நதிரா சுல்தான்
நதிரா சுல்தான் (Nadira Sultan) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக பாட்டியாலிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4] [5] [6] [7]
நதிரா சுல்தான் | |
---|---|
உத்தரப்பிரதேசத்தின் 18 ஆவது சட்டசபையின் சட்டமன்ற உறுப்பினர், | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2022 | |
முன்னையவர் | மம்தாஷ் ஷகியா |
தொகுதி | பாட்டியாலி சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 நவம்பர் 1956 சகாவர்,(கன்ஷி ராம் நகர் மாவட்டம்) |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
துணைவர் | டாக்டர் அப்துல் அபீசு கான் |
உறவுகள் | முகம்மது ஆசம் கான் (மாமா) முகமது சமீர் கான் (மாமா) அகமது லூத் கான்(தாய் வழி மாமா) |
பிள்ளைகள் | அப்துல் சலீம் கான் (மகன்) டூபா கான் (மகள்) |
பெற்றோர் | முசீர் அகமது கான் (தந்தை) சாது பாத்திமா கான் (தாய்) |
வாழிடம்(s) | சகாவர், ராம்பூர் மற்றும் தில்லி |
தொழில் | அரசியல்வாதி, உழவர் |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுநாதிரா சுல்தான் நவம்பர் 11 அன்று சகாவர் டவுனில் அரசியல்வாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் மறைந்த முஷீர் அகமது கான் மற்றும் மறைந்த சாத் பாத்திமா கான் ஆகியோரின் ஒரே குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை எத்தா மற்றும் காஸ்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலிருந்து இவர் இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மாமாவான மறைந்த முகமது ஜமீர் கான் சட்டமன்ற உறுப்பினராகவும், இவரது தாய்வழி மாமா மறைந்த அகமது லூது கான் உத்தரபிரதேசத்தில் அமைச்சராகவும் இருந்தார். இவர் ராம்பூரைச் சேர்ந்த டாக்டர் அப்துல் அபீசு கான் என்பவரை மணந்தார். அப்துல் அபீசு கானின் மாமா முன்னாள் அமைச்சர் முகமது ஆசம் கான் என்பவர் ஆவார்.
அரசியல் வாழ்க்கை
தொகு2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் பாட்டியாலி வேட்பாளராக நாதிரா சுல்தான் போட்டியிட்டு, பாரதிய ஜனதா கட்சியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினரும் மூன்று முறை சட்டமன்ற உறுப்பிராக இருந்த மம்தேசு சக்யாவை தோற்கடித்தார். 27 டிசம்பர் 2022 அன்று, உத்தரபிரதேசத்தில் "பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான கூட்டுக் குழு" உறுப்பினர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uttar Pradesh Election Results 2022". பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
- ↑ "ALL WINNERS LIST UTTAR PRADESH ASSEMBLY ELECTIONS 2022". பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
- ↑ "Article on Family Detail 1". Archived from the original on 29 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 28 January 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Report on History". பார்க்கப்பட்ட நாள் 9 February 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Know my Neta". பார்க்கப்பட்ட நாள் 1 February 2022.
- ↑ "Joining Date". பார்க்கப்பட்ட நாள் 16 March 2019.
- ↑ "Social Media". பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.