நந்தி மலை

கர்நாடக மாநிலத்தில் சிக்கபள்ளாபூர் அருகில் அமைந்துள்ள ஒரு மலை
(நந்திமலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)


நந்தி மலை இந்தியா, கர்நாடகத்தின் சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு மலை. தென் பெண்ணை , பாலாறு , ஆர்க்காவதி ஆறு போன்ற ஆறுகள் இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. சிக்கபள்ளாபூர் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்மலை, பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

நந்தி மலை

நந்தி

நந்தி மலை தோற்றம்
நந்தி மலை தோற்றம்
நந்தி மலை
அமைவிடம்: நந்தி மலை, கர்நாடகா , இந்தியா
ஆள்கூறு 13°23′11″N 77°42′03″E / 13.3862588°N 77.7009344°E / 13.3862588; 77.7009344
நாடு  இந்தியா
மாநிலம் கர்நாடகா
மாவட்டம் சிக்கபள்ளாபூர்
அருகாமை நகரம் பெங்களூர்
ஆளுநர்
முதலமைச்சர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,478 மீட்டர்கள் (4,849 அடி)

பெயர்க்காரணம்

தொகு
 
நந்தி மலையில் உள்ள போக நந்தீசுவரர் கோயில்

நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல கதைகள் உள்ளன. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்று கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் சோழர்கள் கட்டிய போக நந்தீசுவரர் கோவில் உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.[1]

குறிப்புகள்

தொகு
  1. "Welcome to Nandi Hills". Archived from the original on 2010-06-18. பார்க்கப்பட்ட நாள் 2011-05-10.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்தி_மலை&oldid=3560008" இலிருந்து மீள்விக்கப்பட்டது