெப்பமண்டல தாவரமாகும். இது 30N முதல் 30S நிலநேர்கோடு பகுதிகளில் மட்டுமே வளரக்கூடியது. வறண்ட மற்றும் ஈரப்பதமான காலநிலை இதன் வளர்ச்சிக்குச் சிறந்ததாக என்று கூறப்படுகிறது.[2]

புவிசார் குறியீடு

தொகு

கர்நாடக அரசாங்கத்தின் தோட்டக்கலைத் துறை நஞ்சன்கூடு வாழைப்பழத்தை 2002ஆம் ஆண்டில் புவியியல் குறியீட்டுப் பொருட்கள் சட்டம், 1999ன் கீழ் பதிவு செய்ய முன்மொழிந்தது. காப்புரிமை, வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகள், சென்னை அலுவலகத்தில் பதிவு செய்தது. இதன் மூலம் மைசூர் விவசாயிகள் தாங்கள் உற்பத்திச் செய்யும் வாழைப்பழங்களை, நஞ்சன்கூடு வாழைப்பழங்கள் என்று விற்பனைச் செய்யும் உரிமை பெறுவார்கள்.[2] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2005இல் நஞ்சன்கூடு வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. 

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சன்கூடு_வாழைப்பழம்&oldid=3856547" இலிருந்து மீள்விக்கப்பட்டது